குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய 5 பழங்களும் காய்கறிகளும்

  0

  குளிர்காலம் வந்தாலே பலவகை புதிய பழங்களும் காய்கறிகளும் சந்தையில் கிடைக்க ஆரம்பித்துவிடும்.  காய்கறி/பழக்கடைக்குப் போனாலே, பளீரென்ற பலவகை வண்ணத்தில் காய்கறிகளும் பழங்களும் நம் கண்ணுக்குத் தெரியும். குளிர்காலத்திற்கே உரிய பருவகாலப் பழவகைகளும் காய்கறிகளும் பல வகைகளில் கிடைப்பதால் உங்களது உடல் ஆரோக்கியத்துக்கு அதிகளவில் ஆதாயம் தருபவை எவை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடிக்க தேவையான ஐந்து குளிர்காலப் பழங்கள் மற்றும் ஐந்து குளிர்காலக் காய்கறிகள் பற்றி இங்கு விவரமாகக் காண்போம்.

   Fruits and Vegetables to Consume in Winter

  குளிர்காலத்தில் உண்ண வேண்டிய ஐந்து முக்கியப் பழவகைகள்

  1. ஆப்பிள்

  ‘ஒரு நாளுக்கு ஒரு ஆப்பிளைச் சாப்பிட்டால், மருத்துவரிடம்  போக வேண்டிய அவசியமே ஏற்படாது’ என்று புகழ்பெற்ற ஒரு பழமொழி சொல்கிறது. ஆப்பிளை உண்டால் கிடைக்கக்கூடிய ஆதாயங்களை நன்கு கவனித்தால், இது உண்மை என்பது நமக்கே பு���ியும். நரம்பு மண்டலச் செயல்பாட்டிற்கு ஆப்பிள் பேருதவி. இதிலுள்ள ஆண்டி-ஆக்சிடன்ட்டுகள் நியூரான்களின் செல்கள் இறப்பதைத் தடுப்பதால் நரம்பு மண்டலச் செயல்பாடு மேம்படுகிறது. ஆப்பிளை உண்பதால் நரம்புமண்டல ஆரோக்கியம் மேம்பட்டு இதனால் வாழ்நாளின் இறுதிப்பகுதியில் அல்ஜூமர் நோய் வரும் அபாயமும் தவிர்க்கப்படுகிறது. இதைத் தவிர, ரத்தம் கட்டிப்போய் பக்கவாதம் வரக்கூடிய அபாயத்தையும் நீரிழிவு நோய் வரும் அபாயத்தையும் ஆப்பிள் குறைக்கிறது.

  2. திராட்சை

  திராட்சை ஆண்டுதோறும் கிடைக்கக்கூடிய ஒரு பழம். ஆனால், குளிர்காலத்தில் உண்ணும்போதுதான் இப்பழத்தின் உண்மையான ஆதாயங்களை நம்மால் பெற முடியும். ஆண்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகமாக உள்ளதால் சருமநோய் அண்டாமல் தடுக்கவும் திராட்சை உதவும். கண்கள், முட்டிகளுக்கும் திராட்சை வலிமை தருகிறது. ஆகவே, முதியோர்கள் இதைத் தவறாமல் உண்ண வேண்டும்.

  3. ஆரஞ்சு

  இந்தியாவில் குளிர்காலத்தில் பரவலாகக் கிடைக்கும் ஒரே பழம் ஆரஞ்சுப் பழமாகத்தான் இருக்க முடியும். இவற்றை எடுத்துச் சென்று நாம் வேலை செய்யும் இடத்தில் அமர்ந்தும் உண்ணலாம். குளிர்காலத்தில் ஆரோக்கியத்தைப் பராமரிக்க மிகவும் தேவையான வைட்டமின் சி இதில் அதிகமாக உள்ளது. ஆரஞ்சுப் பழத்தை சாப்பிடுவதில் இன்னொரு முக்கிய ஆதாயமும் உள்ளது. தொடர்ந்து ஆரஞ்சைச் சாப்பிட்டுவந்தால் புற்றுநோய் உண்டாகும் அபாயம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருள்களின் எதிர்மறை விளைவை மட்டுப்படுத்தவும் ஆரஞ்சு உதவுகிறது.

  4. மாதுளம்பழம்

  குளிர்காலத்தில் நாம் செய்யும் ஆரோக்கியமான தேர்வு என்றால் அது மாதுளம்பழம் உண்பதே. உடலின் இரத்த அழுத்த மட்டங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஹைப்பர்டென்ஷன் நிலைக்கு நாம் செல்வதை மாதுளம்பழம் தடுக்கிறது. உடலுக்குத் தேவையான செரிமான சக்தியைத் தரும் நார்ச்சத்து மாதுளம்பழ்த்தில் அதிகம் உள்ளது. இறுதியாக, மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டால் மாதுளம்பழச்சாறை தொடர்ந்து உண்டு வந்தால் அவ்வலி சரியாகி விடும்.

