சூரியக் குளியலின் 15 ஆரோக்கிய நன்மைகள்

  0

  நம் வீட்டுப் பெரியவர்கள் சூரிய வெய்யிலில் நிற்க வேண்டாம் அதன் புற உதாக் கதிர்களால் பாதிப்பு உண்டாகும் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம், ஆனால் உண்மையில் சூரியக் குளியலால் நமக்குப் பல்வேறு நன்மைகள் உண்டாகின்றன. கோடைக்காலத்தில் விடியற் காலையில் எழுந்து குறைந்தபட்சம் 5 நிமிடங்களாவது சூரிய வெப்பம் படுமாறு நிற்பது நல்லது, காரணம், சூரிய ஒளி நம் தோலில் படும்போது உற்பத்தி செய்யப்படும் வைட்டமின்-டி, வீக்கம் ஏற்படுவதிலிருந்து காக்கிறது, நினைவுத்திறனை மேம்படுத்தும், புற்றுநோய் மற்றும் அழற்சியிலிருந்தும் பாதுகாக்கிறது. வைட்டமின் டி குறைபாடு இருந்தால், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் இதய நோய் உண்டாகும்.

  Sunbathing Benefits

  Contents

  1. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது

  நம்மில் பெரும்பாலானோர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறோம். ரத்த அழுத்தத்தைக் குறைக்க பல உணவுப் பொருள்கள் உதவிகின்றன, ஆனால், தினமும் குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் சூரியக் குளியல் நமக்கு பல்வேறு வகைகளில் பலன் தரும். தோலின் மேலடுக்கில் காணப்படும் நைட்ரிக் ஆக்சைட் சூரிய ஒளியில் பட்டு ரத்த நாளங்களை விரிவடையச்செய்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இது நம் ரத்த ஓட்டத்தில் ஆக்சைட் செல்ல அனுமதிக்கிறது, அதன் மூலம் ரத்த அழுத்தம் குறைகிறது. தினசரி வெறும் 15 நிமிட சூரியக் குளியல் மூலமாக இதைச் சாதிப்பது எவ்வளவு எளிது?

  2. நல்ல உறக்கம் பெற

  தூக்கத்தில் மூச்சுத்திணறல் அல்லது தூக்கமின்மை நோயால் அவதிப்படுபவராக நீங்கள் இருந்தால், தினமும் காலையில் வெறும் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நின்றாலே போதும், இது நல்ல உறக்கம் பெற உதவும். எனவே காலையில் 15 நிமிடங்கள் சூரியக் குளியல் போட மறந்துவிடாதீர்கள், இது நம்மை சுறுசுறுப்பாகவும், ஆற்றலுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்திருக்கும்.

  3. மூளைச் செயல்பாட்டை அதிகரித்தல்

  சூரியக் குளியலால் நம் மூளை உள்பத்திசெய்யும் அதிக செரோடோனின் ரசாயனம் நம் மனநிலையை ஊக்குவித்து மூளைச் செயல்பாட்டை அதிகரிக்கும். பெரும்பாலும் நாம் காலை தினமும்15 நிமிடம் சூரிய ஒளியில் நிற்பதை மறந்துவிடுகிறோம், இது எஸ்.ஏ.டி. எனப்படும் பருவகால பாதிப்பு கோளாறு நிலவரத்தை ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும் மூடிய கதவுகளுக்குள்ளேயே நீண்ட நேரம் இருப்பவர்களுக்கு ஏற்படும். மிகவும் குறைவான அளவு சூரிய ஒளி படுவதால் மன அழுத்தம் ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்கான மிகச் சிறந்த வழி தினமும் காலை குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பதுதான்.

  4. அல்சீமர் நோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது

  அல்சீமர் நோய் உள்ளவர்களை சில காலம் சூரிய ஒளியில் நிற்க வைத்த பிறகு அவர்களது மன ஆற்றலை சோதித்துப்பார்த்ததில் கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்பட்டதோடு, நோய்க்கான அறிகுறிகளும் குறைந்துள்ளதும் அது குறித்த ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. மேலும் இவ்வாறு தினமும் நல்ல சூரிய ஒளியில் நிற்கும் நோயாளிகளுக்கு மன அழுத்த நோயின் அறிகுறிகள் குறைந்தும் காணப்பட்டன.  

