உங்கள் செக்ஸ் ஆரோக்கியத்தை மேம்படுத்த 8 வழிகள்

உங்கள் செக்ஸ் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்வது முக்கியம். ஏனெனில், நோய்கள் மற்றும் நோய்த்தொற்றிலிருந்து காப்பதோடு, உங்களுக்கு உற்சாகம் அளித்து, செக்ஸ் வாழ்ககையையும் மேம்படுத்துகிறது. இப்போது, செக்ஸ் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தயாரிப்புகள் பல சந்தையில் இருந்தாலும், அவற்றில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்கள் இருக்கக்கூடும்.  எனவே செக்ஸ் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள இயற்கையான அல்லது மூலிகை வழிகளை நாடுவது நல்லது. இதை மனதில் கொண்டு, உங்களுக்குப் பயன்படக்கூடிய குறிப்புகளை இங்கே வழங்குகிறோம்

Sexual Health

1. சீரான உடற்பயிற்சி, சீரான எடை

நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது அது உங்கள் உடல்நலனுக்கு பலவிதங்களில் உதவுகிறது. உடற்பயிற்சி உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது உங்கள் உடல் தகுதியையும் மேம்படுத்தும். இவை இரண்டும் சேர்ந்து உங்கள் செக்ச் துடிப்பை மேம்படுத்தும். நீங்கள் உடல் பயிற்சி செய்யாமல், சோம்பலான வாழ்வியலை பின்பற்றினால், அது உங்கள் உங்கள் செக்ஸ் வாழ்க்கையின் தரத்திலும் பிரதிபலிக்கலாம்.

உடல் பருமன் அல்லது அதிக எடை, ஆண்கள் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டஸ்டிரோன் மீது எதிர்மறை விளைவை உண்டாக்கி, பலவிதமான செக்ஸ் சிக்கலை உண்டாக்கலாம்.

2. வைட்டமின் பி காம்ப்லெக்ஸ் பயன்பாடு

முக்கிய 8 வைட்டமின் பி வகைகளான ( பி1 –தயாமைன், பி2 – ரைபோபிலேவின், பி3 – நியாசின், பி5 பாண்டோதெனிக் அமிலம், பி6 –பைரோடாக்சின், பி7 – பயோடின்,பி9 –போலிக் அமிலம், பி12- கோபலமின் ஆகியவற்றின் தொகுப்பான வைட்டமின் பி காம்ப்லெக்ஸ், உங்கள் உடல் சிறந்த முறையில் செயல்பட அவசியம். வைட்டமின் டி செக்ஸ் செயல்பாட்டை மேம்படுத்தி, மிதமான செக்ஸ் செயலிழைப்பை சரி செய்ய உதவுகிறது. குறி விரைப்பது தொடர்பாக உங்கள் நரம்பு மண்டலத்திற்கு செய்தி அனுப்ப வைட்டமின் பி1 மூளைக்கு உதவுகிறது. விரைப்பதன் மீது நல்லவிதமான தாக்கம் செலுத்தும் உடலின் செக்ஸ் ஹார்மோன்களைச் சமனப்படுத்துவதிலும் இது உதவுகிறது. மனநிலையை மேம்படுத்துவதன் மூலம் வைட்டமின் பி காம்ப்லெக்ஸ் செக்ஸ் இச்சையை ஊக்கப்படுத்துக்கிறது. பெண்களில், வைட்டமின் பி12 அதிகரிப்பது, மேலும் ஆற்றல் அளித்து களைப்பை குறைக்கிறது. ஒட்டுமொத்த செக்ஸ் தூண்டுதலையும் இது மேம்படுத்தும். முழு தானியங்கள், முட்டை, பால் பொருட்கள், நட்ஸ், கீரைகள், பழங்கள் (அவகாடோ, வாழைப்பழம், சிட்ரஸ் பழங்கள்) போன்ற உணவுகளை அதிகம் உட்கொள்வதன் மூலம் வைட்டமின் பி அதிகம் பெறலாம்.

3. தீய பழக்கங்களை விலக்கல்

மது அருந்துவது, புகைபிடிப்பது போன்ற சில பழக்கங்கள் செக்ஸ் ஆரோக்கியம் மீது பாதிப்பை ஏற்படுத்தும். புகைபிடிப்பது, இரத்த குழாய்களை குறுகலாக்குவதன் மூலம் உடலின் பல்வேறு பகுதிகளுக்கான இரத்த ஓட்டத்தை பாதிக்கும். இது பல்வேறு ஆரோக்கிய கோளாறை உண்டாக்குவதோடு மலட்டுத்தன்மையையும் ஏற்படுத்தலாம். அதே போல, ஒரு கிளாஸ் ஒயின் இரத்த ஓட்டத்திற்கு நல்லது என்றாலும், அதிகமாக அருந்துவது ஆண், பெண் இருபாலருக்கும் பாதிப்பை உண்டாக்கலாம். இந்த தீய பழக்கங்களை, தியானம், யோகா போன்றவற்றால் பதிலீடு செய்தால், உங்கள் செக்ஸ் செயல்பாடு மேம்படும்.

4. மன அழுத்தம் தவிருங்கள்

செக்ஸ் செயலின்மைக்கு மன அழுத்தம் முக்கிய காரணமாகிறது. ஆண், பெண்களிலும் இது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதிக மன அழுத்தம் மற்றும் கவலை ஆண்களில் குறி விரைக்காத தன்மையை ஏற்படுத்தலாம்.  உச்சநிலையை அடைவதிலும் பிரச்சினையை எதிர்கொள்ளலாம். மன அழுத்தம் உடலில், அட்ரலைன் மற்றும் கார்டிசால் போன்ற ஹார்மோன்களை சுரக்கச்செய்கிறது. இந்த ஹார்மோன்கள் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் மீது மோசமான தாக்கம் செலுத்துவதோடு, செக்ஸ் இச்சையையும் பாதிக்கலாம்.பெண்களுக்கு மன அழுத்தம் குழந்தை பிறப்பு தொடர்பான ஹார்மோன்களை பாதித்து, மாதவிலக்கு சுழற்சியை சீரற்றதாக ஆக்கி, கர்ப்பமாவதையும் பாதிக்கலாம்.

பணி சூழல் அல்லது உங்கள் அட்டவனை காரணமாக மன அழுத்தத்தை தவிர்க்க முடியவில்லை எனில், அதை குறைப்பதற்கான வழிகளை நாட வேண்டும். தியானம் செய்வது அல்லது அரோமாதெரபியை நாடலாம். இது நாள் முழுவதும் ரிலாக்சாக இருக்க வைக்கும்.

5. செக்ஸ் ஆரோக்கியம் காக்கும் இயற்கை சத்துகள்

உங்கள் செக்ஸ் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள உதவும் பல இயற்கையான பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் மூலிகை சார்ந்தவை மற்றும் எந்த பக்கவிளைவும் இல்லாதவை. இவற்றில் எந்த தீங்கான ரசாயனமும் இல்லை. கருத்தரித்தல் மற்றும் செக்ஸ் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக எடுத்துக்கொள்ளப்படும் சப்ளிமண்டில் ஒன்றாக ஷிலாஜித் இருக்கிறது. விந்துக் கோளாறு, செக்ஸ் பலவீனம் மற்றும் குறைந்த விந்தணு பிரச்சினையை எதிர்கொள்ளவும் இது உதவும். இதற்கு மனதை அமைதியாக்கும் தன்மை உள்ளது. எனவே மன அழுத்தத்தைக் குறைத்து செக்ஸ் இச்சையை அதிகமாக்குகிறது. இதில் பல்விக் அமிலம் இருப்பதால், பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சி சீராக்கத்திலும் உதவும். உடலில் ஆற்றலை மேம்படுத்து, செக்ஸ் விருப்பத்தை அதிகரிக்கும். செக்ஸ் ஆரோக்கியத்திற்காக மூலிகை அல்லது ஆயுர்வேத தயாரிப்புகளை எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் டாக்டரிடம் ஆலோசனை கேளுங்கள்.