  5. கொய்யாப்பழம்

  ஆப்பிள் போன்றே கொய்யாப்பழமும் ஆண்டுதோறும் தங்குதடையின்றி கிடைக்கக்கூடிய ஒரு பழம். ஆயினும் குளிர்காலத்தில் இதை உண்ணும்போதுதான் இதிலிருந்து அதிகபட்ச ஆதாயம் தரக்கூடிய பல விளைவுகளை நாம் பெற முடியும். இனப்பெருக்க சக்தியைப் பெருக்க கொய்யாவிலுள்ள ‘ஃபோலேட்’ மிகவும் உதவுகிறது. தைராய்டு சுரப்பிகளின் செயல்பாட்டைச் சீரமைப்பதற்கும் கொய்யாப்பழம் தேவைப்படுகிறது. உடலில் ரத்தகாயம் ஏற்பட்டால் அது ஆறுவதற்குத் தேவையான கிருமிநாசினியும் இப்பழத்தில் உள்ளது. அடிபட்ட இடத்தில் கொய்யாவைத் தடவினால் திசுக்கள் சீக்கிரம் குணமாகி விடும். நார்ச்சத்து அதிகமுள்ள கொய்யாப்பழம் மலச்சிக்கலுக்கும் பெருமருந்தாக உதவுகிறது.

  குளிர்காலத்தில் உண்ண வேண்டிய ஐந்து முக்கியக் காய்கறிகள் 

  1. கிழங்கு வகைகள்

  கிழங்கு வகைகள் ஆண்டுதோறும் சந்தையில் கிடைக்கின்றன; எனினும் அவற்றின் சிறந்த வகைகள் குளிர்காலத்தில்தான் கிடைக்கும். கிழங்கிலுள்ள ஒரு தனிமம் இதயநோய், குடல்நோய் வராமல் தடுக்கிறது. இவற்றால் கிடைக்கும் மற்ற ஆதாயங்களைத் தவிர, மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டட்தை மேம்படுத்தவும் கிழங்குகள் உதவுகின்றன. இவற்றில் குறைந்த அளவு மட்டுமே கலோரிகள் உள்ளதால் குளிர்காலத்தில் இவற்றை உண்பது பொருந்தும்; மேலும் இவற்றில் சத்துக்கள் அடர்த்தியாக உள்ளன. இதனால் குளிர்காலத்தில் சில்லென்ற தட்பவெப்பநிலையில் உண்ண ஏதுவாக கிழங்குகள் இயற்கையாகவே அமைந்துள்ளன. 

  2. கேரட்டுகள்

  பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கும் சில காய்கறிகளுள் கேரட்டும் ஒன்று. இதில் வைட்டமின்களும் சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. கேரட்டைத் தொடர்ந்து உண்டுவந்தால் உடலில் ஏற்படும் வைட்டமின் ‘B’, ‘C’, ‘D’, ‘E’ மற்றும் ‘K’ குறைபாடு தொடர்பான நோய்களைச் சீக்கிரமாகக் குணப்படுத்த முடியும். முக்கிய வைட்டமின்கள் தவிர, கேரட்டில் ஃபோலேட்டுகள், இரும்பு, தாமிரம், பொட்டாசியம் மற்றும் பிற தாதுக்களும் உள்ளன. கேரட்டால் உண்டாகும் ஆரோக்கியம் தொடர்பான ஆதாயங்கள் பல. உதாரணமாக, தினமும் கேரட்டை உண்டுவந்தால் கண்களின் பார்க்கும் திறன் மேம்படுவதுடன் புற்றுநோய்க்கெதிரான நோயெதிர்ப்பு சக்தி உருவாகி, அது தாக்காமல் பாதுகாப்புடன் இருக்கலாம். கேரட்டை உண்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

  3. பட்டாணிகள்

  பல்வேறு ஆரோக்கிய ஆதாயங்களைத் தரும் பட்டாணி இன்னொரு முக்கியமான குளிர்காலக் காய்கறி ஆகும். இத்துடன் கிடைக்கும் உபரியான ஆதாயம் என்னவெனில் பெரும்பாலான இந்திய உணவுகளில் இதைச் சுலபமாகச் சேர்த்து விடலாம். வைட்டமின் ‘B’, வைட்டமின் ‘K’ ஆகிய இரண்டும் பட்டாணியில் அதிக அளவில் உள்ளன. வீக்கத்திற்கெதிராகவும் ஆண்டி-ஆக்சிடன்ட்டாகவும் உடலுக்குள் பட்டாணி வேலை செய்கிறது. இதைப் பச்சையாகவோ (அ) சமைத்த பின்போ உண்ணலாம்; எப்படி உண்டாலும் இது உண்பவருக்குத் தீங்கிழைக்காது. உடல் எடை அதிகரிப்பதையும் அல்ஜீமர் நோய் ஏற்படாமலும் தடுப்பதும் இதன் பிற ஆதாயங்களாகும். இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் பட்டாணி உதவும்.