  5. தோல் குறைபாடுகளை குணப்படுத்தும்

  தினமும் காலை குறைந்தபட்சம் 5 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பதால் முகப்பரு, அரிக்கும் தோலழற்சி, மஞ்சள் காமாலை, தடிப்புத் தோல் அழற்சி மற்றும் பூஞ்சை தோல் தொற்று நோய்கள் முதலிய எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க உதவும். பல ஆண்டுகளாக, தோலில் ஏற்படும் கோளாறுகளுக்கு சூரிய ஒளி பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, தினமும் காலையில் சிறிது நேரம் சூரிய ஒளியில் நின்றாலே தோல் நோய்கள் பிரச்சினையை நாம் தவிர்க்கலாம். ஆனால் நீண்ட நேரம் சூரிய வெப்பத்தில் நின்றால் தோல் கருத்துவிடும். இவ்வாறு தோல் நிறம் மாறினால் தோல் பாதிப்படைந்துள்ளதற்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம்.

  6. குழந்தைகளின் வளர்ச்சிக்க உதவுகிறது

  ஒரு குழந்தை தினமும் காலையில் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருநதால், அந்தக் குழந்தை உயரமாக வளரும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகளை தினமும் காலை 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் வைத்திருந்தால் போதும், அது அவர்களுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும்.

  7. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

  சூரிய ஒளி தோல் தடிப்பு, அழற்சி போன்ற நோய்களுக்கான சிகிச்சையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரத்த வெள்ளை அணுக்களில் சூரிய ஒளி படும்போது, அது தொற்றுகளை எதிர்த்துப்  போராடுவதில் ஒருங்கிணைந்த பங்கு வகிக்கலாம். இதற்கெல்லாம் நாம் செய்ய வேண்டியது, தினமும் காலை எழுந்து அதிகபட்சம் 15 நிமிடங்கள் சூரிய ஒளி படுமாறு நிற்க வேண்டும், அவ்வளவுதான், இது நமது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்தி, நம்மை ஆற்றலுடன் வைத்திருக்கும்.  

  8. புற்றுநோய் வரும் ஆபத்தைக் குறைக்கும்

  வைட்டமின் டி பற்றாகுறைதான் புற்றுநோய்க்கான முக்கிய காரணம். வைட்டமின் டி குறைபாடு மார்பகம் மற்றும் பெருங்குடல் புற்றுநோயைத் துண்டும். மனித தோல் ஏராளமான வைட்டமின் டி-ஐ உற்பத்தி செய்யக்கூடியது, இது நம் உடலில் சூரிய ஒளி பட்டால்தான் சாத்தியம். எனவே எந்த வகைப் புற்றுநோய் வருவதையும் தவிர்க்க சூரிய ஒளி நம் தோலில் படுமாறு இருத்தல் நலம், எனவே போய் சூரியக்குளியல் போடுங்கள்.

  9. டைப் 2 வகை நீரிழிவு நோய் உண்டாகும் ஆபத்தைக் குறைக்கும்

  தற்போது உலகில் நீரிழிவு நோய் மிகவும் பொதுவான ஒன்றாக கணப்படுகிறது, உலகில் கணிசமானவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இன்சுலின் உற்பத்தியில் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது, வைட்டமின் டி குறைபாடு இருப்பதால், இன்சுலின் எதிர்ப்பால் அவதியுற நேரும், அது டைப் 2 நீரிழிவு நோயை உண்டாக்கும். நம் தோல் அதிக வைட்டமின் டி-ஐ உற்பத்தி செய்ய, நாம் தினமும் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பது நல்லது.

