குளிர்கால உலர் சருமத்திற்கான வீட்டு வைத்தியக் குறிப்புகள்

  0

  மிகவும் குளிராக இருக்கிறது, உஷணம் வேண்டி நீங்கள் வெய்யிலில் நின்று கொண்டிருந்தாலும் உங்கள் சருமத்தில் பாதிப்பையும், கோடுகளையும் உணரலாம். இது உலர் சரும பிரச்சனை என எல்லோருக்கும் தெரியும். மருத்துவ உலகில் செரோசிஸ் என குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலனோர், குறிப்பாக குளிர்காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்னை இது. சருமம் உலர்ந்து போக முக்கிய காரணம், சுற்றுச்சூழல் மாற்றங்களாகும். இந்த மாற்றம் குளிர்கால உலர் சருமம் எனப்படுகிறது. சருமம் போதிய ஈரப்பதம் உற்பத்தி செய்யாததால் உண்டாகும் நிலை.

  Dry Skin in Winter

  உலர் சருமம் என்றால் என்ன?

  உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் தொடர்ந்து மாறிக்கொண்டே துடிப்பான அமைப்பாக நம்முடைய உடல் இருக்கிறது. அதே போல, பருவநிலை மாறும் போது, அந்த மாற்றத்திற்கு ஏற்ப உடல் மாறிக்கொள்கிறது. இதன்படி, குளிர்கால மாற்றத்தினால் நிகழும் விளைவாக, பெரும்பாலும் உலர் சருமம் அமைகிறது.  

  பொதுவாகப் பார்த்தால், சருமத்தில் ஈரப்பதம் இல்லாமல் போகும் போது, சருமம் உலர்ந்து விடுகிறது. எளிமையாக சொல்வது என்றால் கோடைக்காலத்தில் வியர்வை அதிகமாக இருப்பது உங்கள் சருமத்திற்கு நல்லது. இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது,. கடும் குளிர்காலத்தில், அதிகம் விளையாடினால்கூடக் குறைவாகவே வியர்க்கும். எனவே உங்கள் சருமத்திற்குப் போதிய ஈரப்பதம் கிடைகாமல் அது ஊட்டச்சத்து பெறாது. இதனால் உலர் சருமம் உண்டாகும்.

  குளிர்காலத்தில் உலர் சருமம் ஏற்படுவதற்கான காரணங்களில் சில, குளிர்கால வெப்பம், சூடான நீரில் குளியல், உலர் தன்மை அளிக்கும் சோப் ஆகியவை ஆகும். உங்களுக்கு தேவை எல்லாம் சருமத்தை மாய்ஸரைஸ் செய்யக்கூடிய நல்ல கிரீம் ஆகும்.  

  உலர் சருமம் பற்றி அறிய வேண்டியவை

  உலர் சருமம் சுற்றுச்சூழல் மாற்றங்களால் உண்டாகிறது என்பது நமக்கெல்லாம் தெரியும், ஆனால் இதை கவனிக்காமல் விட்டால் உலர் சருமம் உங்கள் ஆளுமையை எப்படி பாதிக்கும் என்பது தொடர்பான ஆழமான புரிதல் வேண்டும். உலர் சருமம் தொடர்பாக கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய சில தகவல்கள்.

  • தினமும் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது, உலர் சருமத்திற்கான இயற்கையான தீர்வாகும். நீர்த்தன்மை குறைவது உலர் சருமம் ஏற்படுவதற்கான முக்கிய காரணம்.
  • 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 75% பேர் உலர் சரும பாதிப்புகு உள்ளாக கூடியவர்கள்.  
  • தேன் சாப்பிடுவது, சருமத்தில் உள்ள மாசுகளை எதிர்ப்பதற்கான இயற்கை வழி.  
  • உங்கள் முகம் மீது பாலை பூசிச்கொண்டு, பத்து நிமிடம் உலர அனுமதிப்பது, உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். தினமும் இதை இரண்டு முறை செய்ய வேண்டும்.
  • பாலில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு பிழிந்து, முகத்தில் பூசிக்கொள்ளவும். குளிர்காலத்தில் உலர் சருமத்தை எதிர்கொள்ளச் சிறந்த வழி இது.
  • 10 நிமிடத்திற்கு மேல் வெந்நீரில் குளித்தால் உலர் சருமம் உண்டாகும்.  
  • 6 முதல் 8 மணி நேரம் குறுக்கீடு இல்லாத தூக்கம், பருக்கள், சுருக்கம் மற்றும் உலர் சருமம் போன்றவற்றிலிருந்து சருமத்தைக் காக்கும். எனவே நல்ல தூக்கம் ஆரோக்கியமானது.  

