ஆயுர்வேதத்தைப் பின்பற்றும் மக்கள் கடந்த 4000 ஆண்டுகளுக்கும் மேலாக முருங்கையைப் பயன்படுத்திவருகின்றனர். அற்புத முருங்கை, அற்புத மரம். வைட்டமின் மரம் என முருங்கை மரத்துக்குப் பல பெயர்கள் உண்டு. 12க்கும் மேற்பட்ட வகையில் முருங்கை மரங்கள் உள்ளன. ஆயினும், இதில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது மொரிங்கா ஓலிஃபெரா வகையே. இதை பென்ஆயில் மரம் அல்லது ட்ரம்ஸ்டிக் (முருங்கை) என்றும் சொல்வர். இருக்கும் சூப்பர் உணவுகளில் மிகச்சிறந்த முருங்கையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்கள் பல அடங்கியுள்ளன.
சத்து மிகுந்த இவ்வுணவில் ஆரஞ்சு பழத்தை விட 7 மடங்கு அதிகமான வைட்டமின் C, கேரட்டைவிட 4 மடங்கு அதிக வைட்டமின் A, பாலிலுள்ளதை விட 4 மடங்கு கால்சியம் மற்றும் 2 மடங்கு புரோட்டின் மற்றும் வாழையில் உள்ளதை விட 3 மடங்கு அதிக பொட்டாசியம் அடங்கியுள்ளது. இதிலுள்ள பீட்டா-சைடோஸ்டெரால், ஜியாடின், க்வெர்செடின், காம்ப்ஃபெரால் மற்றும் காஃபோயில்கினிக் அமிலம் போன்ற பைடோ-சத்துக்கள் ஆரோக்கியத்துக்கு முருங்கை சிறந்தது எனக் கருத வைக்கின்றன. இந்த பைடோ-சத்துக்கள் நோய் வராமல் தடுக்கத் தேவையானவை. உடலின் சுழற்சிமுறையை தூண்டி இதயத்தைப் பாதுகாத்து, சீரற்ற இயக்கம், நீரிழிவு, ஹைப்பர்டென்ஷன், அல்சர் மற்றும் காக்காய் வலிப்பு ஆகியவற்றுக்கெதிராகக் காப்பாற்றுகிறது.
ஆக்ஸிடண்ட் எதிர்ப்பு, வீக்க எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு குணங்கள் முருங்கையில் உள்ளன. இதன் பல பாகங்களான இலைகள், பழங்கள், விதைகள் சீராகப் பயன்படுத்தப்படுவதால் இயற்கை தரும் மிகப்பயனுள்ள மரங்களுள் இதுவும் ஒன்றாகி விட்டது. பல வடிவங்களில் இதை உட்கொள்ளும் மக்கள் இதனால் ஆதாயமடைகின்றனர். இது பொடி, எண்ணெய், துணை மாத்திரை மற்றும் சமைக்கப்பட்ட பழங்கள் மற்றும் இலைகள் வடிவங்களில் பயன் தருகிறது. முருங்கைப் பொடியை சூடான நீரில் கலந்து தேநீர் தயாரித்து குடிப்பது இதை உண்ணும் சிறந்த வழிகளுள் ஒன்றாகும்; ஏனேனில் சூடான் நீரானது முக்கிய சத்துக்கள், பைடோசத்துக்களை உறிஞ்சிவிடும். பிசியாக அலுவலக வேலை செய்வோர் பழங்கள், இலைகளை வைத்து சமைக்க நேரமில்லாத பட்சத்தில் மொரிங்கா மாத்திரைகள் (அ) துணை மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளலாம்.
இமயலமலை அடிவாரத்தில் முதன்முதலில் விளைந்த முருங்கை மரம் வெப்பமண்டலம், துணை வெப்பமண்டலம் மற்றும் பாதி வறண்ட இடங்களில் உலகெங்கிலும் விளைகிறது. இதன் ஆதாயங்கள் பல என்பதால், அதில் சில முக்கிய ஆதாயங்களை இக்கட்டுரை மூலம் நீங்கள் புரிந்து கொள்ள நாங்கள் உதவுகிறோம்.
Contents
சத்து ரீதியான ஆதாயங்கள்
முருங்கை ஒரு சத்துள்ள சூப்பர் உணவாகும். இதில் உடலுக்குத் தேவையான 90க்கும் மேலான அனைத்து சத்துக்களும் உள்ளன. முருங்கை இலைகள், சக்கைகளை சமைத்தோ சமைக்காமலோ உண்ணலாம். புரோட்டீன், இரும்பு, கால்சியம், வைட்டமின் B6, A & C, ரிபோஃப்ளாவின் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் கணிசமான அளவில் இதில் உள்ளன. ஒரே ஆதாரத்திலிருந்து இத்தனை சத்துக்கள் கிடைப்பது ஒரு நம்பமுடியாத அற்புதம்; எனவே, இதை சாப்பிடாமல் விட்டுவிடாதீர்கள்.