6. காபியைக் குறையுங்கள்

காபியில் உள்ள கேபைன், பெண்களின் கருத்தரித்தல் ஆற்றலில் தாக்கம் செலுத்தலாம். அதிக கேபைன் எடுத்துக்கொள்ளும் பெண்கள் மற்ற பெண்களோடு ஒப்பிடும்போது கருத்தரிக்கக் கூடுதலாக 9.5 மாதங்கள் எடுத்துக்கொள்வதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. கர்ப்பமாவதற்கு முன் அதிக காபி எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு கருக்கலைப்பு ஏற்படும் அபாயமும் அதிகம் இருப்பதாகவும் வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உங்கள் குழந்தையின் பிறப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள விரும்பினால், கேபைன் அளவைக் குறையுங்கள். காலையில் புத்துணர்ச்சி பெற காபியை நாடும் பழக்கம் இருந்தால், பழச்சாறு போன்றவற்றைப் பருகலாம்.

7. ஆன்ட்டிஆக்சிடென்ட்டை அதிகமாக்குங்கள்

பீட்டா கரோடின், வைட்டமின் சி, வைட்டமின் இ, துத்தநாகம், செலினியம் ஆகியவை ஆண்கள் மற்றும் பெண்களின் கருத்தரிக்கும் ஆற்றலை மேம்படுத்தும் ஆன்ட்டிஆக்சிடென்ட்களாகும். உடலில் பிரிரேடிகல் பாதிப்புகளை தடுத்து இவை, ஆக்சிடேட்டிவ் ஸ்டிரெஸ் உண்டாவை குறைக்கிறது. உங்கள் உணவில், நிறைய நட்ஸ், தானியங்கள், காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள் நிறைய இருப்பதை உறுதி செய்துகொள்ளவும். இது உங்கள் செக்ஸ் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

8. டிரான்ஸ் பேட் தவிர்க்கவும்

டிரான்ஸ்பேட் உங்கள் செக்ஸ் ஆரோக்கியத்திற்கு தீங்கானது. இவை பெண்களில் மலட்டுத்தன்மை தொடர்புடையதாக கருதப்படுகிறது. மோனோ சாச்சுரேடட் பேட்சிற்கு பதிலாக டிரான்ஸ் பேட் உணவில் அதிகம் இருந்தால், மலட்டத்தன்மை பாதிப்பு அபாயம் 30 % அதிகரிப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. ஆரோக்கியமான, சமமான உணவு செக்ஸ் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். ஒமேகா பேட்டி ஆசிட் போன்றவற்றை உணவில் (ஆலிவ் ஆயில், பீனெட் ஆயில்) சேர்த்துக்கொள்வது செக்ஸ் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

முடிவு

உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்தால் அது உங்கள் வாழ்க்கையிலும் தாக்கம் செலுத்தும். எனவே, இந்தப் பிரச்சினைக்கு உங்கள் துணையுடன் இணைந்து தீர்வு காண்பது முக்கியம். போதிய செக்ஸ் இச்சை இல்லாமல் இருப்பதை தீர்க்க, மூலிகை மற்றும் இயற்கை வழிளை நாடுவது நல்லது. ஏனெனில் இதில் பக்கவிளைவுகள் குறைவு.

கொரோனா வைரஸ் உலகளாவிய ஆபத்தாக மாறிக்கொண்டிருப்பது எப்படி?

கொரோனா வைரஸ் என்பது நம்மிடையே உயிரோடு இருந்து கொண்டிருக்கும் ஒரு வைரஸ். பேரழிவை உண்டு பண்ணிக்கொண்டிருக்கும் ஒரு தொற்றுநோய். இது மிக ஆபத்தான கொலைகார வைரஸாக நம்மைச் சுற்றி,  நம்மிடையே ஏ ன்நமக்குள்ளேயேகூட, சுற்றிக்கொண்டிருக்கிறது. இது முதன் முதன் முதலாக இப்போதுதான் மனிதர்களைக் கொல்லும் வைரஸ் என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இது ஆரமப கட்டத்தில், புனுகு பூனையிலிருந்து மனிதனிடம் பரவிய தொற்று எனக் கண்டறியப் பட்டது.Coronavirus

கொரோனா வைரஸ் என்றால் என்ன? 

கொரோனா வைரஸ் என்பது, ஒரு வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் மத்தியக் கிழக்கு சுவாசக் கோளாறு  (MERS-CoV) மற்றும் கடுமையான சுவாசக் கோளாறு (SARS-CoV) ஆகியன அடங்கும். சமீபத்திய WHO அறிவிக்கையின்படி, இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கிறது.  அதாவது SARS-CoV, புனுகு பூனைகளிடமிருந்தும், MERS-CoV என்பது ஒற்றைத் திமிள் ஒட்டகங்களிடமிருந்தும், மனிதர்களுக்குப் பரவியிருக்கிறது. இதில் மோசமான விஷயம், இதைக் குணப்படுத்த மருந்து இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை என்பதுதான். 

கொரோனோவைரஸ்: உதவிக்கான வழிகாட்டுதல்கள் – தடுக்கும் வழிகள்

இதற்கு கொரானாவைரஸ் என்று பெயரிடக் காரணம் என்ன? 

இந்த வைரஸை மைக்ரோஸ்கோப் வழியாகப் பார்த்தால், அது கிரீடம் போன்ற தோற்றத்தைப் பெற்றிருப்பது தெரிய வந்தது. கொரோனா என்றால் கிரீடம். அதனால்தான் ஆய்வாளர்கள் இதற்கு கொரோனா வைரஸ் என்று பெயரிட்டனர். 

உங்களுக்கு கொரோனா இருப்பதை கண்டறிவது எப்படி?

 • காய்ச்சல்,  இருமல்
 • மூச்சு விட சிரமமாக இருத்தல்
 • கடுமையான சுவாசக் கோளாறு
 • நிமோனியா
 • சிறுநீரக செயலிழப்பு.

குறிப்பு : மேற்குறிப்பிட்ட அடையாளங்கள் இருந்தால் அதை அலட்சியம் செய்யாமல், உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவ மனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.   

கொரோனா வைரஸ் தொற்றின் இப்போதைய நிலை.

தி நியு யார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தியின்படி, வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதே சமயம், இதற்கான சரியான மருந்து, தீர்வு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை . இந்த நிலையில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை.  

உலக அளவில் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை

இப்போதைக்கு 99,442 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது. இதில் 3,387 பேர் மரணமடைந்துள்ளனர். 55, 661 பேர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ்

இப்போதைக்கு 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.  

உலக அளவிலான பாதிப்பு

சீனாவில் மிக அதிகமாக 80,555 பேர், இதற்கு அடுத்தாற்போல தென்கொரியா (6,284 இறப்புகள்), அதற்கு அடுத்தபடியாக இத்தாலி (3, 858 இறப்புகள்). 

உலகத்திலேயே பாதுகாப்பான பகுதி அண்டார்டிகா

இந்த வைரஸ், அண்டார்ட்டிகாவைத் தவிர்த்து உலகின் ஏறக்குறைய மற்ற அனைத்துப் பகுதிகளிலும் பரவியிருக்கிறது.  

சிகிச்சை கண்டறியப்பட வேண்டிய நிலை

இஸ்ரேல் இதற்கான மருந்தைக் கண்டறிந்திருப்பதாக கூறுகிறது. இதற்கான மருந்துகள், மனிதர்களுக்குப் பயனளிக்குமா என்பதற்கான சோதனைகளுக்குப் பிறகு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப் படும்.  

இதைக் கண்டறிவது எப்படி?

கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களை CT மூலமாக சோதனை செய்யப்படும். இந்த வைரஸ் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுத்துவதால், நெஞ்சுப் பகுதியில் ஸ்கேன் எடுக்கப்படுகிறது. இந்த நோய் பரவுவதை தொடர்ந்து கண்காணிப்பதற்காக பல ஸ்கேன்கள் தொடர்ந்து ஒன்றரை வாரங்களுக்கு எடுக்கப்படும்.  மிக அரிதாக, ஒரு சிலரிடத்தில் இந்தத் தொற்று இருப்பதைக் கண்டுபிடிக்க முடியாது. 

மருத்துவரை எப்போது பார்ப்பது ந்ல்லது?

நீங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெரும் முன்னர் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியம். முதலில், நோய்க்கான அறிகுறிகளைக் கண்டறிவது. அடுத்ததாக பயணங்கள் தொடர்பான விஷயங்களைத் தெரிந்து கொள்வது. 

நீங்கள் கீழ்க்காணும் நாடுகளுக்கு 2019, டிசம்பர் 31ஆம் தேதிக்குப் பின் சென்றிருந்தால், நிச்சயமாக மருத்துவரை சந்திப்பது அவசியம். 