  4. கீரை

  கீரைதான் இந்திய வீடுகளில் மிகப்பரவலாகப் பயன்படுத்தப்படும் இலையுடைய காய்கறி. இதில் உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும் பல அவசியமான வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளன. கீரையைச் சாப்பிடுவதால் புற்றுநோய், ஆஸ்துமா ஆகியவை தாக்காமல் பாதுகாக்கலாம். இரத்த அழுத்தத்தையும் கீரை மிகவும் குறைப்பதால் ஹைப்பர்டென்ஷனால் அவதிப்படுபவர்களுக்கு இது பேருதவி செய்யும். இறுதியாக, கீரை உண்பதால் சருமம் ஆரோக்கியமாக இருப்பதுடன் தலைமுடியும் நன்றாக வளர்கிறது. 

  5. (சிவப்ப முள்ளங்கி)

  குளிர்கால மாதங்களில் கிடைக்கும் உச்சபட்ச உணவு வகைகளில் ஒன்றாக டர்னிப் கருதப்படுகிறது. டர்னிப்பின் பச்சைப் பகுதி முழுதும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இதனால் நுரையீரல் வீக்கம், எம்பைசெமா ஆகியவை கட்டுப்படுத்தப்படுவதுடன் நுரையீரலும் நலம் பெறுகிறது. டர்னிப் உண்பதன் இன்னொரு ஆதாயம் என்னவெனில் இது சிலரிடத்தில் சிறுநீரகக் கற்களையும் கரைத்துவிடுகிறது. பெரிய அளவிலான கற்கள் இல்லையெனில், தொடர்ந்து டர்னிப் உண்டுவந்தால் சிறுநீரகக் கற்கள் பிரச்சினையைச் சுலமாகச் சமாளித்துவிடலாம். 

  மேற்சொன்ன பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தவிர குளிர்காலத்தில் நன்கு வளரும் பல உற்பத்திப்பொருட்கள் நம் நாட்டிலுள்ளன. இவற்றில் ஒவ்வொரு பழத்திலும் காய்கறியிலும் உடல் ஆரோக்கியத்திற்கான ஆதாயங்கள் பலவும் ஒளிந்துள்ளன. எனவே, உங்களது காய்கறி கடைக்காரரிடம் செய்று அவரிடம் உள்ள பழங்களையும் காய்கறிகளையும் பாருங்கள். இப்பருவகாலத்தில் எதை அவர் விற்கிறார் எனப்பார்த்து இவற்றில் எதை வேண்டுமானால் வாங்கவும். 

  எல்லா பருவகாலப் பயிர்களும் (பழங்கள், காய்கறிகள்) பொதுவாக குறிப்பிட்ட அந்தப் பருவகாலத்துக்கான தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யக்கூடியவை என்பதை நினைவில் கொள்ளவும். உதாரணமாக, ஆரஞ்சுப்பழத்தால் கிட்ட்டும் ஆதாயங்கள் கோடைக்காலத்தை விட குளிர்காலத்துக்கு அதிகம் பொருந்தும். முடிந்தால் தினந்தோறும் பழசாலட் தயாரித்து பருவகாலப் பழங்களிடமிருந்து கிடைக்கும் அனைத்து ஆதாயங்களையும் பெற்றுக்கொள்ளவும். அதேபோல், எந்த உணவைச் சமைத்தாலும் பருவகாலக் காய்கறிகளயும் எப்படியாவது சேர்த்துக்கொண்டே சமைக்க முயற்சி செய்யவும். இவ்வாறு செய்து வந்தால் குளிர்காலத்தில் இவ்வுணவுகளிடமிருந்து கிட்டும் ஆதாயங்கள் எதையுமே நீங்கள் இழக்காமலிருக்க இது ஒரு சிறப்பான உத்தியாக இருக்கும்.

  Dr Vivek Baliga
  Dr Vivek Baliga is a consultant cardiologist and physician practicing at Baliga Diagnostics, Bangalore. He is the director of HeartSense (http://heartsense.in), an online patient education initiative. He has a special interest in diabetes and cardiovascular disease, and is an expert in the management of lipid disorders and heart failure. In his spare time, he enjoys running and spending time with his wife and son.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.