தோலின் மீது வெள்ளைப் படலம்: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் வீட்டு வைத்தியங்கள்

0

தோலின் மீதுள்ள எந்த வெள்ளைப் படலமும் அபாயத்திற்கான அறிகுறியாகும்; அது பரவும் முன்னர் உடனடியாக மருத்துவ உதவியை நீங்கள் நிச்சயம் பெற வேண்டும். எதனால் இப்படிப் படலம் தோன்றுகிறது என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்; பதட்டமடையாமல் தோல் சிகிச்சை நிபுணரைச் சென்று பாருங்கள். தோல் நிறம் இழத்தல் என்பதே வெள்ளைப் படலமாகும்; மருந்தைத் தானாகவே தீர்மானிக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் உங்களது தோலின் ஆரோக்கியத்தைச் சீரழித்துவிடுவீர்கள் என்பது உண்மை.

White Patches

தோல்சிகிச்சை வல்லுநரின் அறிவுரையும் முறையான சிகிச்சையுமே இதைத் தொடங்க முக்கியத் தேவைகள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே, தோலில் வெள்ளைப் படலம் தென்பட்டால் உடனடியாக தோல்சிகிச்சை நிபுணரைக் கட்டாயம் சென்று பார்க்கவும்.

வெள்ளைப் படலம் என்றால் என்ன?

விடிலிகோ என்றும் கூறப்படும் வெள்ளைப் படலம் சருமத்தில் ஏற்படுத்தும் நிறமாற்றத்தால் நாளடைவில் தோல் தன் இயல்பான நிறத்தை இழந்துவிடும். நிலைமை தீவிரமானால், சிலசமயம் இச்சருமநிற மாற்றத்தால் தலைமுடி, வாயின் உட்புறம் ஆகியவையும் பாதிக்கப்படலாம். விடிலிகோ எதனால் உருவாகிறது? உங்களது சருமத்திலும் தலைமுடியிலும் மெலானின் உள்ளது; மெலானின் சுரக்காதபோது, இறுதியில் விடிலிகோவின் பாதிப்பு ஏற்படும்.

தோலின் நிறம் கருமையாக இருப்போரிடத்தில் இது மோசமாகத் தெரியும். இது தொற்றுநோயல்ல என்றாலும் சமுதாயத்தில் உங்களின் நம்பிக்கையைக் குறைத்து பெரும் மனச்சோர்வையும் ஏற்படுத்தும். சருமநிற மாற்றத்தால் அவதிப்படுவோரின் மோசமான பிரச்சினை என்னவெனில் பாதிக்கப்பட்டோர் மன அழுத்தத்தை உணர்கின்றனர்; இவ்வழுத்தமே பல்வேறான உளவியல் கோளாறுகளையும் உருவாக்குகிறது. சருமம் பாதிக்கப்பட்ட இடத்தில் அது இழந்த நிறத்தை மீட்பதுதான் சிகிச்சை என்றாலும் மீண்டும் அவ்வாறு நிறம் மாறுவதை இச்சிகிச்சை தடுத்துவிடும் என உறுதியாகக் கூறமுடியாது.

வெள்ளைப் படலம் பற்றிய உண்மைகள்:

தோற்றம் அரூபமாக இருப்பதால் பொது இடத்தில் தாம் எப்படிப் புழங்குவது என்ற ஒரு கசப்புணர்வு இதனால் பாதிக்கப்பட்டோருக்கு எப்போதும் இருக்கும். வெள்ளைப் படலம் என்ன என்று தெரிந்து கொண்டுவிட்டபின் சருமத்தின் நிலைமையில் ஏற்படும் மாற்றம் பற்றிய சில உண்மைகளைப் பார்க்கலாம்:

 • சருமத்தின் நிலை பிறருக்குத் தொற்றாது.
 • பெற்றோரில் யாருக்காவது இப்பிரச்சினை இருந்தால் குழந்தைக்கும் அதே நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளது.
 • இத்தகைய சருமநிலையினால் தைராய்டு கோளாறுகள் உண்டாகலாம்.
 • பலர் இதைத் தொழுநோய் என்று தவறாக நினைத்துக் கொள்கின்றனர்.
 • யாருக்கும் எந்த வயதிலும் இது ஏற்படலாம்; ஆனால் பெரும்பாலும் 20 வயதுக்குள் இருப்பவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
 • இதற்கான சிகிச்சையானது சருமம் நிறம் மாறுவதைத் தடுப்பதற்குத் தரப்படுகிறது; இதனால் சருமம் தன் பழைய நிறத்தை அடைய முடியும்.
 • சருமம் இப்படி ஆவதற்கு முக்கியக் காரணங்களுள் ஒன்றாக மனச்சோர்வு சுட்டிக்காட்டப்படுகிறது.

குறிப்பு: சருமத்தில் ஏதாவது படலம் தென்பட்டால், உடனடியாகச் சென்று மருத்துவரிடம் ஆலோசனை பெறுமாறு உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதனால் நோய் வளர்வது நிற்பதுடன் நிறமிழந்த சருமம் மீண்டும் பழைய நிறத்தைப் பெறும் செய்முறையும் ஊக்கப்படுத்தப்படுகிறது.

வெள்ளைப் படலத்திற்கான காரணங்கள்:

வெள்ளைப் படலங்கள் யாரை வேண்டுமானாலும் பாதிக்கக்கூடும் என்பது நமக்குத் தெரிந்துவிட்டதால், இது எப்படி ஏற்படுகிறது, சருமத்தை இப்படி மாற்றும் மூலக்காரணம் எதுவென்று புரிந்து கொள்வோம். வெண்படலத்தைத் தோல் வியாதி போல் பாவிக்காமல் தீவிர உளவியல் பிரசினையாக பாவித்து சிகிச்சை தரப்படுகிறது; ஏனெனில் இது ஒருவரின் மனதையும் சூழலையும் கடுமையாகப் பாதிக்கும் தன்மை கொண்டது. வெண்படலத்தை உருவாக்கும் பல்வேறு சருமநிலைகள் பற்றிக் கீழே தரப்பட்டுள்ளது:

 • மிலியா: தோலிலிருந்து திரவமுள்ள கட்டிகள் உருவாகி மேற்பரப்பில் வந்தது போலிருக்கும். இதனால் வெண்படலம் உருவாகலாம்.
 • எக்செமா: சருமம் சிவப்பாகி பின் தோன்றும் சிவப்புக் கட்டிகள் கைகள், பாதங்கள், முழங்கை, இமைகள், மணிக்கட்டு, முட்டிகளைப் பாதிக்கும்.
 • பிடிரியாஸிஸ் அல்பா: 1-3 வயதுள்ள குழந்தைகள் மட்டும் இவ்வகை நோயால் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக இது முகத்தில் தோன்றி சருமம் சிவப்பாகி, அரிப்பும் வெண்படலமும் உண்டாகும். சருமத்தின் நிலை சீரானாலும் பல வெண்குறியீடுகள் தங்கிவிடும்.
 • விடிலிகோ: அடிக்கடி தொன்றும் வெண்குறியீடுகள் வெண்படலங்களே; இவை முகத்திலோ உடலின் எப்பகுதியிலோ தோன்றலாம். சருமத்தின் செல்கள் இறப்பதால் இந்நிலை ஏற்படுகிறது. ஆயினும் வெண்படலங்கள் தோன்ற இதுவே காரணமாகும்.
 • சன்ஸ்பாட்ஸ்: வெள்ளைக் குறியீடுகளுள்ள இடங்களில் தோல் நிறத்தை இழந்துவிடும். சரும நிறமாற்றத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளின் காரணமாக சருமம் தன் நிறத்தை இழந்து விடுகிறது. இது பொதுவாக கால்களில் தோன்றி, கைகளுக்குப் பரவி பின்னர் முதுகுக்கும் வருகிறது. நீண்ட நேரம் சூரியஒளி உடலில் பட்டால் இப்பிரச்சினை தோன்றலாம். இது மரபணுக்களாலும் உருவாகிறது.
 • லிசென் ஸ்கெலிரோசஸ்: இந்த சருமநோய் எல்லா வயதினரையும் பாதிக்கும். பெண்களிடத்தில் இது அதிக சிவப்பாகவும் தோலுக்கடியில் ஒல்லியாகவும் இருக்கும். ஆண்களிடத்தில் இது ஆண்குறியின் மேற்புற தோலில் உண்டாகும். உடலின் பிறபகுதிகளிலும் இது தோன்றலாம். இதற்கான முக்கியக் காரணங்களுள் ஒன்றாக ஹார்மோன் கோளாறைக் குறிப்பிடலாம்.