 • சீனா
 • இத்தாலி
 • ஹாங்காங்
 • தாய்லாந்து
 • சிங்கப்பூர்
 • ஜப்பான்
 • மலேசியா
 • மகேயூ 
 • தென்கொரியா

குறிப்பு : இது தவிர கடந்த நான்கு வாரங்களாக சுவாசக் கோளாறுகளால் அவதிப் பட்டு வந்தால், மூச்சு விட சிரமமாக இருந்தால், உடனடியாக மருத்துவரை சந்திப்பது மிக அவசியம்.   

எப்படிப் பாதுகாத்துக்கொள்வது? 

இதுவரையில் சிகிச்சை எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், வராமல் தற்காத்துக்கொள்வதுதான் சிறந்தது. இது போல பேரழிவை உண்டாக்கிக் கொண்டிருக்கும் ஒரு நோய், எங்கிருந்து எப்படி பரவுகிறது என்பதையோ, அதற்கான மருந்தையோ, உலகம் முழுவதிலும் உள்ள ஆராச்சியாளர்கள் இன்னும் சரியான வகையில் கண்டுபிடிக்கவில்லை. ஆகவே இந்தக் கொடிய நோயிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளச் சில எளிய வழிகளைப் பின்பற்றுவது மிக அவசியம்.   

 • வாகனங்களை ஓட்டிய பின், சாப்பிடும் முன்னும், பின்னும், பயணத்திற்குப் பின்பும் சோப் மற்றும் சானிடைசர்களைப் பயன்படுத்தி உங்களது கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.
 • தும்முவதற்கு முன் உங்களது வாயையும் மூக்கையும் மூடிக்கொள்ள வேண்டும்.
 • உங்களது வாய், மூக்கு, கண் ஆகியற்றை அடிக்கடி கைகளால் தொட்டுக்கொண்டிருக்காதீர்கள்.
 • சுவாசக் கோளாறு உள்ள நபர்களிடமிருந்து விலகியே இருங்கள். 
 • நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் பாத்திரங்கள், படுக்கை, போர்வைகள் போன்ற பொருட்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளாதீர்கள். 
 • வீட்டுத் தரையை சுத்தமாக வைத்திருங்கள்
 • தரமான மருத்துவ முகமூடியை அணியுங்கள்
 • விலங்குகளின் உடல் பாகங்களையோ, சமைக்காத இறைச்சிப் பொருட்களையோ சாப்பிடாதீர்கள்
 • விலங்குகளோடு நெருங்கிப் பழகாதீர்கள். 

சந்தேகங்களும் பதில்களும்

ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நம்மிடையே பரவியிருக்கும் இந்த கொடிய வைரஸ் தொற்றுக்கான சிகிச்சை இன்னும் கண்டறியப்படவில்லை. அதனால் இதை வராமல் தடுப்பதற்கான சுகாதார நடவடிக்கைகளைத் தொடர்ந்து விடாமல் பின்பற்றுவது அவசியம். கைகளைச் சுத்தமாகக் கழுவுதல், மாசுகள் பாதிக்காத முகமூடி அணிவது, கைகளால் அடிக்கடி முகத்தைத் தொடாமல் இருப்பது போன்றவற்றை நாம் பின்பற்றியே ஆக வேண்டும். 

இந்த உயிர்க் கொல்லி நோயைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே தரப்படுள்ளன.  

1. கொரோனா வைரஸ் பாதிப்பினால் மரணம் ஏற்படுமா?

ஆமாம். இந்தத் தொற்றினால் பாதிக்கப்பட்டால் மரணம் நிகழும். ஏனென்றால் இதற்கான சிகிச்சை முரை இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த நோயினால், நுரையீரல் பாதிப்பு, சிருநீரக பாதிப்பு, வயிறு பாதிப்பு, ரத்தம் கெட்டுப் போதல் ஆகிய விளைவுகள் ஏற்படும்.  

2. இந்த நோயை குணப்படுத்த சிகிச்சை உள்ளதா?

இல்லை. இதுவரையில் சிகிச்சை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், ஆராய்ச்சியாளர்கள் இதற்கான முழு முயற்சியில் இறங்கியுள்ளனர். 

3. கொரோனா வைரஸைக் கண்டுபிடித்தவர் யார்?

கொரோனாவைரஸ், வியாதியாகப் பரவுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே சீனாவில் உள்ள லி வென்லியாங் என்பவர்தான் இது பற்றிக் கண்டறிந்தார். அவர் இதன் பாதிப்புக்குள்ளாகி, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இப்போது அவர் தேசிய அளவில் மாமனிதராக சீனர்களால் போற்றப்படுகிறார். 

4. இந்தத் தொற்று எத்தனை காலத்திற்கு இருக்கும்?

இது உருவாவதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கும் வரை இப்படித்தான் இருக்கும். அதுவரையில், ஆராய்ச்சியாளர்கள், மிகக் தீவிரமாக இதைப் பற்றி தெரிந்துகொள்ளவும், சிகிச்சை முறைகள் பற்றியும் பல்வேறு விதங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.  

இந்த வைரஸிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கான சிறந்த வழி, மேலே குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுவதுதான். பயணங்களை மேற்கொள்ளும்போது தரமான முகமூடிகளைஅணிந்துகொள்வதும், ஏற்கெனெவே பாதிக்கப்பட்டிருப்பவர்களிடமிருந்து தள்ளி இருப்பதும்தான் மிக முக்கியமானது. 

பாதுகாப்பாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள். 

7 நாள் வெள்ளரிக்காய் உணவு திட்டம்

கடும் உடற்பயிற்சி வகுப்புகளால் நீங்கள் களைப்படைந்துவிட்டீர்களா? சரி, அப்படியானால் ஒரு ஆரோக்கியமான உணவுத் திட்டத்துக்கு மாறிவிடலாமென யோசனை உண்டா? இது ஒரு 7 நாள் வெள்ளரிக்காய் உணவுத் திட்டம்; எடை அதிகரிப்பு மற்றும் உடல் திறன் இலக்குகளை நோக்கிப் பயணித்த பலருக்கு இத்திட்டத்தினால் பலன் கிடைத்துள்ளது.

Cucumber

வார இறுதி நாட்களில் உண்ணும் சத்தற்ற உணவுகளில் உள்ள நச்சுக்களை நீக்க மிகச்சிறந்த நிவாரணி இதுவே. எனவே உங்களுக்கான ஒரு பிரத்தியேக வெள்ளரிக்காய் உணவுத் திட்டத்தைத் தருகிறோம்: ஆரோக்கியமான இந்த உணவுத் திட்டம் எவ்விதப் பக்க விளைவுகளுமின்றி எடையைக் குறைக்க உதவும். ஆயினும், வேறெதற்காவது மருந்து உட்கொண்டு வருகிறீர்கள் என்றால், மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின்பே இத்திட்டத்தையோ (அ) வேறு எடை குறைப்பு / நிர்வாகத் திட்டத்தையோ பின்பற்ற வேண்டும்.

சரி, வெள்ளரிக்காயை ஏன் நம்பவேண்டும்? ஏனெனில் யாருமே அலட்சியம் செய்ய முடியாத பல ஆரோக்கியப் பலன்கள் இதில் உள்ளன.

1. வெள்ளரிக்காயின் 5 ஆரோக்கியப் பலன்கள்

 • மிகக் குறைவான கலோரிகளே இதில் உள்ளன
 • உடலைத் தூய்மையாக்கிடும்
 • வளர்சிதை மாற்றத்தைத் தூண்டும்
 • குடல்களையும் செரிமானப் பாதையையும் தூய்மையாக்கிடும்
 • உபரி நீரை உடலிலிருந்து வெளியேற்றும்

2. 7 நாள் வெள்ளரிக்காய் உணவுத் திட்டம்

 • காலை உணவு: 2 வேகவைத்த முட்டைகள், ஒரு ப்ளேட் வெள்ளரி சாலட் ஆகியவறை உண்ணவும்
 • காலைச் சிற்றுண்டி: 5 ப்ளம் பழங்கள்/1 பெரிய ஆப்பிள்/1 பீச் பழம்
 • மதிய உணவு: டோஸ்ட் ஆன கோதும ப்ரெட் 1 துண்டு, வெள்ளரி சாலட் (ஒரு கிண்ணத்தில்)
 • மாலைச் சிற்றுண்டி: 1 டம்ளை வெள்ளரி ஷேக்
 • இரவு உணவு: உங்களுக்குப் பிடித்த ஏதாவதொரு பழம்

3. வெள்ளரிக்காய் உணவுத்திட்ட சாலடை எப்படிச் செய்வது?