  10. நம் மனநிலையை மேம்படுத்துகிறது

  நாம் பதற்றமோ அல்லது மன அழுத்தமோ கொண்டிருந்தால், அதைத் தவிர்த்து ஆசுவாசமடைய மிகச் சிறந்த வழிமுறை சூரியக்குளியல். நாம் சூரிய ஒளியில் நிற்கும் ஒவ்வொரு தடவையும் மனம் ஆசுவாசமடைவதையும் மன அழுத்தம் குறைவதையும் உணரலாம். எனவே சூரிய ஒளியில் நின்று அந்தச் சூரியன் மன அழுத்தத்தை உள்வாங்கிக்கொள்ள விட்டுவிடுவோம்.

  11. உடல் பருமனைக் குறைக்க உதவும்

  சூரிய ஒளி நம் மீது படுவதால் எவ்வாறு உடல் எடை குறையும் என்று கேள்வி எழலாம். முழுமை உணர்வு ஏற்படும் காரணத்தால், பசி மட்டுப்படும்போது எடை குறையும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், சூரிய ஒளி படுவதால், அதிக கலோரிகள் கரைக்கப்பட்டு, வெளிப்புற விளையாட்டுகள் விளையாட உங்களுக்கு உதவும். கோடைக்காலத்தில் எந்தளவு அதிகமாக வியர்க்கிறதோ அவ்வளவு அதிகமாக நமது ஆர்வமும் அதிகரிக்கும். கோடையில் அதிகமாக பசித்து நிறைய சாப்பிடக்கூடும், ஆனால், கடைசியில் நாம் நிறைய உடற்பயிற்சி செய்யத் தொடங்கிவிடுவோம், இதுவும் உடற்பயிற்சி செய்யும் ஒரு முறை இதனால் உடல் பருமன் குறையும்.  

  12. எலும்புகளின் வலுவை அதிகரிக்கும்

  வைட்டமின் டி-க்கான மிகப் பெரிய ஆதாரமாக சூரிய ஒளி கருதப்படுகிறது. இது நம் உடலில் கால்சியம் உண்டாக்க உதவுகிறது. அது நம் எலும்புகளை பலப்படுத்துகிறது. எனவே, தினமும் காலை மற்ற வேலைகளைத் தொடங்குவதற்கு முன் போய் சூரிய ஒளியில் நில்லுங்கள். இது நம் எலும்புகளை வலுவாக்கிக்கொள்வதற்கான ஒரு இயற்கை வழிமுறை.

  13. கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

  வைட்டமின் டி-க்கான மிகப் பெரிய ஆதாரமாக சூரிய ஒளி கருதப்படுகிறது மேலும் கண் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. இதற்கு நாம் செய்ய வேண்டியது தினமும் காலை சூரிய ஒளி படுமாறு நிற்க வேண்டும் அவ்வளவுதான், அது நமக்கு நன்மை பயக்கும். அதற்காக வெறும் கண்ணால் சூரியனை பார்க்க வேண்டியதில்லை. அவ்வாறு செய்தால், கண் பார்வை பறிபோகலாம், எனவே சூரிய ஒளியில் போய் நின்றால் அது தோலில் பட்டு தோல், வைட்டமின் டி-ஐ உற்பத்தி செய்யும், அதன் மூலம் பார்வை வலுப்பெறும்.

  14. மன அழுத்தத்தை எதிர்த்து போராடும்

  சூரிய ஒளியின் கீழ் நாம் நிற்கும்போது அது நம் மனதில் இனிமையான தாக்கத்தை ஏற்படுத்தி, நம்மை அமைதியாக, ஆசுவாசமாக வைத்திக்கும். பழங்காலத்தில், நாம் கோபமாக இருக்கும்போது, சூரிய ஒளியில் நின்றால் அது நம் கோபத்தை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இருந்து வந்தது ஆனால் அவை அனைத்தும் கட்டுக்கதைகளே. அலுவலகத்தில் அன்று மனச்சோர்வு  ஏற்படக்கூடும் என்று நினைத்தால், ஒரு 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் போய் நின்று பாருங்கள், அப்போது உங்கள் மன அழுத்த அளவு குறைவதை உணரலாம். காலை நேர சூரியக்குளியல் நம்மை ஆற்றலுடனும், ஆசுவாசத்துடனும், புத்துணர்வுடனும் உணரச் செய்யும், எனவே, நாம் தினமும் 15 நிமிடங்கள் சூரியக்குளியல் போட்டு பதற்றமின்றி இருக்கலாமே?