  உலர் சரும அறிகுறிகள்

  உலர் சருமத்தை எல்லோரும் அடையாளம் காணலாம். எனினும் உலர் சரும பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்காமல் இருப்பதற்கு முன் கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் இருக்கின்றன. வயது, பருவநிலை, உங்கள் மருத்துவ நிலை என உலர் சருமம் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. உங்கள் உலர் சருமத்தின் தீவிரத்தை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் இதோ:

  • முதலில் உங்கள் சருமம் கடினமாகி, அதன் பொலிவை இழக்கும்.  
  • உங்கள் சருமம் இன்னும் கடினமாவது போல உணரலாம்.
  • தீவிரமான அரிப்பு
  • உங்கள் சருமம், பிளவு பட்டு உதிரத்துவங்கலாம்.
  • சருமத்தில் வெடிப்புகள் ஏற்பட்டால்,
  • சருமம் சிவப்பாகிறதா,
  • வெடிப்புகள் உங்கள் சருமத்தை இரத்தம் சிந்த வைக்கிறதா எனப் பார்க்கவும்.

  குளிர்கால உலர் சரும காரணங்கள்

  உலர் சருமத்திற்குக் குளிர்காலம்தான் முக்கியக் காரணம் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் குளிர்காலத்தில் உலர் சருமம் ஏற்பட வேறு சில காரணங்களும் இருக்கின்றன. நம்மில் பலரும் உலர் சருமம் அத்தனை ஆபத்தானது அல்ல என் நினைக்கிறோம். எனினும் சில நேரங்களில் இது ஆபத்தாக மாறலாம். உலர் சருமம், இட்சியோசிஸ் எனும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் சருமம் பாம்பு தோல் போல ஆகிவிடும். இதனால் சமூகத்தில் உங்கள் தன்னம்மிக்கை பாதிக்கப்படலாம். உலர் சருமத்தை கவனிக்காமல் விட்டால் இந்த பாதிப்பு ஏற்படலாம்.  

  1. வயது காரணமாக உலர் சருமம் ஏற்படலாம்

  உலர் சருமம் ஏல்லோரையும் பாதித்தாலும், 65 வயதுக்கு மேல் உள்ளவர்களில் 75 % பேர் இதனால் பாதிக்கப்படலாம். உலர் சருமம் உண்டாக வயோதிகம் முக்கிய காரணமாக இருக்கிறது. காரணம், சரும துளைகள் முன்பை விட குறைவான எண்ணெய் உற்பத்தி செய்வது தான். இது நீங்கள் நினைப்பதைவிட விரைவாக உலர் சருமத்தை உண்டாக்குகிறது.  

  2. மருத்துவ வரலாறு

  உங்களுக்கு எக்சிமா (eczema) அல்லது வேறு ஏதேனும் அலர்ஜி கடந்த காலத்தில் இருந்தால், நீங்கள் உலர் சரும பாதிப்பிற்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் சரும பாதிப்பிற்கான முதல் அறிகுறியாக இது அமையலாம். ஒரு சில நேரங்களில் உலர் சருமம் பரம்பரையாகவும் ஏற்படலாம். உங்கள் சருமத்தில் ஏதேனும் மாற்றத்தை உணர்ந்தால் உங்களுக்குத் தேவை மாய்ஸ்சரைசிங் கிரீம் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி..  

  3. பருவ காலங்கள்

  உலர் சருமத்திற்கான முக்கியக் காரணம், குறிப்பிட்ட பருவமாகும். இது பெரும்பாலும் குளிர்காலத்தில் நிகழ்கிறது. குளிர்காலத்தில் வியர்வை உண்டாவதில்லை என்பதையும், இதனால் உங்கள் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு காரணம் பனிமூட்டமான சூழல் சூரிய ஒளி உங்கள் மீது படுவதை தடுத்து விடுகிறது. எனவே சருமத்தில் இயற்கை எண்ணெய்கள் இல்லாமல் அது உலர் தன்மை பெற்றுவிடுகிறது. 