(தேவையான பொருட்கள்: வெள்ளரி – 400 கிராம், 1 வெங்காயம்,  தயிர் – 200 மிலி, தேவைக்கேற்ப உப்பு)

 • 400 கிராம் வெள்ளரியை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும்.
 • அழகாக நறுக்கப்பட்ட வெங்காயத்தை இத்துடன் சேர்க்கவும்.
 • 200 மிலி தயிரையும் சேர்க்கவும்.
 • சிறிதளவு உப்பைச் சேர்த்துக்கொள்ளவும்.

 4. வெள்ளரிக்காய் ஷேக்கை எப்படித் தயாரிப்பது?

(தேவையான பொருட்கள்: வெள்ளரி – 1, ஆப்பிள் – 1, கை நிறைய, கீரை, இஞ்சி – 1 சிறிய துண்டு)

 • வெள்ளரியைத் தோல் சீவிச் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
 • ஆப்பிளையும் அப்படியே நறுக்கிக்கொள்ளவும்.
 • கைநிறைய கீரையை எடுத்துக்கொள்ளவும்.
 • கொஞ்சம் இஞ்சியையும் எடுத்துக்கொள்ளவும்.
 • அனைத்தையும் ஜூஸரில் போட்டுக் கலக்கி அரைத்து ஜூஸ் போடவும்.

இந்த ஆரோக்கியமான வெள்ளரிக்காய் உணவுத் திட்டத்தை ஒரு வாரம் வரை பின்பற்றிய பின்னர் உங்களது அனுபவத்தை ‘விமர்சனங்கள்’ பகுதியில் பதிவு செய்யவும். மேலும், வாசகர்களின் பலனைக் கருத்தில் கொண்டு உடல்தகுதி / எடைக் குறைப்பு பற்றிய உங்களது கருத்துக்களையும் பதிவு செய்யயுங்கள்.

விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் எளிய வழிகள்  

புதிய உயிரை உண்டாக்கி, புதிய வாழ்க்கையை உருவாக்குவதில் விந்தணு முக்கிய பங்கு வகிக்கிறது. பெண் கருவை சென்றடைவதற்கு, விந்தணு குறிப்பிட்ட எண்ணிக்கையை கொண்டிருக்க வேண்டும். அப்போது தான், புதிய உயிர் உண்டாகும். விந்துவில் உயிர் அணுக்களின் எண்ணிக்கை விந்தணு என குறிப்பிடப்படுகிறது. கருத்தரித்தலின் போது விந்தணுவின் தரமும் முக்கியமாகிறது.

Increase Sperm Count

உலக சுகாதார அமைப்பின்படி (WHO) மி.லி.க்கு 15 மில்லியன் விந்தணுக்கள் அல்லது 39 மில்லியன் விந்தணுக்கள் இருப்பது, பெண்ணை கருவுறச்ச்செய்து குழந்தை உண்டாக்க போதுமானது. 10 மில்லியனுக்கும் குறைவாக இருப்பது ஆண்களில் குறைபாட்டை உண்டாக்கலாம். இது மலட்டுத்தன்மை எனப்படுகிரது. தற்போது இந்தியாவில் 27.5 மில்லியன் தம்பதிகள் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விந்தணு எண்ணிக்கை தகவல்கள்

மனித விந்தணு புதிய உயிரை உண்டாக்குவதில் முக்கிய பங்கு வகித்து, வாழ்க்கைக்கு அர்த்தத்தை அளிக்கிறது. விந்தணு மற்றும் விந்தணு எண்ணிக்கை தொடர்பாக நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சில எளிய வழிகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன:

 • நல்ல உடல் பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் விந்தணுக்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது.  
 • புகைப்பிடிப்பதை குறைப்பது. அதிகமாக புகைப்பிடிப்பது, விந்தணு குறைவு மற்றும் அதன் தரத்தை பாதிப்பதாக கருதப்படுகிறது.  
 • மேலும், குறைந்த விந்தணு கொண்டதாக கண்டறியப்படும் ஆண்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.  
 • ஆரோக்கியமான குழந்தை பிறக்க, குறைந்தது 15 மில்லியன் விந்தணுக்கள் முதல் அதிகபட்சம் 39 மில்லியன் விந்தணுக்கள் தேவை. 10 மில்லியன் விந்தணுக்களுக்கு குறைவாக இருந்தால் குழந்தை பாதிப்புடன் பிறக்கலாம் என கருதப்படுகிறது.  

விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும் எளிய வழிகள்

குறைவான விந்தணு எண்ணிக்கை, உங்கள் துணை கர்ப்பமாக தடையாக இருக்கலாம் என்பதால் ஆபத்தானது. இது தம்பதியிடையே உளவியல் நோக்கிலான பாதிப்பை உண்டாக்கலாம். எனினும், இந்த விந்தணு குறைவு பாதிப்பை சரி செய்து கொள்வதற்கான வழிகளும் இருக்கின்றன. வீட்டிலேயே இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இவற்றில் சில வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.  

 • போதுமாக தூக்கம்
 • புகை பிடிப்பதைக் குறைப்பது
 • மன அழுத்தம் இல்லாமல் இருப்பது
 • போதுமான வைட்டமின் டி மற்றும் கால்சியம்
 • தீய கொழுப்புகளைக் குறைப்பது

விந்தணு எண்ணிக்கையை அதிகமாக்க கூடிய எளிதான சில செயல்களை நீங்கள் செய்யலாம். நீங்கள் உட்கொள்ளும் உணவு மூலமும் விந்தணு எண்ணிக்கையை உயர்த்திக்கொள்ளலாம்.

1. விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும் உணவுகள்

விந்தணு எண்ணிக்கை மற்றும் தரத்தை உயரத்த உதவும் பல வகையான உணவுகள் இருக்கின்றனர். அவற்றில் சில இங்கே தரப்பட்டுள்ளன. கீழே உள்ள உணவுகள், உங்கள் விந்தணு எண்ணிக்கையை மேம்படுத்தும். இவை ஊட்டச்சத்து மிக்கவை.  

 • சிட்ரஸ் பழங்கள் (எலுமிச்சை, ஆரஞ்சு)
 • முழு தானிய பிரெட்
 • பழுப்பு அரிசி
 • வாழைப்பழம், டார்க் சாக்லெட்
 • நத்தை, சால்மன் மீன் போன்ற கடல் உணவு
 • வைட்டமின் டி கொண்ட பால் பொருட்கள்
 • பூண்டு
 • மஞ்சள்
 • கீரை

குறிப்பு: உங்கள் உணவில் இவற்றை சேர்த்துக்கொள்வதில் கவபம் செலுத்தவும். இது உங்கள் விந்தணு எண்ணிக்கையை உயர்த்தும்.  

2. விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும் உடல் பயிற்சிகள்

வீட்டு சோதனை அல்லது ஆய்வுக்கூட சோதனையில் உங்கள் விந்தணு குறைவாக இருப்பது தெரிய வருவது மோசமானது என்றாலும், அதற்காக உங்கள் தந்தையாக ஆக முடியாது என்று பொருள் இல்லை. உங்களுக்கு மிகவும் தேவை நம்பிக்கை தான். ஏனெனில் எதிர்மறை விஷயங்கள் விந்தணு எண்ணிக்கையை பாதிக்கும். உங்கள் தந்தையாக முடியாது எனில், மருந்துகளால் இதை மாற்ற முடியும் என்பதே உண்மை.  

மருத்துவ நோக்கில் பார்த்தால், புதிய விந்தணுவை உண்டாக்க உடலுக்கு 3 மாதங்கள் தேவைப்படுகிறது. உங்கள் வாழ்வியலை மாற்றிக்கொண்டால் இதையும் மாற்றலாம். உங்கள் விந்தணு எண்ணிக்கையை மேம்படுத்த நீங்கள் பின்பற்றக்கூடிய சில எளிய உடல் பயிற்சிகள் இதோ:

 • ஓட்டம்: தினமும், 30 முதல் 45 நிமிடங்கள் வரை மிதமாக ஓடுவது.
 • டிரெட்மில் ஓட்டம்: வாரம் 3 நாட்கள் மிதமாக ஓடுவது. 30 முத்ஹல் 45 நிமிடங்கள் இருந்தால் நல்லது.
 • யோகா: சர்வாங்க ஆசனம் (தோள் ஆசனம்); தனூர் ஆசனம் (வில் போல); ஹலாசனம் (உழுவது); பஸ்சிமோத்தாசனம் (முன்பக்கம் குனிதல்); கும்பக ஆசனம் (கையை ஊன்றி இருப்பது); புஜங்க ஆசனம் (நல்ல பாம்பு போல); பாத ஹஸ்தாசனம் (முன்பக்கம் வளைந்து நிற்பது); படகு ஆசனம் (படகு போல).