  15.  பருவகால பாதிப்புக் கோளாறுகளை எதிர்த்து போராடும்

  பருவகால பாதிப்பு கோளாறுகள் என்பன பொதுவாக பருவகால மாறுபாடுகளால் உண்டாகும் மன அழுத்தம் போன்றவை. சூரியஒளி போதுமான அளவு இல்லாமல் போனால், நம் செரோடோனின் அளவுகள் குறையும், இதனால், எஸ்.ஏ.டி. எனப்படும் பருவகால பாதிப்பு கோளாறு நிலவரம் ஏற்படும். எனவே சூரிய ஒளி இருக்கும்போது வெளியே போவதை உறுதி செய்வதால், நாம் ஆசுவாசமாகவும் அமைதியாகவும் உணரலாம்.

  அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகள்

  பல ஆண்டு காலமாக சூரிய ஒளி தோலில் படுமாறு இருப்பது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது, ஆனால், இது குறித்து அதிகரித்து வரும் ஆராய்ச்சிகளால் கண்ணோட்டங்கள் மாறி வருகின்றன. நீண்ட நேரம் சூரிய ஒளி படுமாறு இருப்பதால், நிறைய ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும், ஆனால், இதைச் செய்ய ஒரு முறை உள்ளது. இது தொடர்பாக நமது சந்தேகங்களைப் போக்க சில கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் வழங்கப்பட்டுள்ளன.  

  1. வைட்டமின் டி பெற நான் எவ்வளவு நேரம் சூரிய ஒளியில் நிற்க வேண்டும்?

  காலை நேர சூரிய ஒளியில் நீங்கள் குறைந்தபட்சம் ஒரு 15 நிமிடங்கள் இருக்க வேண்டும். இது உங்கள் தோல் வைட்டமின் டி-ஐ உற்பத்தி செய்ய உதவும் இது நமக்கு பல்வேறு வழிகளிலும் உதவும். நீண்ட நேரம் சூரிய ஒளி படுமாறு இல்லாததை உறுதி செய்துகொள்ளவும் இது பல தோல் தொடர்பான பிரச்சினைகளை உண்டாக்கும்.

  1. சூரிய ஒளி பெறுவதற்கான மிகச் சிறந்த வழிமுறை எது?

  சூரிய ஒளியைப் பெறுவதற்கான சிறந்த நேரம் சூரிய உதயத்தின்போதுதான், இது மேற்சொன்ன அத்தனை வகைகளிலும் பலன் பெற உதவும். ஆனால், நீங்கள் வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே இருப்பதை, அதற்கு மேல் ஆகாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இது நம் தோல் வைட்டமின் – டி உற்பத்தை செய்வதற்கு உதவும், இது நம் எலும்புகளுக்கு வலுவூட்டி, நல்ல பார்வைத் திறன் பெற உதவும். சூரியக்குளியலின் மிகச் சிறந்த பலன்களைப் பெற மிகச் சிறந்த நேரம் காலைநேரம்தான்.

  சூரிய ஒளியில் ஏராளமான ஆரோக்கிய நலன்கள் உள்ளன. ஆனால், 15 நிமிடங்களுக்கு மேல் சூரியக்குளியல் கூடாது. சூரிய ஒளியால் தோல் நிறம் மாறுவது நல்லதாக இருந்தாலும்கூட, உங்கள் தோல் பாதிப்படைந்துள்ளதையும்கூட இது குறிக்கலாம். காலை நேர சூரியக் குளியலே சிறந்ததாகக் கருதப்படுகிறது, காரணம் பெரும்பாலும் சூரிய ஒளியின் நன்மைகள் அப்போதுதான் கிடைக்கும், மேலும் புற ஊதாக் கதிர்களும் அந்தளவு வலுவாக இருக்காது. எனவே, தினமும் காலை 15 நிமிட சூரியக்குளியல் பெற்று ஆரோக்கியமாவும், ஆற்றலுடமும் திகழ்வோம்.  

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.