  4. வெந்நீர் குளியல்

  தினமும் 10 நிமிடத்திற்கு மேல் வெந்நீர் குளியல் எடுத்துக்கொண்டால், உங்கள் சருமம் பாதிக்கப்படும். இது குளிர்காலத்தில் தான் நிகழ்கிறது. எனவே வெந்நீர் குளியல் எடுத்துக்கொள்ளும் நேரத்தை கவனியுங்கள். அடிக்கடி 10 நிமிடத்திற்கு மேல் வெந்நீர் குளியல் எடுத்துக்கொண்டால் சிக்கல் ஆகலாம். குளிர்காலத்தில் உங்கள் பையில் மாய்ஸ்சரைசிங் கிரீம் வைத்திருக்கவும்.  

  குளிர்காலத்தில் உலர் சருமத்திற்கான சிகிச்சைகள்

  மாய்ஸ்சரைசிங் ஏற்றது என்றாலும் வேறு சில வீட்டு வைத்தியங்களையும் நீங்கள் நாடலாம். மேலும் மாய்ஸ்சரைசிங் கிரீம் இல்லாத போது, சரும பாதிப்பை குறைக்க உதவும் எளிய வழிகளை அறிந்து வைத்திருப்பது நல்லது. சருமத்தில் அரிப்பு ஏற்படாமல் தடுக்க உதவும் எளிய குறிப்புகள் இதோ:

  1. உங்கள் சருமம் மீது கொஞ்சம் ஆலிவ் ஆயில் தடவிக்கொண்டு அதை பின்னர் ஈரத் துணியால் துடைக்கவும். இதன் பிறகு சருமம் பொலிவு பெறுவதையும், ஜொலிப்பதையும் பார்க்கலாம்.  
  2. வீட்டிலேயே அவகாடோ பேசியல் மாஸ்க் செய்துகொள்வது, உங்கள் சருமத்தை மென்மையாக்கி, உலர் சருமத்தைத் தடுக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், பாதி அவகாடோ எடுத்துக்கொண்டு, அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும். பின் இந்த கலவையை முகத்தில் தடவிக்கொண்டு 20 நிமிடங்கள் உலர வைக்கவும். இது சருமத்தை மாய்ஸ்சரைஸ் செய்து மின்ன வைக்கும்.  
  3. இன்னொரு வீட்டு வைத்தியம், தூங்குவதற்கும் முன் சருமத்தில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்வது. தேங்காய் எண்ணெய் அறை வெப்ப நிலையில் அடர்த்தியாகிவிடுவதால் இது மிகச்சிறந்த மாய்ஸ்சரைசிங் கிரீமாக அமையும்.
  4. பாலில் லாக்டிக் அமிலம் இருப்பதாலும் புண்களை எதிர்க்கும் தன்மை இருப்பதாலும் முகத்தில் பால் தடவிக்கொள்வது, உங்கள் சருமம் பாதிப்படைவதில் இருந்து காக்கும்.
  5. சூரிய ஒளி பாதிப்பு அல்லது சருமத்தில் வெடிப்பு இருந்தால் ஆலோவேரா ஜெல்லைப் பயன்படுத்தலாம்.
  6. முகத்தை சூடான நீரில் அல்லாமல் வெதுவெதுப்பான நீரில் கழுவிக்கொள்ளவும்.
  7. நிறைய தண்ணீர் குடிக்கவும். நிறைய தண்ணீர் குடிப்பது அதிகமாக வியர்வை வெளியேற வைத்து சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கும்.  
  8. வாரத்திற்கு இரண்டு முறையேனும் மீன் சாப்பிடுவது உலர் சருமத்தை குணமாக்கும். மீனில் உள்ள ஒமேகா 3 பேட்டி ஆசிட் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக்கும்.
  9. டியோ சோப் பயன்படுத்தினால் அதை மாற்றவும். டியோ சோப் உங்கள் சருமத்தை பாதிக்கும்.
  10. உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இது சரும துளைகளை திறந்து நச்சுகளையும் மாசுகளையும் அகற்றும். தினமும் படுக்கச்செல்வதற்கு முன் இதை செய்யவும்.
  11. சின்னமோன் தூள் மற்றும் தேன் கலந்து உங்கள் முகத்தில் பூசிக்கொள்ளலாம். இதன் பிறகு 15 நிமிடங்கள் கழித்து கழுவிக்கொள்ளலாம். இதுவும் உலர் சருமத்தை எதிர்கொள்ள உதவும்.  
  12. எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து முகத்தில் பூசிக்கொண்டு, 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவிக்கொள்ளவும். இதுவும் உலர் சருமத்தை குணமாக்குவதை உணரலாம்.
  13. வெள்ளரிக்காயைச் சிறு துண்டுகளாக்கிக்கொண்டு, மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். அடுத்ததாக கொஞ்சம் ஆலோவேரா ஜெல் அல்லது யோகர்ட் வேண்டும். இதையும் நன்றாக கலந்து, முகத்தில் பூசிக்கொண்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவிக்கொள்ளவும்.
  14. இரண்டு முட்டைகளை எடுத்து மஞ்சள் கருவை தனியே பிரிக்கவும். மஞ்சள் கருவை மட்டும் எடுத்து அதை கலந்து முகத்தில் பூசிக்கொள்ளவும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவிக்கொள்ளவும்.
  15. உங்களுக்கு உலர் சருமம் என்றால், நீங்கள் வாழைப்பழ பேஷியல் பயன்படுத்தலாம். ஸ்பூன் கொண்டு இரண்டு வாழைப்பழங்களை நன்றாக மசித்து, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்துமுகத்தில் பூசிக்கொண்டு 20 நிமிடங்கள் அப்படியே இருக்கவும். அதன் பிறகு குளிர்ந்த நீரால் முகம் கழுவிக்கொள்ளவும்.  
  16. கோகோ பட்டரை சூடாக்கி உங்கள் உள்ளங்கையில் வைத்திருக்கவும். பின்னர் அதை முகத்தில் மெல்ல பூசிக்கொள்ளவும். இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். இது உலர் சருமத்தை உடனே குணமாக்கும்.  
  17. 5 ஸ்பூன் தேன், 5 ஸ்பூன் தூள் மற்றும் 2 ஸ்பூன் மாவு கொண்டு சாக்லெட் பேக்கும் செய்து பயன்படுத்தலாம். இந்த கலவையை முகத்தில் பூசிக்கொண்டு 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவிக்கொள்ளவும்.  
  18. வீட்டில் கிரீன் டீ இருந்தால், அதை எடுத்து ஏதேனும் கிரீமுடன் கலந்து முகத்தில் பூசிக்கொண்டு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவிக்கொள்ளவும்.
  19. உங்கள் வீட்டு தோட்டத்தில் வேப்ப மரம் இருந்தால், அதன் இலைகளை எடுத்து பொடியாக்கி, கொஞ்சம் மஞ்சள் மற்றும் தேனில் கலந்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து முகம் கழுவவும். 
  20. உலர் சருமத்தில் இருந்து விடுபட இஞ்சியும் கைகொடுக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இஞ்சி சாறு எடுத்து, தேன் மற்றும் பன்னீர் கலந்து, விரல்களில் எடுத்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவிக்கொள்ளவும்.  

  குளிர்காலத்தில் உலர் சருமத்தைத் தவிர்க்க செய்ய வேண்டியவை

  உலர் சருமம் அரிப்பை உண்டாக்கலாம். இதனால் வலி உண்டாகலாம். சில நேரங்களில் இரத்தமும் வரலாம். உலர் சருமத்தை சமாளிக்க அல்லது உலர் சருமத்தை தவிர்ப்பதற்கான வழிகள் இதோ:  

  • நெந்நீரில் குளிப்பதாக இருந்தால் 10 நிமிடத்திற்கு மேல் குளிக்க வேண்டாம்.  
  • உலர் சருமம் இருப்பதை மறக்க வேண்டாம். இது இட்சியோசிஸ் உண்டாக்கலாம்.  
  • முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும்.
  • உங்கள் சருமத்தை உலர் தன்மை பெற வைக்கும் சோப்களை தவிர்க்கவும்.
  • மாய்ஸ்சரைசிங் கிரீமை தவிர்க்கவும்.
  • படுக்கச் செல்லும் முன் சருமத்தின் மீது தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளவும்.  
  • நிறைய தண்ணீர் குடிக்கவும்.
  • வெளி விளையாட்டுகளில் ஈடுபடவும். இது வியர்க்க வைக்கும். வியர்வை சருமத்தை ஈரப்பதம் பெற வைக்கும்.  