மேலே உள்ள அனைத்து உடல் பயிற்சிகளும் உங்கள் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். இதை இப்போதே செய்யத்துவங்குவது நல்லது. ஆனால் அதிக உடல்; பயிற்சியும் விந்தணு எண்ணிக்கையை குறைக்கலாம் என்பதால் மிதமாக மேற்கொள்ளவும்.

குறைந்த விந்தணு எண்ணிக்கையைக் கண்டறிதல்

உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் மாற்றத்தை உணரும் போது தான் விந்தணு குறைபாடு தெரிய வருகிறது. என்றாலும் இதை முன்கூட்டியே உனரக்கூடிய சில வழிகள் உள்ளன.  

 • உங்கள் துணையை கர்ப்பமாக்குவதில் சிக்கல் ஏற்படுவது
 • உங்களால் ஏன் தந்தையாக முடியவில்லை என்பதை அறிய மருத்துவர் செய்யும் பொதுவான விந்தணு எண்ணிக்கை சோதனை

மருத்துவ சோதனைகள் மற்றும் நோய்க்கூறு ஆய்வுகள் மூலமும் குறைவான விந்தணு பிரச்சினையை கண்டறியலாம். மருத்துவ சோதனைகள் என்பது, உங்கள் குறியை பரிசோதிப்பது, நீண்ட கால நோய் பாதிப்பு கண்டறிவது, காயங்கள், அறுவை சிகிச்சை பாதிப்பு கண்டறிதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது பிரச்சினையை கண்டறியும் முதல் கட்டமாகும். அதன் பிறகு டாக்டர் ஆய்வு செய்வார். இந்த நிலைக்கு ஏற்ப டாக்டர் சிகிச்சை அளிப்பது அடுத்த கட்டம். குறைந்த விந்தணு பிரச்சினையை டாகடர்கள் கண்டறியும் வழிகள்:  

விந்தணு ஆய்வுகள், முடிவுகள்

இறுதியாக விந்தணு ஆய்வு சோதனை மூலம் விந்தணு எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாக, இந்த செயல்முறையின் போது விந்தணு நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்யப்பட்டு, ஒரு சதுரம் அல்லது ஒரு கிரிட்டில் எத்தனை விந்தணு இருக்கிறது என கணக்கிடப்படும். இதற்காக கம்ப்யூட்டரும் பயன்படுத்தப்படலாம். இந்தியாவில், மத நம்பிக்கை காரணமாக, விந்தணு விஷேச வகை ஆணுறை வழியே சேகரிக்கப்படலாம். அனைத்து விந்தணுவும் சேகரிக்கப்படுவதை உறுதி செய்ய டாக்டர்கள் கீழ்கண்டவற்றை பரிந்துரைக்கலாம்.

 • வெளியாகும் விந்தணு ஆணுறையில் சரியாக சேகரிக்கப்படுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
 • நீங்கள் குறைந்தது 2 நாட்களுக்கு விந்தணு வெளியாவதை கட்டுப்படுத்த வேண்டு. அதிகபட்சம் 11 நாட்களுக்கு மேல் கட்டுப்படுத்தக் கூடாது.
 • உங்கள் முதல் மாதிரி சேகரிக்கப்பட்ட 2 வாரங்கள் கழித்தே இரண்டாவது சுற்று மாதிரி சேகரிக்கப்படும்.

Note:  உங்கள் விந்தணு எண்ணிக்கை மிலிக்கு 15 மில்லியனுக்கும் குறைவாக இருந்தால் தந்தையாகும் வாய்ப்பு குறைவு. ஒரு சில விதிவிலக்கான சூழல்களில் ஆண்களில் சிலருக்கு விந்தில் விந்தணுக்களே இல்லாமல் இருக்கலாம். இந்த நிலை, அசூஸ்பெர்மியா எனப்படுகிறது.  

குறைந்த விந்தணு சிகிச்சை

குறைந்த விந்தணு சிகிச்சை உங்கள் கருத்தரித்தல் தன்மையை 70 சதவீதம் வரை மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது. இருப்பினும், குழந்தை பிறப்பதில் பல்வேறு மருத்துவ அம்சங்கள் உள்ளன. ஒரு சில விநோத சூழல்களில், குறைந்த விந்தணு எண்ணிக்கையுடன் தந்தையானவர்களும் இருக்கின்றனர். அதே போல அதிக விந்தணு கொண்டும் தந்தையாக முடியாதவர்களும் இருக்கின்றனர்.  

இந்த உலகிற்கு புதிய உயிரை கொண்டு வருவது என்பது புதிர்கள் நிறைந்தது. விந்தணு இயக்கம் மிகவும் முக்கியம். உங்கள் டாக்டருக்கு கிடைக்கும் சோதனை முடிவு அடிப்படையில் உங்களுக்குக் கீழ்கண்ட சிகிச்சைகளில் ஒன்று பரிந்துரைக்கப்படலாம். குழந்தை பெறுவதற்காக நீங்கள் பின்பற்ற வேண்டிய சிகிச்சை முறைகள் சில:

 1. ஸ்க்ரோடல் அல்ட்ரா சவுண்ட்:

இந்த சோதனையில், அதிக அலைவரிசை கொண்ட ஒலி, அலைகள் உங்கள் விரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் செலுத்தப்படுகிறது. பிரச்சினையை கண்டறிய டாக்டர்கள் மேற்கொள்ளும் முதல் சோதனை இது. பிரச்சினை என்ன என அறிந்தவுடன் டாக்டர்கள் அடுத்த கட்ட சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

 1. ஹார்மோன் சோதனை:

குறைவான விந்தணு சோதனைக்கான இரண்டாவது பரிசோதனை இரத்த பரிசோதனையாகும். ஒருங்கிணைந்த செக்ஸ் வளர்ச்சி மற்றும் விந்தணு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் பிட்யூட்டரி கிளாண்ட் உள்ளடக்கிய விறையில் உற்பத்தியாகும் ஹார்மோன்களை கண்டறிய இது உதவும்.  

 1. வெளியான பிறகு ஆய்வு:

இந்த சோதனை உங்கள் விந்தணு குறியில் இருந்து வெளியேறிச்செல்வதற்கு பதில், பின்னோக்கி வருகிறதா என அறிவதற்கானது. குறிப்பாக விந்து வெளியாகும் போது இவ்வாறு நிகழ்கிறதா என சோதிக்கப்படும். உங்கள் பிரச்சினை தன்மையை டாக்டர் புரிந்து கொள்ள இந்த சோதனை உதவும்.  

 1. மரபணு சோதனைகள்:

சில நேரங்களில், விந்தணு குறைப்பாட்டிற்கு மரபணு காரணமாக இருக்கலாம். உங்கள் ஒய் குரோமோசோமில் ஏதேனும் மாற்றம் உள்ளதா அல்லது ஏதேனும் மரபணு கோளாறு உள்ளதா என்பதை இரத்த பரிசோதனை மூலம் அறியலாம். பிரச்சினையின் வேரை அறிய இந்த சோதனை டாக்டர்களுக்கு தேவைப்படலாம். இந்த சோதனைக்காக உங்கள் விரையில் இருந்து மாதிரி எடுக்கப்படும். உங்கள் விந்தணு வழக்கமாக இருக்கிறதா என அறியவும் இது உதவும்.சில நேரங்களில், இந்த சோதனையின் விளைவாக விந்து பாய்வது தடைபடலாம். எனினும், அதீதமான சூழல்களில் மட்டுமே இது மேற்கொள்ளப்படுகிறது.

 1. டிரான்ஸ்ரெக்டல் அல்ட்ராசவுண்ட்:

விந்தணுவை கொண்டு செல்லும் பாதையில், புரோஸ்டேட்டில் ஏதேனும் அடைப்பு உள்ளதா என்பதை கண்டறிய மலக்குடலில் சிறிய துண்டு போன்ற கருவி செலுத்தப்படுகிறது. வால்வுகள் வழியே விந்து பாய்வதை கண்டறிய இந்த சோதனை உதவுகிறது.  

