கடும் உடற்பயிற்சி வகுப்புகளால் நீங்கள் களைப்படைந்துவிட்டீர்களா? சரி, அப்படியானால் ஒரு ஆரோக்கியமான உணவுத் திட்டத்துக்கு மாறிவிடலாமென யோசனை உண்டா? இது ஒரு 7 நாள் வெள்ளரிக்காய் உணவுத் திட்டம்; எடை அதிகரிப்பு மற்றும் உடல் திறன் இலக்குகளை நோக்கிப் பயணித்த பலருக்கு இத்திட்டத்தினால் பலன் கிடைத்துள்ளது.
வார இறுதி நாட்களில் உண்ணும் சத்தற்ற உணவுகளில் உள்ள நச்சுக்களை நீக்க மிகச்சிறந்த நிவாரணி இதுவே. எனவே உங்களுக்கான ஒரு பிரத்தியேக வெள்ளரிக்காய் உணவுத் திட்டத்தைத் தருகிறோம்: ஆரோக்கியமான இந்த உணவுத் திட்டம் எவ்விதப் பக்க விளைவுகளுமின்றி எடையைக் குறைக்க உதவும். ஆயினும், வேறெதற்காவது மருந்து உட்கொண்டு வருகிறீர்கள் என்றால், மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின்பே இத்திட்டத்தையோ (அ) வேறு எடை குறைப்பு / நிர்வாகத் திட்டத்தையோ பின்பற்ற வேண்டும்.
சரி, வெள்ளரிக்காயை ஏன் நம்பவேண்டும்? ஏனெனில் யாருமே அலட்சியம் செய்ய முடியாத பல ஆரோக்கியப் பலன்கள் இதில் உள்ளன.
Contents
1. வெள்ளரிக்காயின் 5 ஆரோக்கியப் பலன்கள்
- மிகக் குறைவான கலோரிகளே இதில் உள்ளன
- உடலைத் தூய்மையாக்கிடும்
- வளர்சிதை மாற்றத்தைத் தூண்டும்
- குடல்களையும் செரிமானப் பாதையையும் தூய்மையாக்கிடும்
- உபரி நீரை உடலிலிருந்து வெளியேற்றும்
2. 7 நாள் வெள்ளரிக்காய் உணவுத் திட்டம்
- காலை உணவு: 2 வேகவைத்த முட்டைகள், ஒரு ப்ளேட் வெள்ளரி சாலட் ஆகியவறை உண்ணவும்
- காலைச் சிற்றுண்டி: 5 ப்ளம் பழங்கள்/1 பெரிய ஆப்பிள்/1 பீச் பழம்
- மதிய உணவு: டோஸ்ட் ஆன கோதும ப்ரெட் 1 துண்டு, வெள்ளரி சாலட் (ஒரு கிண்ணத்தில்)
- மாலைச் சிற்றுண்டி: 1 டம்ளை வெள்ளரி ஷேக்
- இரவு உணவு: உங்களுக்குப் பிடித்த ஏதாவதொரு பழம்
3. வெள்ளரிக்காய் உணவுத்திட்ட சாலடை எப்படிச் செய்வது?
(தேவையான பொருட்கள்: வெள்ளரி – 400 கிராம், 1 வெங்காயம், தயிர் – 200 மிலி, தேவைக்கேற்ப உப்பு)
- 400 கிராம் வெள்ளரியை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும்.
- அழகாக நறுக்கப்பட்ட வெங்காயத்தை இத்துடன் சேர்க்கவும்.
- 200 மிலி தயிரையும் சேர்க்கவும்.
- சிறிதளவு உப்பைச் சேர்த்துக்கொள்ளவும்.
4. வெள்ளரிக்காய் ஷேக்கை எப்படித் தயாரிப்பது?
(தேவையான பொருட்கள்: வெள்ளரி – 1, ஆப்பிள் – 1, கை நிறைய, கீரை, இஞ்சி – 1 சிறிய துண்டு)
- வெள்ளரியைத் தோல் சீவிச் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
- ஆப்பிளையும் அப்படியே நறுக்கிக்கொள்ளவும்.
- கைநிறைய கீரையை எடுத்துக்கொள்ளவும்.
- கொஞ்சம் இஞ்சியையும் எடுத்துக்கொள்ளவும்.
- அனைத்தையும் ஜூஸரில் போட்டுக் கலக்கி அரைத்து ஜூஸ் போடவும்.
இந்த ஆரோக்கியமான வெள்ளரிக்காய் உணவுத் திட்டத்தை ஒரு வாரம் வரை பின்பற்றிய பின்னர் உங்களது அனுபவத்தை ‘விமர்சனங்கள்’ பகுதியில் பதிவு செய்யவும். மேலும், வாசகர்களின் பலனைக் கருத்தில் கொண்டு உடல்தகுதி / எடைக் குறைப்பு பற்றிய உங்களது கருத்துக்களையும் பதிவு செய்யயுங்கள்.