  பொதுவான குறிப்புகள்

  உங்கள் முகம்தான் உங்கள் அடையாளம். அதுவே உங்களை ஊக்கம் பெற வைக்கிறது. பொலிவான சருமம் பெறுவதற்கான வழிகள் இதோ:

  • சன்ஸ்கிரீன் பயன்படுத்து உங்கள் முகத்தை புற ஊதாக் கதிர்களிலிருந்து (UV) காக்கும்.
  • பொலிவான சருமத்திற்கு வீட்டு வைத்திய குறிப்புகளை நாடவும்.
  • ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவும்.
  • புகைபிடிக்க வேண்டாம்.
  • அதிக மனஅழுத்தம் கொள்ள வேண்டாம். மனஅழுத்தம் பருக்களை உண்டாக்கலாm.

  குறிப்புகள்

  உலர் சருமம் தானாகவே சரியாகிவிடும் என்றாலும் சில நேரங்களில் இது தாமதமாகலாம். மேலும் உலர் சருமத்தை அலட்சியம் செய்யாமல் இருப்பது முக்கியம். இதுவே ஆரோக்கியமான சருமத்திற்கான வழி. உலர் சருமம் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும், அவற்றுக்கான பதில்களும்:

  1. கோடைக்காலத்தில் சருமத்தை பாதுகாப்பது எப்படி?

  குளிர்காலத்தில் சருமத்தை காப்பது முக்கியம் என்றால், கோடைக்காலத்திலும் இது அவசியமாகும். சரியான சோப் மற்றும் மாய்ஸ்சரைசிங் கிரீம் பயன்பாடு உங்கள் சருமத்தை பாதுகாக்கும். முக்கியமாக கோடை வெய்யில் இருந்து பாதுகாத்துக்கொள்ள சன்ஸ்கிரீன் கிரீம் கையில் வைத்திருக்க வேண்டும். மேலும் முக்கியமாக நிறைய தண்ணீர் குடித்துக்கொண்டிருகக் வேண்டும்.  

  1. உலர் சருமத்தின் முக்கிய அறிகுறி என்ன?

  சருமத்தில் அரிப்பு ஏற்பட்டு வெடிப்பு உண்டாவது தான் உலர் சருமத்தின் முதல் அறிகுறியாகும். சருமம் உலர் தன்மை பெற்றால் அரிப்பு மோசமாகவு, இரத்தக்கசிவும் ஏற்படலாம்.  

  1. மருந்துகளால் உலர் சருமம் ஏற்படுமா?

  ஆம், ஒரு சில மருந்துகள் உலர் சருமத்தை உண்டாக்கலாம். அதிக இரத்த அழுதத்திற்காக அளிக்கப்படும் டைரட்டிக்ஸ் மற்றும் ஒரு சில ஒவ்வாமைகளுக்காக அளிக்கப்படும் ஆண்டிஹிஸ்டாமைன்ஸ் போன்ற மருந்துகளில் இவ்வாறு பாதிப்பு ஏற்படுத்தலாம். இது போன்ற மருந்துகள் உங்கள் சருமம் ஈரப்பத்தை உற்பத்தி செய்வதை தடுத்து உலர் தன்மையை உண்டாக்கலாம்.  

  ஒரு சிலருக்கு உலர் சருமம் தானாக குணமாகிவிடலாம். ஆனால் உலர் சருமத்தை முறையாக கவனிப்பது அவசியம். மாய்ஸ்சரைசிங் கிரீம் மற்றும் வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றலாம். உலர் சருமம் எந்த பருவநிலையிலும், யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம் என்பதால் கவனம் தேவை. அதே நேரத்தில் குளிர்கால உலர் சருமம் பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்த வகை பாதிப்பை குறைக்க சிறந்த வழி, தினமும் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீராவது அருந்துவதுதான்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.