ஆக்சிடண்ட்-எதிர்ப்பு அதிகமுள்ளது
ஆண்டி-ஆக்சிடண்ட் குணம் பிறவற்றில் உள்ளதை விட முருங்கையில் அதிகம் இருப்பது சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது; இதிலுள்ள பல்வேறு ஆண்டி-ஆக்சிடண்டுகள் உடலிலுள்ள தீய வேதிப்பொருட்களுக்கெதிராக செயல்புரிகிறது. இப்பொருட்களால் உடலில் ஆக்சிடேட்டிவ் மனச்சோர்வு உருவாகி அதனால் இதய நோய், 2ஆம் வகை நீரிழிவு நோய் ஏற்படலம். வைட்டமின் C, பீட்டா-கரோடீன், க்வெர்செடின், க்ளோரோஜெனிக் அமிலம் ஆகிய தனிமங்கள் வேதிப்பொருட்களை எதிர்க்கும். மாமிசத்தை அதிகநாள் கெடாமல் வைத்திருக்க முருங்கைப் பொடியை உணவைப் பாதுகாக்கவும் பயன்படுத்தலாம். ஆக்ஸிடேஷன் செய்முறையை மெதுவாக ஆக்குவதன் மூலம் இது செயல்படுகிறது.
வீக்கத்திற்கெதிரான குணங்கள்
முருங்கை எண்ணெயை அதன் சிகிச்சை குணங்களுக்காக மக்கள் பயன்படுத்துகின்றனர். உடல் வீக்கத்தை குறைப்பது இதன் முக்கிய குணங்களுள் ஒன்றாகும். உடலில் தொற்று/காயம் ஏற்பட்டால் அதற்கெதிராக உடல் வெளிப்படுத்தும் அறிகுறியே வீக்கமாகும். அவ்வப்போது தோன்றும் இது நீண்டகாலம் இருப்பது நல்லதல்ல. பாதிக்கப்பட்ட இடத்தில் முருங்கை எண்ணெயை நேரடியாகத் தடவ விருப்பமில்லை எனில், இதன் பகுதிகளான இலைகள், தண்டு (அ) விதைகளை நீங்கள் உட்கொள்ளலாம்.
நீரிழிவு நோயை எதிர்க்கும் குணங்கள்
முருங்கையை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமான அளவு குறைவது தெரியவந்துள்ளது. ஐசோதியோசயனேடுகள் முருங்கை இலைக்கு இக்குணத்தைத் தருவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்; இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கணிசமாகக் குறைத்து விடுகிறது.
கொலஸ்டிராலைக் குறைக்க உதவுகிறது
ப்ளாக்ஸ் விதை, பாதாம், ஓட்ஸ் போல மொரிங்கா ஓலிஃபெராவும் ரத்தத்தில் கொலஸ்டிராலின் அளவைக் குறைக்கிறது. கொலஸ்டிரால் அளவைப் பராமரிக்க மொரிங்கா சிறந்தது என விரிவான ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. பார்க்க LDL போன்றிருக்கும் பீடா-சிடோஸ்டெரால் என்ற சத்து இதற்கு இக்குணத்தைத் தருகிறது. இரத்தக் குழாய்கள் கொலஸ்டிராலை உறிஞ்சுவதை இது குறைக்கிறது. படிவம் தங்கி விடாமல் தடுப்பதால் தீவிர இதயநோய்களான ஹைப்பர்டென்ஷன், வாதம் மற்றும் மாரடைப்பு ஆகியவை ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
அதீத சத்துக்கள் உள்ள முருங்கை உடலில் பல்வேறு விதமான நோயெதிர்ப்பு சக்திகளையும் அதிகரிக்கிறது. நோயெதிர்ப்பு கட்டமைப்பு சீராக வேலை செய்ய உதவும் வைட்டமின் A இரும்பு ஆகியவை இதிலிருப்பதால் இதன் நோயெதிர்ப்பு சக்தி அபாரமானது. இதன் மூலம் நிகழ்த்தப்பட்ட பல ஆய்வுகளில் புற்றுநோயைத் தடுக்கும் முருங்கை இலைகளின் அபரிமிதமான திறன் வெளிப்பட்டது. புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் உடலில் உருவாததை தடுத்து புற்றுநோய்க்கு எதிரான திறன்மிக்க ஏஜெண்டாக இது செயல்படுகிறது.
