கொரோனா வைரஸ் என்பது நம்மிடையே உயிரோடு இருந்து கொண்டிருக்கும் ஒரு வைரஸ். பேரழிவை உண்டு பண்ணிக்கொண்டிருக்கும் ஒரு தொற்றுநோய். இது மிக ஆபத்தான கொலைகார வைரஸாக நம்மைச் சுற்றி, நம்மிடையே ஏ ன்நமக்குள்ளேயேகூட, சுற்றிக்கொண்டிருக்கிறது. இது முதன் முதன் முதலாக இப்போதுதான் மனிதர்களைக் கொல்லும் வைரஸ் என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இது ஆரமப கட்டத்தில், புனுகு பூனையிலிருந்து மனிதனிடம் பரவிய தொற்று எனக் கண்டறியப் பட்டது.
Contents
கொரோனா வைரஸ் என்றால் என்ன?
கொரோனா வைரஸ் என்பது, ஒரு வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் மத்தியக் கிழக்கு சுவாசக் கோளாறு (MERS-CoV) மற்றும் கடுமையான சுவாசக் கோளாறு (SARS-CoV) ஆகியன அடங்கும். சமீபத்திய WHO அறிவிக்கையின்படி, இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கிறது. அதாவது SARS-CoV, புனுகு பூனைகளிடமிருந்தும், MERS-CoV என்பது ஒற்றைத் திமிள் ஒட்டகங்களிடமிருந்தும், மனிதர்களுக்குப் பரவியிருக்கிறது. இதில் மோசமான விஷயம், இதைக் குணப்படுத்த மருந்து இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை என்பதுதான்.
கொரோனோவைரஸ்: உதவிக்கான வழிகாட்டுதல்கள் – தடுக்கும் வழிகள்
இதற்கு கொரானாவைரஸ் என்று பெயரிடக் காரணம் என்ன?
இந்த வைரஸை மைக்ரோஸ்கோப் வழியாகப் பார்த்தால், அது கிரீடம் போன்ற தோற்றத்தைப் பெற்றிருப்பது தெரிய வந்தது. கொரோனா என்றால் கிரீடம். அதனால்தான் ஆய்வாளர்கள் இதற்கு கொரோனா வைரஸ் என்று பெயரிட்டனர்.
உங்களுக்கு கொரோனா இருப்பதை கண்டறிவது எப்படி?
- காய்ச்சல், இருமல்
- மூச்சு விட சிரமமாக இருத்தல்
- கடுமையான சுவாசக் கோளாறு
- நிமோனியா
- சிறுநீரக செயலிழப்பு.
குறிப்பு : மேற்குறிப்பிட்ட அடையாளங்கள் இருந்தால் அதை அலட்சியம் செய்யாமல், உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவ மனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்றின் இப்போதைய நிலை.
தி நியு யார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தியின்படி, வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதே சமயம், இதற்கான சரியான மருந்து, தீர்வு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை . இந்த நிலையில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை.
உலக அளவில் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை
இப்போதைக்கு 99,442 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகக் கண்டறியப் பட்டுள்���து. இதில் 3,387 பேர் மரணமடைந்துள்ளனர். 55, 661 பேர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ்
இப்போதைக்கு 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
உலக அளவிலான பாதிப்பு
சீனாவில் மிக அதிகமாக 80,555 பேர், இதற்கு அடுத்தாற்போல தென்கொரியா (6,284 இறப்புகள்), அதற்கு அடுத்தபடியாக இத்தாலி (3, 858 இறப்புகள்).
உலகத்திலேயே பாதுகாப்பான பகுதி அண்டார்டிகா
இந்த வைரஸ், அண்டார்ட்டிகாவைத் தவிர்த்து உலகின் ஏறக்குறைய மற்ற அனைத்துப் பகுதிகளிலும் பரவியிருக்கிறது.
சிகிச்சை கண்டறியப்பட வேண்டிய நிலை
இஸ்ரேல் இதற்கான மருந்தைக் கண்டறிந்திருப்பதாக கூறுகிறது. இதற்கான மருந்துகள், மனிதர்களுக்குப் பயனளிக்குமா என்பதற்கான சோதனைகளுக்குப் பிறகு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப் படும்.
இதைக் கண்டறிவது எப்படி?
கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களை CT மூலமாக சோதனை செய்யப்படும். இந்த வைரஸ் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுத்துவதால், நெஞ்சுப் பகுதியில் ஸ்கேன் எடுக்கப்படுகிறது. இந்த நோய் பரவுவதை தொடர்ந்து கண்காணிப்பதற்காக பல ஸ்கேன்கள் தொடர்ந்து ஒன்றரை வாரங்களுக்கு எடுக்கப்படும். மிக அரிதாக, ஒரு சிலரிடத்தில் இந்தத் தொற்று இருப்பதைக் கண்டுபிடிக்க முடியாது.
மருத்துவரை எப்போது பார்ப்பது ந்ல்லது?
நீங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெரும் முன்னர் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியம். முதலில், நோய்க்கான அறிகுறிகளைக் கண்டறிவது. அடுத்ததாக பயணங்கள் தொடர்பான விஷயங்களைத் தெரிந்து கொள்வது.
நீங்கள் கீழ்க்காணும் நாடுகளுக்கு 2019, டிசம்பர் 31ஆம் தேதிக்குப் பின் சென்றிருந்தால், நிச்சயமாக மருத்துவரை சந்திப்பது அவசியம்.
