தலை முடி காக்கும் பூண்டின் மகத்துவம்

  0

  பூண்டு என்பது நம் உணவுகளில் பற்பல ஆண்டுகளாக உள்ள மூலிகை. ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த மூலிகையை, ருசிக்காகவும் அதன் மருத்துவ குணத்திற்காகவும் நாம் பயன்படுத்தி வருகிறோம். இப்போது, பல மருத்துவர்கள் உணவில் பூண்டு சேர்க்க வேண்டும் என்று சொல்வதுடன் அதை மாத்திரையாகவும் கொடுக்கிறார்கள். காரணம், இதயம், ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து, வயிற்றுப் பிரச்சனை, மாரடைப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து பூண்டு நம்மைப் பாதுகாக்கிறது.

  Garlic Health Benefits

  பூண்டு குறிப்பிடத்தக்க மருத்துவ குணங்கள் நிறைந்தது. அதைப் பற்றி பார்ப்பதற்கு முன்பு, இந்த மூலிகை குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்:

  • விளைவிக்கப்படுவதில் ஏறத்தாழ 90% பூண்டு கலிஃபோர்னியாவில் இருந்து வருகிறது.
  • கொசுவை விரட்டுவதில் பூண்டு முக்கியமான பங்கு வகிக்கிறது.
  • ஜலதோஷம் மற்றும் இருமலுக்கும் பூண்டைப் பயன்படுத்துவார்கள்.
  • பாக்டீரியா மற்றும் ஃபங்கல் தொற்றுகளில் இருந்தும் பூண்டு நம்மைக் காக்கிறது.
  • மாதவிடாய்ப் பிரச்சனைகள் மற்றும் ரத்தத்தில் அளவுகடந்து கொழுப்புச் சத்து ஆகியவற்றையும் பூண்டு கட்டுப்படுத்துகிறது.
  • புற்றுநோய்க்கு எதிரான எதிர்ப்புசக்தியைக் கொடுக்கிறது.
  • காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, வயிற்று வலி, சைனஸ் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த வீட்டுமருந்து.
  • முடி உதிர்வதற்கு நல்ல மருந்து.
  • ஆங்கிலத்தில் பூண்டின் அறிவியல் பெயர் அல்லியம் சாட்டிவம் (Allium Sativum)

  பூண்டில் இருக்கும் மருத்துவ குணங்கள்

  • செலீனியம்: நம் செல்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை சீர்செய்ய ஒரு வகையான புரதச் சத்து தேவை. அந்தப் புரதத்தை உருவாக்க நம் செல்களுக்கு செலீனியம் தேவை.
  • வைட்டமின் சி: எலும்பு, தோல், நரம்புகள் போன்றவற்றிலுள்ள திசுக்கள் வளர்ச்சியடைய வைட்டமின் சி மிக மிக அவசியம்.
  • வைட்டமின் பி6: நரம்பு மண்டலத்திற்கு மிகவும் முக்கியம்.
  • நார்ச்சத்து: சாப்பிட்டு வெகுநேரம் பசியில்லாமல் இருப்பதற்கும், ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்தைக் கட்டுப்படுத்தவும் நார்ச்சத்து மிகவும் அவசியம்.
  • மாங்கனீஸ்: நம் மூளை சாதாரணமாக வேலை செய்ய மிகவும் தேவையான பொருள். நம் நரம்பு மண்டலம் சாதாரணமாக இயங்கவும், உடலிலுள்ள என்ஸைம்கள் சீராக இருப்பதற்கும் நம் உடலில் 20 மில்லிகிராம் மாங்கனீஸ் இருக்க வேண்டியது கட்டாயம்.

  பூண்டு செய்யும் நன்மைகள் 

  1. இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது

  தினமும் நம் உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வது எந்த வகையிலான இதயக் கோளாறுகளையும் தடுக்கிறது. உணவில் ஏதோ ஒரு வகையில் தினமும் பூண்டைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும் அல்லிஸின் போன்ற ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் பூண்டில் அதிகமாக இருக்கிறது.

  2. புற்றுநோயில் இருந்து பாதுகாக்கிறது

  மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய், ப்ராஸ்டேட் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களை எதிர்த்துப் போராடுகிறது. நம் உடலில் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதன் மூலம், பல நோய்களில் இருந்தும் நம்மைக் காக்கிறது.

  3. பாக்டீரியா தொற்றுகளைத் தடுக்கிறது

  ஃபங்கஸ், பாக்டீரிய பிரச்சனைகளில் இருந்து நம் உடலைக் காக்கிறது. குறிப்பாக, பற்கள் தொடர்பான பிரச்சனைக்கு பூண்டு வைத்து வாயைக் கொப்பளித்தால் பற்களில் உள்ள பாக்டீரியாக்களை அழித்துவிட முடியும்.