 1. அறுவை சிகிச்சை

மிகவும் அரிதான நிலையில், விந்தணு குறைபாடு மற்றும் விந்து போக்குவரத்து பிரச்சினையை சரி செய்ய அறுவைசிகிச்சை செய்யப்படலாம்.  உதாரணமாக, வெரிகோசிலி அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்படுகிறது. விந்து இல்லாத அரிதான சூழலில் விரை மற்றும் இதர வழிகள் மூலம் விந்து எடுக்கப்படுகிறது.

 1. இன்ஃபெக்‌ஷன் சிகிச்சை:

பொதுவாக குறைந்த விந்தணு பிரச்சினையை சரி செய்ய ஆண்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இது உற்பத்தை பாதையில் உள்ள இன்பெக்‌ஷனை குணமாக்கும் என்றாலும், கருத்தரித்தல் திறனை மீட்காது. எனவே இந்த சிகிச்சை இன்ஃபெக்‌ஷனை நீக்க மட்டுமே பயன்படுகிறது.

 1. உடலுறவு தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சை:

கருத்தருத்தல் சிக்கலை தீர்க்கும் வகையில் ஆலோசனை அல்லது மருந்துகள் வழங்கப்படும். எனினும், முன்கூட்டியே விந்து வெளியாகுதல் அல்லது செயலின்மைக்கு மட்டுமே இந்த சிகிச்சை பொருந்தும்.  

 1. ஹார்மோன் சிகிச்சை:

உங்கள் டாக்டர் ஹார்மோன் சிகிச்சையைப் பரிந்துரைக்கலாம். அதிக அல்லது குறைவான ஹார்மோன் அளவால் கருத்தரித்தல் பிரச்சினை இருந்தால் மருந்துகள் வழங்கப்படும். ஹார்மோன் உற்பத்தி மற்றும் உடலில் அதன் பயன்பாடு விகிதத்தைப் புரிந்துகொள்ளவும் டாக்டர்களுக்கு இது உதவும்.  

 1.   அசிஸ்டட் ரீப்ரட்க்டிவ் டெக்னாலஜி:

இது ஏடிஆர் என அழைக்கப்படுகிறது. வழக்கமான வெளியாகுதல் அல்லது அறுவை சிகிச்சை வெளியாகுதல் மூலம் விந்தணு பெற்று அல்லது சில நேரங்களில் விந்து தாணம் பெற்று விந்தணு பெறுதலாகும். இந்த விந்தணு பெண் குறிக்குள் செலுத்தப்படுகிறது அல்லது ஐவிஎப் மூலம் பொருத்தப்படுகிறது. இது துணையை கர்ப்பமாக்க உதவும்.

விந்தணுவை அதிகரிக்க மருந்துகள்:

கீழ் கண்ட எளிய வழிகள் மூலம் கருத்தரித்தல் வாய்ப்பை அதிகமாக்கி கொள்ளலாம். இதற்கு வாழ்வியலில் சிறிய மாற்றங்கள் தேவை. இதற்காக டாக்டர்கள் பரிந்துரைக்கக்கூடிய மருந்துகள் சில:

விந்தணு அதிகரிக்க வைட்டமின்கள் & ஊட்டச் சத்துகள்

குறைந்த விந்தணு கருத்தரித்தல் சிக்கலை ஏற்படுத்தலாம். இதனால் உங்கள் துணை கர்ப்பமாகாமல் போகலாம். எனினும், இதை மாற்ற சில ஊட்டச்சத்துகள் உதவுகின்றன.  

 1. டி-அஸ்பார்டிக் சப்ளிமண்ட்ஸ்:

இது ஊட்டச்சத்து மருந்தாக விற்கப்படும் ஒரு வகை அமினோ அமிலம். உங்கள் உடலில் உள்ள புரதச்சத்து அமைப்பை சீராக்க உதவுகிறது. 3 கிராம் டி- ஏ சப்ளிமண்ட் எடுத்துக்கொண்டால் உடலில் டெஸ்டஸ்ட்ரோன் அளவு 42 சதவீதம் உயர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவர்கள் ஆலோசனை பெற வேண்டும்.

 1. வைட்டமின் சி:

வைட்டமின் சி எடுத்துக்கொள்வது, விந்தணு உற்பத்தை தடை செய்யும் சில தீய விளைவுகளை உடல் எதிர்கொள்ள உதவும்.  2 மாதம், தினமும் இரு வேளை, 1000 மிகிராம், வைட்டமின் சி எடுத்துக்கொண்ட ஆண்களில் விந்தணு இயக்கம் 92 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாதிப்புக்குள்ளாகும் விந்தணு எண்ணிக்கையையும் இது குறைக்கிறது. ஆண்டிஆக்சிடெண்டான வைட்டமின் சி எடுத்துக்கொள்வது ஆண்களில் கருத்தரித்தல் தன்மையை அதிகரிக்கும்.

 1. துத்தநாகம்:

மீன், முட்டை போன்ற அசைவ உணவுகளில் துத்தநாகம் உள்ளது. போதுமான அளவு துத்தநாகம் இருந்தால் கருத்தரித்தல் தன்மை அதிகரிக்கும். போதுமான அளவு துத்தநாகம் ஆண்களில் டெஸ்டஸ்ட்ரோன் அளவு மற்றும் விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நீங்கள் அண் மலட்டுத்தன்மையை எதிர்கொண்டிருந்தால், எதிர்காலத்தில் தந்தையாக விரும்பினால், உங்கள் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும் மற்றும் முன்கூட்டியே விந்து வெளியாவதை தடுக்கும் மெட்லைப்பின் பக்க விளவில்லாத மூலிகை மருந்துகள் உங்களுக்கு உதவும். மருந்துகள் தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் டாக்டர் சந்திப்புக்கு ஆன்லைனில் பதிவு செய்துகொண்டு, மெட்லைபில் ஆலோசனை பெறலாம்.  

கேள்விகள்

விந்தணுவை அதிகரித்துக்கொள்ளும் வழிகள் தொடர்பான புரிதல் உங்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும. மேலும் புரிதலுக்காக, இது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும்.

 1. வீட்டிலேயே விந்தணு எண்ணிக்கையை சோதிப்பது எப்படி?

விந்தணு எண்ணிக்கையைக் கணக்கிட்டு சொல்லும் ஸ்பெர்ம்செக் பெர்டிலிட்டியை ஆர்டர் செய்யுங்கள். உங்கள் துணையை கர்ப்பமாக்க, மிலிக்கு குறைந்தது 15 மில்லியன் விந்தணுக்கள் தேவை என நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் மாதாமாதம் இந்த எண்ணிக்கையைப் பரிசோதிப்பது நல்லது.  

2. மலட்டுத்தன்மை உள்ளவர் அதிலிருந்து மீள முடியுமா?

மலட்டுத்தன்மையைச் சரியாக்கலாம். ஆனால் இதற்கு சில விஷயங்கள் தேவை. இந்த குறைக்கு மரபணு காரணமாக இருந்தால், இதை சரி செய்ய முடியாமல் போகலாம். மன அழுத்தம் அல்லது வாழ்வியல் சிக்கலால் ஏற்பட்டிருந்தால் இதை சரி செய்யலாம்.

3. ஆண் மலட்டுத்தன்மை அறிகுறிகள் என்ன?

மலட்டுத்தன்மையை உணர்த்தும் ஆரம்ப அறிகுறிகள் இல்லாமல் போகலாம். துணையை திருப்திபடுத்த முடியாமல் போவது முதல் அறிகுறியாக இருக்கலாம். எனினும், முன்கூட்டி விந்து வெளியாகுதல் போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் துணை கர்பமாவதில் சிக்கல் ஏற்படும் போதே இந்த குறை தெரிய வரும்.  

ஆய்வு: இது தொடர்பான நோயாளிகளில் இந்த ஆண்டு வந்த சின்ஹா குடும்பமும் ஒன்று. இந்த தம்பதிக்கு திருமணமாக 9 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் குழந்தை இல்லை. ஸ்ருதி சின்ஹா 28 வயதில் அமீத் சின்ஹாவை மணந்து கொண்டார். திருமணமான 2 ஆண்டுகள் கழித்து குழந்தை பெற முயற்சித்தனர். ஆனால் 9 ஆண்டுகளாக எதுவும் பலன் அளிக்கவில்லை. நாட்டில் உள்ள 10 முதல் 15 சதவீத தம்பதிகள் இது போன்ற பிரச்சினை கொண்டுள்ளதாக அண்மைக் காலப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.  

குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய 5 பழங்களும் காய்கறிகளும்

குளிர்காலம் வந்தாலே பலவகை புதிய பழங்களும் காய்கறிகளும் சந்தையில் கிடைக்க ஆரம்பித்துவிடும்.  காய்கறி/பழக்கடைக்குப் போனாலே, பளீரென்ற பலவகை வண்ணத்தில் காய்கறிகளும் பழங்களும் நம் கண்ணுக்குத் தெரியும். குளிர்காலத்திற்கே உரிய பருவகாலப் பழவகைகளும் காய்கறிகளும் பல வகைகளில் கிடைப்பதால் உங்களது உடல் ஆரோக்கியத்துக்கு அதிகளவில் ஆதாயம் தருபவை எவை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடிக்க தேவையான ஐந்து குளிர்காலப் பழங்கள் மற்றும் ஐந்து குளிர்காலக் காய்கறிகள் பற்றி இங்கு விவரமாகக் காண்போம்.

 Fruits and Vegetables to Consume in Winter

குளிர்காலத்தில் உண்ண வேண்டிய ஐந்து முக்கியப் பழவகைகள்

1. ஆப்பிள்

‘ஒரு நாளுக்கு ஒரு ஆப்பிளைச் சாப்பிட்டால், மருத்துவரிடம்  போக வேண்டிய அவசியமே ஏற்படாது’ என்று புகழ்பெற்ற ஒரு பழமொழி சொல்கிறது. ஆப்பிளை உண்டால் கிடைக்கக்கூடிய ஆதாயங்களை நன்கு கவனித்தால், இது உண்மை என்பது நமக்கே புரியும். நரம்பு மண்டலச் செயல்பாட்டிற்கு ஆப்பிள் பேருதவி. இதிலுள்ள ஆண்டி-ஆக்சிடன்ட்டுகள் நியூரான்களின் செல்கள் இறப்பதைத் தடுப்பதால் நரம்பு மண்டலச் செயல்பாடு மேம்படுகிறது. ஆப்பிளை உண்பதால் நரம்புமண்டல ஆரோக்கியம் மேம்பட்டு இதனால் வாழ்நாளின் இறுதிப்பகுதியில் அல்ஜூமர் நோய் வரும் அபாயமும் தவிர்க்கப்படுகிறது. இதைத் தவிர, ரத்தம் கட்டிப்போய் பக்கவாதம் வரக்கூடிய அபாயத்தையும் நீரிழிவு நோய் வரும் அபாயத்தையும் ஆப்பிள் குறைக்கிறது.

2. திராட்சை

திராட்சை ஆண்டுதோறும் கிடைக்கக்கூடிய ஒரு பழம். ஆனால், குளிர்காலத்தில் உண்ணும்போதுதான் இப்பழத்தின் உண்மையான ஆதாயங்களை நம்மால் பெற முடியும். ஆண்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகமாக உள்ளதால் சருமநோய் அண்டாமல் தடுக்கவும் திராட்சை உதவும். கண்கள், முட்டிகளுக்கும் திராட்சை வலிமை தருகிறது. ஆகவே, முதியோர்கள் இதைத் தவறாமல் உண்ண வேண்டும்.

3. ஆரஞ்சு

இந்தியாவில் குளிர்காலத்தில் பரவலாகக் கிடைக்கும் ஒரே பழம் ஆரஞ்சுப் பழமாகத்தான் இருக்க முடியும். இவற்றை எடுத்துச் சென்று நாம் வேலை செய்யும் இடத்தில் அமர்ந்தும் உண்ணலாம். குளிர்காலத்தில் ஆரோக்கியத்தைப் பராமரிக்க மிகவும் தேவையான வைட்டமின் சி இதில் அதிகமாக உள்ளது. ஆரஞ்சுப் பழத்தை சாப்பிடுவதில் இன்னொரு முக்கிய ஆதாயமும் உள்ளது. தொடர்ந்து ஆரஞ்சைச் சாப்பிட்டுவந்தால் புற்றுநோய் உண்டாகும் அபாயம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருள்களின் எதிர்மறை விளைவை மட்டுப்படுத்தவும் ஆரஞ்சு உதவுகிறது.

4. மாதுளம்பழம்

குளிர்காலத்தில் நாம் செய்யும் ஆரோக்கியமான தேர்வு என்றால் அது மாதுளம்பழம் உண்பதே. உடலின் இரத்த அழுத்த மட்டங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஹைப்பர்டென்ஷன் நிலைக்கு நாம் செல்வதை மாதுளம்பழம் தடுக்கிறது. உடலுக்குத் தேவையான செரிமான சக்தியைத் தரும் நார்ச்சத்து மாதுளம்பழ்த்தில் அதிகம் உள்ளது. இறுதியாக, மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டால் மாதுளம்பழச்சாறை தொடர்ந்து உண்டு வந்தால் அவ்வலி சரியாகி விடும்.

5. கொய்யாப்பழம்

ஆப்பிள் போன்றே கொய்யாப்பழமும் ஆண்டுதோறும் தங்குதடையின்றி கிடைக்கக்கூடிய ஒரு பழம். ஆயினும் குளிர்காலத்தில் இதை உண்ணும்போதுதான் இதிலிருந்து அதிகபட்ச ஆதாயம் தரக்கூடிய பல விளைவுகளை நாம் பெற முடியும். இனப்பெருக்க சக்தியைப் பெருக்க கொய்யாவிலுள்ள ‘ஃபோலேட்’ மிகவும் உதவுகிறது. தைராய்டு சுரப்பிகளின் செயல்பாட்டைச் சீரமைப்பதற்கும் கொய்யாப்பழம் தேவைப்படுகிறது. உடலில் ரத்தகாயம் ஏற்பட்டால் அது ஆறுவதற்குத் தேவையான கிருமிநாசினியும் இப்பழத்தில் உள்ளது. அடிபட்ட இடத்தில் கொய்யாவைத் தடவினால் திசுக்கள் சீக்கிரம் குணமாகி விடும். நார்ச்சத்து அதிகமுள்ள கொய்யாப்பழம் மலச்சிக்கலுக்கும் பெருமருந்தாக உதவுகிறது.

குளிர்காலத்தில் உண்ண வேண்டிய ஐந்து முக்கியக் காய்கறிகள் 

1. கிழங்கு வகைகள்

கிழங்கு வகைகள் ஆண்டுதோறும் சந்தையில் கிடைக்கின்றன; எனினும் அவற்றின் சிறந்த வகைகள் குளிர்காலத்தில்தான் கிடைக்கும். கிழங்கிலுள்ள ஒரு தனிமம் இதயநோய், குடல்நோய் வராமல் தடுக்கிறது. இவற்றால் கிடைக்கும் மற்ற ஆதாயங்களைத் தவிர, மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டட்தை மேம்படுத்தவும் கிழங்குகள் உதவுகின்றன. இவற்றில் குறைந்த அளவு மட்டுமே கலோரிகள் உள்ளதால் குளிர்காலத்தில் இவற்றை உண்பது பொருந்தும்; மேலும் இவற்றில் சத்துக்கள் அடர்த்தியாக உள்ளன. இதனால் குளிர்காலத்தில் சில்லென்ற தட்பவெப்பநிலையில் உண்ண ஏதுவாக கிழங்குகள் இயற்கையாகவே அமைந்துள்ளன. 