- சீனா
- இத்தாலி
- ஹாங்காங்
- தாய்லாந்து
- சிங்கப்பூர்
- ஜப்பான்
- மலேசியா
- மகேயூ
- தென்கொரியா
குறிப்பு : இது தவிர கடந்த நான்கு வாரங்களாக சுவாசக் கோளாறுகளால் அவதிப் பட்டு வந்தால், மூச்சு விட சிரமமாக இருந்தால், உடனடியாக மருத்துவரை சந்திப்பது மிக அவசியம்.
எப்படிப் பாதுகாத்துக்கொள்வது?
இதுவரையில் சிகிச்சை எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், வராமல் தற்காத்துக்கொள்வதுதான் சிறந்தது. இது போல பேரழிவை உண்டாக்கிக் கொண்டிருக்கும் ஒரு நோய், எங்கிருந்து எப்படி பரவுகிறது என்பதையோ, அதற்கான மருந்தையோ, உலகம் முழுவதிலும் உள்ள ஆராச்சியாளர்கள் இன்னும் சரியான வகையில் கண்டுபிடிக்கவில்லை. ஆகவே இந்தக் கொடிய நோயிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளச் சில எளிய வழிகளைப் பின்பற்றுவது மிக அவசியம்.
- வாகனங்களை ஓட்டிய பின், சாப்பிடும் முன்னும், பின்னும், பயணத்திற்குப் பின்பும் சோப் மற்றும் சானிடைசர்களைப் பயன்படுத்தி உங்களது கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.
- தும்முவதற்கு முன் உங்களது வாயையும் மூக்கையும் மூடிக்கொள்ள வேண்டும்.
- உங்களது வாய், மூக்கு, கண் ஆகியற்றை அடிக்கடி கைகளால் தொட்டுக்கொண்டிருக்காதீர்கள்.
- சுவாசக் கோளாறு உள்ள நபர்களிடமிருந்து விலகியே இருங்கள்.
- நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் பாத்திரங்கள், படுக்கை, போர்வைகள் போன்ற பொருட்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளாதீர்கள்.
- வீட்டுத் தரையை சுத்தமாக வைத்திருங்கள்
- தரமான மருத்துவ முகமூடியை அணியுங்கள்
- விலங்குகளின் உடல் பாகங்களையோ, சமைக்காத இறைச்சிப் பொருட்களையோ சாப்பிடாதீர்கள்
- விலங்குகளோடு நெருங்கிப் பழகாதீர்கள்.
சந்தேகங்களும் பதில்களும்
ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நம்மிடையே பரவியிருக்கும் இந்த கொடிய வைரஸ் தொற்றுக்கான சிகிச்சை இன்னும் கண்டறியப்படவில்லை. அதனால் இதை வராமல் தடுப்பதற்கான சுகாதார நடவடிக்கைகளைத் தொடர்ந்து விடாமல் பின்பற்றுவது அவசியம். கைகளைச் சுத்தமாகக் கழுவுதல், மாசுகள் பாதிக்காத முகமூடி அணிவது, கைகளால் அடிக்கடி முகத்தைத் தொடாமல் இருப்பது போன்றவற்றை நாம் பின்பற்றியே ஆக வேண்டும்.
இந்த உயிர்க் கொல்லி நோயைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே தரப்படுள்ளன.
1. கொரோனா வைரஸ் பாதிப்பினால் மரணம் ஏற்படுமா?
ஆமாம். இந்தத் தொற்றினால் பாதிக்கப்பட்டால் மரணம் நிகழும். ஏனென்றால் இதற்கான சிகிச்சை முரை இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த நோயினால், நுரையீரல் பாதிப்பு, சிருநீரக பாதிப்பு, வயிறு பாதிப்பு, ரத்தம் கெட்டுப் போதல் ஆகிய விளைவுகள் ஏற்படும்.
2. இந்த நோயை குணப்படுத்த சிகிச்சை உள்ளதா?
இல்லை. இதுவரையில் சிகிச்சை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், ஆராய்ச்சியாளர்கள் இதற்கான முழு முயற்சியில் இறங்கியுள்ளனர்.
3. கொரோனா வைரஸைக் கண்டுபிடித்தவர் யார்?
கொரோனாவைரஸ், வியாதியாகப் பரவுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே சீனாவில் உள்ள லி வென்லியாங் என்பவர்தான் இது பற்றிக் கண்டறிந்தார். அவர் இதன் பாதிப்புக்குள்ளாகி, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இப்போது அவர் தேசிய அளவில் மாமனிதராக சீனர்களால் போற்றப்படுகிறார்.
4. இந்தத் தொற்று எத்தனை காலத்திற்கு இருக்கும்?
இது உருவாவதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கும் வரை இப்படித்தான் இருக்கும். அதுவரையில், ஆராய்ச்சியாளர்கள், மிகக் தீவிரமாக இதைப் பற்றி தெரிந்துகொள்ளவும், சிகிச்சை முறைகள் பற்றியும் பல்வேறு விதங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த வைரஸிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கான சிறந்த வழி, மேலே குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுவதுதான். பயணங்களை மேற்கொள்ளும்போது தரமான முகமூடிகளைஅணிந்துகொள்வதும், ஏற்கெனெவே பாதிக்கப்பட்டிருப்பவர்களிடமிருந்து தள்ளி இருப்பதும்தான் மிக முக்கியமானது.
பாதுகாப்பாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள்.