வெண்படலத்தின் அறிகுறிகள்:

வெண்படலம் உங்களது தன்னம்பிக்கையை வெகுவாகக் குறைத்துவிடும் என்பதால் உடலில் எங்காவது வெண்குறியீடு தென்பட்டாம் உடனடியாக மருத்துவ உதவியைப் பெறவும். கைகள், பாதங்கள், முழங்கை, உதடுகள், முகம் என உடலில் சூரியஒளி படுமிடங்களில் இப்பிரச்சினை உருவாகும் வாய்ப்புள்ளது. விடிலிகோவால் பாதிக்கப்பட்டுள்ளதை எப்படி நாம் தெரிந்து கொள்வது? நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சருமநிற மாற்றத்தின் சில அறிகுறிகள் கீழே தரப்பட்டுள்ளன:

 • தலைமுடி, புருவம், தாடி ஆகியவற்றில் நரைமுடி தோன்றுதல்
 • சருமத்தின் இயல்பான குணம் மறைந்து போகுதல்
 • வாய்க்குள்ளும் மூக்குக்குள்ளும் வண்ணம் குறைந்து போகுதல்
 • விழித்திரைப் படலத்தின் நிறத்தில் மாற்றம் ஏற்படுதல்

சருமநிறமாற்றமானது உடலில் பலவித பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதன் தோற்றத்தைப் பொறுத்து உடலின் பல்வேறு பகுதிகளில் சருமநிறமாற்றம் பின்வருமாறு ஏற்படலாம்:

 • உடலின் பல பாகங்களில் தோன்றுவது: சருமநிற மாற்றத்தின் மிகப் பொதுவான வகையான இது உடலின் 2-3 பகுதிகளில் தோன்றலாம்: எந்த உறுப்பிலாவது அல்லது வெளியில் சருமத்திலோ ஏற்படலாம். இவ்வகையானது பொதுவான விடிலிகோ எனப்படுகிறது.
 • உடலின் ஒரே ஒரு பகுதியில் தோன்றுவது: உடலின் ஏதாவது ஒரு பக்கத்தில் ஏற்படும் இவ்வகை சருமப் பிரச்சினை சிறுவயதில் தோன்றி பின்னர் மறைந்துவிடும்.
 • உடலின் சில பகுதிகளில் மட்டும் தோன்றுவது: இவ்வகை சருமநிற மாற்றம் குவிமைய விடிலிகோ எனப்படும்; இதன் விளைவு என்னவென கணிப்பது கடினம். சிலசமயம் வெண்படலம் பரவுவது தானே நின்றுவிட, இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சருமத்தை மீண்டும் பழைய நிறத்துக்குக் கொண்டுவர மிகவும் அவதிப்படுவர்.

முகத்தில் வெள்ளைக் குறியீடுகள்

முகத்தில் சருமநிறமாற்றம் ஏற்படுவதே விடிலிகோவின் மோசமான கட்டம் ஆகும். பின்வரும் நோய்களின் காரணமாக முகத்தில் விடிலிகோ ஏற்படலாம்.