மேலும் படிக்க
தசைவளர்ச்சி
அதிக புரோட்டீன்கள் இருப்பதால், தசை வளர்ச்சி பெற இது மிகச்சிறந்த உணவாகும்; மேலும் உடலின் தசை நிறையைப் பராமரிக்கவும் இது உதவுகிறது. முருங்கை இலைகளில் 9 முக்கிய அமினோ அமிலங்கள் அடங்கிய புரோட்டீன்கள் 25% இருப்பதால், சிறந்த புரோட்டீன் ஆதாரமாகவும் இது உள்ளது. செடியில் இந்த அளவு அதிக புரோட்டின் இருப்பது அரிது; எனவே, சைவ உணவு உண்பவர்களின் தசை வளர்ச்சிக்கு இது மிகச்சிறந்தது.
தோல் பராமரிப்பு
இயற்கையிலேயே பளபளப்பான சருமம் பெறுவதற்கு வீக்கம், ஆக்சிடண்ட், வயதாகுதலுக்கெதிரான குணங்களைக் கொண்டுள்ள முருங்கை எண்ணெய் சிறப்பான தேர்வாகும். மிருதுவான, பளபளப்பான சருமம் பெற மிகவும் அவசியமான ’ரத்தத்தை சுத்தப்படுத்தும்’ பணியை இது செய்கிறது. வைட்டமின்கள் A மற்றும் E அடங்கிய முருங்கை பளபளப்பான சருமம் பெறவும் வயதாகும் அறிகுறிகள் தோன்றாமலிருக்கவும் உதவுகிறது. சரும செல்களைப் பழுதுபார்த்து, ஆக்சிடேட்டிவ் மனச்சோர்வை எதிர்த்து, கொலாஜென் சேதாரத்தை இது குறைக்கிறது. மேலும், சருமம் காய்ந்துபோய் விடாமல் பார்த்துக்கொண்டு கோடுகள்/சுருக்கஙக்ள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
தலைமுடி பராமரிப்பு
முருங்கை எண்ணெய் பயன்படுத்தினால் மிருதுவான பளபளப்பான தலைமுடியைப் பெறலாம். தினமும் நீங்கள் பயன்படுத்தி வரும் எண்ணெயுடன் சிலதுளிகள் முருங்கை எண்ணெயைக் கலந்து தலைஉச்சியில் தடவி வந்தால் தலை நுண்ணறைகள் ஆரோக்கியமடையும். தலைமுடியின் அடிப்பகுதியில் இதைத் தடவினால் முடி கொட்டுவதும் தடுக்கப்படும். காய்ந்த தலை உச்சி, தலைமுடி உள்ளவர்களுக்கு இது பலன் தரும். ஏனெனில் இது முடியின் மிருதுத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது. புரோட்டின் உட்பட பல சத்துக்களை நுண்ணறைகளில் இது செலுத்துவதால் தலைமுடிக்குப் புத்துணர்வூட்டி முடியை வலுவாக ஆக்கி, முடிகொட்டுவதையும் தவிர்க்கும்.
முடிவுரை
இப்போதெல்லாம் பாரம்பரிய மருந்துகளுக்கு பதிலாக மக்கள் மூலிகை மருந்துகளைத் தேர்வு செய்ய ஆரம்பித்து விட்டனர். இத்தகைய மருந்துகளால் பொதுவாக குறைந்த பக்கவிளைவுகளும் பல ஆதாயங்களும் இருப்பதே இதற்கான காரணம். உங்களது ஆரோக்கியத்தை அபிவிருத்தி செய்ய முருங்கை மிக முக்கியமான மூலிகை ஆகும். அன்றாடம் உணவில் முருங்கையை ஏதாவது ரூபத்தில் சேர்த்துக் கொண்டால் கணிசமான அளவு உடல்நலம் அபிவிருத்தி அடைவதை உங்களால் உணரமுடியும். பொதுவாக மூலிமை மருந்துகளை உட்கொள்ள அளவு சொல்லப்படுவதில்லை; ஆயினும், உங்களது எடையின் ஒரு கிலோவுக்கு 29 மில்லிகிராம் என்ற அளவு வரை நீங்கள் உட்கொள்ளலாம் என்பதே பல மூலிகையாளர்களின் கருத்து. முதலில் குறைந்த அளவு உட்கொண்டு உடல் அதற்கு எப்படி எதிர்வினை புரிகிறது என்பதைக் கவனித்தபின் அதிகளவு உட்கொள்ளவது பற்றி முடிவெடுக்கலாம்.