  4. ஜலதோஷம் மற்றும் காய்ச்சல்

  ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் இருந்தால் ஒரு பல் பூண்டை எடுத்து அதை கஷாயத்திலோ, தேநீரிலோ கலந்து குடித்தால் போதும்! உடனடி நிவாரணம் நிச்சயம். சூப்பாக அல்லது ரசமாகவோ கூட வைத்துச் சாப்பிடலாம்.

  5. ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது

  ரத்தத்தில் அதிகமான நச்சுப் பொருள் இருப்பவர்கள் தினமும் பூண்டு சாப்பிடுவது ரத்தத்தைச் சுத்திகரிக்க உதவுகிறது. மேலும், முகத்தையும் பொலிவாக்குகிறது. சுடுதண்ணீரில் இரு பற்கள் பூண்டைப் போட்டுக் குடித்துவிட்டு, நாள் முழுவதும் தண்ணீர் குடித்துக் கொண்டே இருந்தால் போதும்; உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

  6. ஆண்டி ஏஜிங் பண்புகள் உள்ளன

  முகத்தைப் பொலிவாகவும், சுருக்கமில்லாமல் வைப்பது மட்டுமல்லாமல், திசுக்கள் வேகமாக வயதானது போல ஆவதையும் இது தடுக்கிறது. மேலும், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளைத் தவிர்த்து அமைதியான மனநிலையைக் கொடுக்கிறது.

  அனைத்து விதமான முடிப்பிரச்சனைகளுக்கும் அருமருந்து

  • முடி உதிர்வதைத் தடுக்க, இளம் சூடான தேங்காய் எண்ணெயில் பூண்டை அரைத்துக் கலந்து அதைத் தலையில் மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து குளித்துவிட வேண்டும்.
  • நல்ல பளபளப்பான, கறுநிற கூந்தலிக்கு, சிறிது இஞ்சி மற்றும் பூண்டை அரைத்து அதை சிறிது எண்ணெயில் கலந்து சூடு செய்து, அந்தக் கலவை பொந்நிறமானதும், அடுப்பை அணைத்து விட வேண்டும். அது ஆறியதும், அந்தக் கலவையை வெளியே எடுத்துவிட்டு எண்ணெயை மட்டும் தலையில் தேய்த்து, அரை மணி நேரம் கழிந்த பின்பு குளித்து விடலாம்.
  • பொடுகுத் தொல்லைக்கு, சிறிது பூண்டுப் பொடியை எலுமிச்சையுடன் கலந்து தலையில் மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
  • பேன் பிரச்சனைக்கு, மூன்று பல் பூண்டை அரைத்து அத்துடன் எலுமிச்சை கலந்து தலையில் மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து குளித்துவிட்டால் போதும்.

  சருமப் பிரச்சனைகளுக்கும் பூண்டுதான்

  • முகப்பரு வராமல் தடுக்கிறது. காரணம், பூண்டில் இருக்கும் அல்லிஸின் என்ற பொருள் பாக்டீரியாவை அழித்து முகப்பரு ஏற்படாமல் தடுக்கிறது.
  • சோரியாஸிஸ் பிரச்சனை இருப்பவர்கள் பூண்டை நசுக்கி சுடுதண்ணீரில் கலந்து அதில் குளித்தால், அப்பிரச்சனை நீங்கும்.
  • ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் போக வைக்க, பூண்டை அரைத்து அதை அடுப்பில் சூடாக்க வேண்டும். அதில் எண்ணெய் பிரிந்து வந்ததும் ஆற வைத்து, எண்ணெயை மட்டும் எடுத்து ஸ்ட்ரெட்ச் மார்க்ஸில் தடவினால் போதும். தினமும் இரு முறை தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் நல்லது.

  பூண்டு மிகவும் நல்ல மருத்துவ மூலிகை. அதற்காக அளவுகடந்து சாப்பிட்டுவிடக் கூடாது. அப்படிச் செய்தால், வாயில் அதிகமான பூண்டு வாசம், வாய் மற்றும் வயிற்றில் எரிச்சல், வாயுத்தொல்லை, வயிற்றுப் போக்கு மற்றும் வாந்திகூட ஏற்படலாம். பூண்டு உங்களுக்கு ஒவ்வாமல் போனால், மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுப் பிறகு பயன்படுத்தவும். பூண்டை சமைத்துச் சாப்பிடுவதைவிடப் பச்சையாகச் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. சாலட் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடுங்கள். காலை, இரவு என்று எப்போது வேண்டுமானாலும் அளவுடன் பூண்டைச் சேர்த்துக்கொள்ளலாம். இரவு பூண்டு சாப்பிடுவதால் தூக்கம் நன்றாகவும் வரும். எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற அளவுதான் முக்கியம்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.