 • சொரியாஸிஸ்: இப்பொதுவான தீவிர சருமநோயில் ரத்தத்தின் செல்கள் சருமத்தின் மீது வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. தோலின் செல்கள் அதிக வேகத்தில் சருமத்தின் மேற்பரப்பில் வளர்கின்றன. இதனால் தீவிரமான அரிப்பு ஏற்படுவதுடன் தோலும் காய்ந்துவிடும். பூச்சிக்கடி, புகைபிடித்தல், வைட்டமின் ‘D’ குறைபாடு, மனச்சோர்வு ஆகியவற்றால் சொரியாசிஸ் ஏற்படலாம். சிலருக்கு மது அருந்துவதாலும் இது ஏற்படும். இதனால் முகத்தில் வெள்ளைக் குறியீடுகள் நிரந்தரமாகத் தோன்றலாம்
 • எக்செமா: தோல்நோயின் இத்தீவிர நிலையில் வீக்கம் நாளடைவில் வெள்ளைக் குறியீடுகளாக மாறிவிடும். குழந்தைகளை இது அதிகளவில் தாக்குகிறது; இதைச் சிகிச்சை மூலம் குணமாக்கி விடலாம். குணமாகி விட்டாலும் அறிகுறிகள் வாழ்நாள் முழுதும் உடலில் தங்கிவிடும். கடும் அரிப்பு ஏற்பட்டு, அத்துடன்கூட சருமத்தின் மேற்பரப்பு முழுவதும் தோல் தடிமனாகவும் ஆகிவிடும். முகத்திலும் முதுகிலும் கைகளிலும் இப்படித் தோன்றும் வாய்ப்புண்டு.
 • சத்துக் குறைபாடுகள்: வைட்டமின் ‘D’, வைட்டமின் ‘E’, கால்சியம் போன்ற சத்துக் குறைபாட்டினால் உண்டாகும் சருமநிற மாற்றம் முகம் & உடலின் பிற பகுதிகளில் வெள்ளைக் குறியீடுகளை உருவாக்கும். இது தொற்று நோயல்ல என்றாலும், உங்களது தன்னம்பிக்கையின் மீது ஒரு ஆறாத வடுவை ஏற்படுத்தி விடும். ஆரோக்கியமான, சமநிலையுடன் கூடிய உணவுத்திட்டத்தைப் பின்பற்ற வேண்டுமென்பதையே சத்துணவுக் குறைபாடுகள் உங்களுக்கு உணர்த்துகின்றன.
 • செபார்ஹிக் டெர்மைடிஸ்: இவ்வகை சரும வியாதியில் தீவிர அரிப்பு, ஈறு ஆகியவற்றுடன் முகம், சருமம், உச்சந்தலை, மார்பில் சருமம் சிவப்பாக ஆகிவிடும். வயது வந்தவர்களுக்கு உயரழுத்த மனச்சோர்வால் இந்த வியாதி வரலாம்; பாக்டீரியாவாலும் வரக்கூடும். பூஞ்சை எதிர்ப்பு க்ரீம்கள், மருந்து போலுள்ள ஷாம்பூக்கள் ஆகியவற்றால் அறிகுறிகளை சரிசெய்து விடலாம். வெள்ளைக் குறியீடுகளை உண்டக்கும் இந்நோய் உங்களது முகத்தைத் தாக்காமலிருந்தால் அது உங்களது அதிருஷ்டமே. 

வெள்ளைப் படலத்தைக் குணப்படுத்தும் வீட்டு வைத்தியம்:

சருமநோய் நிபுணரிடம் ஆலோசனை பெற்றால் அவர் உங்களது சருமத்தின் தன்மைக்கு ஏற்ப மருந்துகளைத் தருவார். ஆனாலும், தோலுக்கான சிகிச்சை பெறுகையில் சிலவகை வீட்டு வைத்தியங்களை நீங்கள் நிச்சயம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வெண்படலத்திற்கான சிகிச்சையாக பின்வரும் வீட்டு வைத்தியங்களைச் செய்து பார்க்கலாம்:

 • நீரருந்தவும் சமைக்கவும் செம்புப் பாத்திரங்களை பயன்படுத்துங்கள்; முக்கியமாக, முன்தினம் இரவே நிரப்பப்பட்ட செம்புப் பாத்திரத்தில் உள்ள நீரை அருந்துவது மிகவும் நல்லது.
 • அத்திக்காயை உண்ணவும்.
 • இஞ்சிச் சாறைக் குடித்தால் சருமத்திலுள்ள வெண்படலங்களுக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.
 • மாதுளம் இலைகளைக் காயவைத்து பொடியாக அரைக்கவும். நீரில் 8 கிராம் பொடியைப் போட்டு ஒவ்வொரு காலையும் அருந்தவும்.
 • சமைத்த காய்ந்த இலைகள், பழங்கள் மற்றும் பூக்களைச் சம அளவு உட்கொள்ளவும். இக்கலவைப் பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்து நீரில் கலந்து உட்கொள்ளவும்.
 • அடிக்கடி மோர் குடிக்கவும்.

குறிப்பு: அனைத்து வகை வீட்டு வைத்தியங்களும் பலன் தரும்; ஆனால் உங்களது விடிலிகோ நிலைமை பற்றி சருமநோய் நிபுணரிடம் ஆலோசனை பெற்ற பின்னரே மேற்குறிப்பிட்ட மருந்துகளை நீங்கள் உட்கொள்ள வேண்டிய அளவு பற்றி முடிவு செய்ய வேண்டும். 

எப்போது டாக்டரிடம் சென்று ஆலோசனை பெறுவது?

உடலின் எப்பகுதியிலாவது வெண்படலம் தெரிந்தால் அதைத் தீவிரமான ஒரு அறிகுறியாக நீங்கள் கருதவேண்டும். அது சொறியாக இருக்கலாம் என்பதை மறவாதீர்கள். உடனடியாக சருமநோய் நிபுணரிடம் சென்று பார்க்காவிட்டால் பெரிய பிரசினையாக ஆகிவிடும். விடிலிகோவுடன் தொடர்புடைய பின்வரும் அறிகுறிகள் இருந்தால் உடன் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறவும்.

சருமம், தலைமுடி/கண்களில் சில குறிப்பிட்ட பகுதிகள் இயல்பான நிறத்தை இழக்க ஆரம்பித்தால் நிச்சயம் மருத்துவரிடம் செல்லவும்.

மேலும், விடிலி���ோவை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்பதையும் சிகிச்சையானது வெண்படலம் பரவுவதை நிறுத்துவதற்காகவே என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

வெண்படலம் தோன்றாமல் தடுக்கும் வழிகள்:

உடலில் எங்காவது வெண்படலம் இருந்தால் உங்களது சருமத்தின் நிலைமை பற்றித் தெரிந்து கொள்ள முதலில் சருமநோய் நிபுணரிடம் செல்லவும். இந்த வெண்படலங்கள் உடலின் பிற பகுதிகளுக்கு பரவுவதைத் தடுக்க சிலவழிகள் உள்ளன. பின்வருவனவற்றை சரிவரக் கடைப்பிடித்து வந்தாலே இந்த வெண்படலத்திலிருந்து நீங்கள் தப்பிக்கலாம்:

 • மனச்சோர்வு அடையாமல் காத்து வந்து, மனச்ச்சோர்வு வரும்போது மனதை ரிலாக்ஸ் செய்ய முயற்சிக்கவும்.
 • ·உடலிலுள்ள எண்ணெயை முழுவதுமாக எடுத்துவிடும் குளியல் சோப்பு வகைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
 • ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் வரை குளிக்கவும்.
 • அதிகாலை சூரியஒளி உடலில் படும்படி 15-20 நிமிடங்கள் நிற்கவும்.
 • உங்களுக்கு சற்றும் ஒவ்வாத க்ரீம்களையோ அழகு சாதனங்களையோ பயன்படுத வேண்டாம்.
 • இரும்புச்சத்து அதிகமுள்ள புலால் உணவு, தானியங்கள், பீன்ஸ் மற்றும் இலையுள்ள காய்கறிகளை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும்.
 • கடல் உணவை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
 • லூகோடெர்மா நோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொள்ள விருப்பமில்லை என்றால் உப்பு, சோடியம் ஆதாரமாக உள்ள உணவைத் தவிர்க்கவும். 

குறிப்பு: சருமநோய் நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைச் சருமத்தின் சிகிச்சைக்காக நீங்கள் உட்கொள்ளும்போது மட்டுமே மேற்சொன்ன அனைத்து குறிப்புகளையும் நீங்கள் பின்பற்றலாம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தொற்றிக்கொள்ளும் தீவிர நோயாக வெண்படலத்தை பலர் நினைப்பதில்லை; சமூகத்தில் நீங்கள் செயல்படும் விதத்திலும் உங்களது தன்னம்பிக்கையிலும் பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தக்கூடும். அடிக்கடி வெண்படலம் என்ற தலைப்பில் கேட்கப்படும் பின்வரும் கேள்விகள் இதுகுறித்து உங்களுக்கு மேலும் புரியவைக்கும்:

 1. வெண்படலங்களை சிகிச்சையால் குணமாக்க முடியுமா?

மருத்துவ ரீதியாக விடிலிகோ எனக் கூறப்படும் வெண்படலங்களை முற்றும் குணமாக்க முடியாது; ஆனால் அவை உடலில் பரவாமல் தடுக்க முடியும். வாழ்நாள் முழதும் உடலில் தங்கும் இவ்வகைப் படலங்கள் தனிநபருடைய சமுதாயம் பற்றிய எண்ண ஓட்டத்தையும் மாற்றியமைக்கக் கூடியவை.

 1. வெண்படலம் உருவாகாமல் இருக்க தவிர்க்கப்பட வேண்டிய உணவு வகைகள் எவை?

நீங்கள் உட்கொள்ளும் உணவும் உங்கள் சருமத்தில் தாக்கம் ஏற்படுத்துகிறது. சில உணவுகள் பலருக்கு ஒவ்வாததாக இருக்கலாம். சில உணவு வகைகள் வெண்படலத்தைத் தீவிரமாக்கி மேலும் பரவச் செய்யும். வெண்படலத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பின்வரும் உணவு வகைகளைத் தவிர்த்தாக வேண்டும்:

 • காஃபி;
 • சிட்ரஸ் பழங்கள்;
 • தயிர்;
 • கடல் உணவு;
 • நெல்லிக்காய்; மற்றும்
 • மது. 

வெண்படலங்கள் உள்ள நபருக்கு அவை மிகக் கொடுமையான அனுபவத்தை தரும். இது சாதாரண நிகழ்வு என்றே அறிவியல் கூறினாலும், பாதிக்கப்பட்ட ஆணும் பெண்ணும் ஒவ்வொரு நாளும் காலையில் விழிக்கும்போது இந்த கசப்பான உண்மையைப் பெரிதாக உணர்வார்கள். இச்சரும நிலையானது மனச்சோர்வு மற்றும் பிற உளவியல் ரீதியான பிரச்சினைகளை உருவாக்கி சமூகம் பற்றிய ஒருவரது எண்ண ஓட்டத்தையும் அவரது வளர்ச்சியையும் பாதிக்கும். வெண்படலத்தை உடலில் பார்த்த அடுத்த கணமே உடனடியாகச் சென்று சருமநோய் நிபுணரைப் பார்த்து அது மேலும் உடலில் பரவாமல் இருக்கவும் சருமம் மேலும் நிறமிழக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். ‘வந்தபின் சிகிச்சை அளிப்பதைவிட நோய் வருமுன் காப்பது நல்லது’ என்பதை எப்போதும் மறக்காதீர்கள். 

குர்கான் நகரின் கேர் & கியூர் க்ளினிக்கில் பணிபுரியும் டாக்டர் சிராக் சத்தா அவர்கள் சருமநோய் நிபுணர், அழகுச்சிகிச்சை நிபுணர் மற்றும் முடிமாற்றுச் சிகிச்சை நிபுணரும் ஆவார். 8 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த இவர் MBBS பட்டப்படிப்பை 2011இல் முடித்து அதன் பின்னர் MUHS மூலம் BUV & MD (சரும சிகிச்சை, பால்வினை மற்றும் தொழுநோய் சிகிச்சை நிபுணர்) போன்ற பட்டங்களை 2017இல் படித்து முடித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.