2. கேரட்டுகள்

பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கும் சில காய்கறிகளுள் கேரட்டும் ஒன்று. இதில் வைட்டமின்களும் சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. கேரட்டைத் தொடர்ந்து உண்டுவந்தால் உடலில் ஏற்படும் வைட்டமின் ‘B’, ‘C’, ‘D’, ‘E’ மற்றும் ‘K’ குறைபாடு தொடர்பான நோய்களைச் சீக்கிரமாகக் குணப்படுத்த முடியும். முக்கிய வைட்டமின்கள் தவிர, கேரட்டில் ஃபோலேட்டுகள், இரும்பு, தாமிரம், பொட்டாசியம் மற்றும் பிற தாதுக்களும் உள்ளன. கேரட்டால் உண்டாகும் ஆரோக்கியம் தொடர்பான ஆதாயங்கள் பல. உதாரணமாக, தினமும் கேரட்டை உண்டுவந்தால் கண்களின் பார்க்கும் திறன் மேம்படுவதுடன் புற்றுநோய்க்கெதிரான நோயெதிர்ப்பு சக்தி உருவாகி, அது தாக்காமல் பாதுகாப்புடன் இருக்கலாம். கேரட்டை உண்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

3. பட்டாணிகள்

பல்வேறு ஆரோக்கிய ஆதாயங்களைத் தரும் பட்டாணி இன்னொரு முக்கியமான குளிர்காலக் காய்கறி ஆகும். இத்துடன் கிடைக்கும் உபரியான ஆதாயம் என்னவெனில் பெரும்பாலான இந்திய உணவுகளில் இதைச் சுலபமாகச் சேர்த்து விடலாம். வைட்டமின் ‘B’, வைட்டமின் ‘K’ ஆகிய இரண்டும் பட்டாணியில் அதிக அளவில் உள்ளன. வீக்கத்திற்கெதிராகவும் ஆண்டி-ஆக்சிடன்ட்டாகவும் உடலுக்குள் பட்டாணி வேலை செய்கிறது. இதைப் பச்சையாகவோ (அ) சமைத்த பின்போ உண்ணலாம்; எப்படி உண்டாலும் இது உண்பவருக்குத் தீங்கிழைக்காது. உடல் எடை அதிகரிப்பதையும் அல்ஜீமர் நோய் ஏற்படாமலும் தடுப்பதும் இதன் பிற ஆதாயங்களாகும். இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் பட்டாணி உதவும்.

4. கீரை

கீரைதான் இந்திய வீடுகளில் மிகப்பரவலாகப் பயன்படுத்தப்படும் இலையுடைய காய்கறி. இதில் உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும் பல அவசியமான வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளன. கீரையைச் சாப்பிடுவதால் புற்றுநோய், ஆஸ்துமா ஆகியவை தாக்காமல் பாதுகாக்கலாம். இரத்த அழுத்தத்தையும் கீரை மிகவும் குறைப்பதால் ஹைப்பர்டென்ஷனால் அவதிப்படுபவர்களுக்கு இது பேருதவி செய்யும். இறுதியாக, கீரை உண்பதால் சருமம் ஆரோக்கியமாக இருப்பதுடன் தலைமுடியும் நன்றாக வளர்கிறது. 

5. (சிவப்ப முள்ளங்கி)

குளிர்கால மாதங்களில் கிடைக்கும் உச்சபட்ச உணவு வகைகளில் ஒன்றாக டர்னிப் கருதப்படுகிறது. டர்னிப்பின் பச்சைப் பகுதி முழுதும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இதனால் நுரையீரல் வீக்கம், எம்பைசெமா ஆகியவை கட்டுப்படுத்தப்படுவதுடன் நுரையீரலும் நலம் பெறுகிறது. டர்னிப் உண்பதன் இன்னொரு ஆதாயம் என்னவெனில் இது சிலரிடத்தில் சிறுநீரகக் கற்களையும் கரைத்துவிடுகிறது. பெரிய அளவிலான கற்கள் இல்லையெனில், தொடர்ந்து டர்னிப் உண்டுவந்தால் சிறுநீரகக் கற்கள் பிரச்சினையைச் சுலமாகச் சமாளித்துவிடலாம். 

மேற்சொன்ன பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தவிர குளிர்காலத்தில் நன்கு வளரும் பல உற்பத்திப்பொருட்கள் நம் நாட்டிலுள்ளன. இவற்றில் ஒவ்வொரு பழத்திலும் காய்கறியிலும் உடல் ஆரோக்கியத்திற்கான ஆதாயங்கள் பலவும் ஒளிந்துள்ளன. எனவே, உங்களது காய்கறி கடைக்காரரிடம் செய்று அவரிடம் உள்ள பழங்களையும் காய்கறிகளையும் பாருங்கள். இப்பருவகாலத்தில் எதை அவர் விற்கிறார் எனப்பார்த்து இவற்றில் எதை வேண்டுமானால் வாங்கவும். 

எல்லா பருவகாலப் பயிர்களும் (பழங்கள், காய்கறிகள்) பொதுவாக குறிப்பிட்ட அந்தப் பருவகாலத்துக்கான தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யக்கூடியவை என்பதை நினைவில் கொள்ளவும். உதாரணமாக, ஆரஞ்சுப்பழத்தால் கிட்ட்டும் ஆதாயங்கள் கோடைக்காலத்தை விட குளிர்காலத்துக்கு அதிகம் பொருந்தும். முடிந்தால் தினந்தோறும் பழசாலட் தயாரித்து பருவகாலப் பழங்களிடமிருந்து கிடைக்கும் அனைத்து ஆதாயங்களையும் பெற்றுக்கொள்ளவும். அதேபோல், எந்த உணவைச் சமைத்தாலும் பருவகாலக் காய்கறிகளயும் எப்படியாவது சேர்த்துக்கொண்டே சமைக்க முயற்சி செய்யவும். இவ்வாறு செய்து வந்தால் குளிர்காலத்தில் இவ்வுணவுகளிடமிருந்து கிட்டும் ஆதாயங்கள் எதையுமே நீங்கள் இழக்காமலிருக்க இது ஒரு சிறப்பான உத்தியாக இருக்கும்.

குளிர்கால உலர் சருமத்திற்கான வீட்டு வைத்தியக் குறிப்புகள்

மிகவும் குளிராக இருக்கிறது, உஷணம் வேண்டி நீங்கள் வெய்யிலில் நின்று கொண்டிருந்தாலும் உங்கள் சருமத்தில் பாதிப்பையும், கோடுகளையும் உணரலாம். இது உலர் சரும பிரச்சனை என எல்லோருக்கும் தெரியும். மருத்துவ உலகில் செரோசிஸ் என குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலனோர், குறிப்பாக குளிர்காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்னை இது. சருமம் உலர்ந்து போக முக்கிய காரணம், சுற்றுச்சூழல் மாற்றங்களாகும். இந்த மாற்றம் குளிர்கால உலர் சருமம் எனப்படுகிறது. சருமம் போதிய ஈரப்பதம் உற்பத்தி செய்யாததால் உண்டாகும் நிலை.

Dry Skin in Winter

உலர் சருமம் என்றால் என்ன?

உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் தொடர்ந்து மாறிக்கொண்டே துடிப்பான அமைப்பாக நம்முடைய உடல் இருக்கிறது. அதே போல, பருவநிலை மாறும் போது, அந்த மாற்றத்திற்கு ஏற்ப உடல் மாறிக்கொள்கிறது. இதன்படி, குளிர்கால மாற்றத்தினால் நிகழும் விளைவாக, பெரும்பாலும் உலர் சருமம் அமைகிறது.  

பொதுவாகப் பார்த்தால், சருமத்தில் ஈரப்பதம் இல்லாமல் போகும் போது, சருமம் உலர்ந்து விடுகிறது. எளிமையாக சொல்வது என்றால் கோடைக்காலத்தில் வியர்வை அதிகமாக இருப்பது உங்கள் சருமத்திற்கு நல்லது. இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது,. கடும் குளிர்காலத்தில், அதிகம் விளையாடினால்கூடக் குறைவாகவே வியர்க்கும். எனவே உங்கள் சருமத்திற்குப் போதிய ஈரப்பதம் கிடைகாமல் அது ஊட்டச்சத்து பெறாது. இதனால் உலர் சருமம் உண்டாகும்.

குளிர்காலத்தில் உலர் சருமம் ஏற்படுவதற்கான காரணங்களில் சில, குளிர்கால வெப்பம், சூடான நீரில் குளியல், உலர் தன்மை அளிக்கும் சோப் ஆகியவை ஆகும். உங்களுக்கு தேவை எல்லாம் சருமத்தை மாய்ஸரைஸ் செய்யக்கூடிய நல்ல கிரீம் ஆகும்.  

உலர் சருமம் பற்றி அறிய வேண்டியவை

உலர் சருமம் சுற்றுச்சூழல் மாற்றங்களால் உண்டாகிறது என்பது நமக்கெல்லாம் தெரியும், ஆனால் இதை கவனிக்காமல் விட்டால் உலர் சருமம் உங்கள் ஆளுமையை எப்படி பாதிக்கும் என்பது தொடர்பான ஆழமான புரிதல் வேண்டும். உலர் சருமம் தொடர்பாக கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய சில தகவல்கள்.

 • தினமும் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது, உலர் சருமத்திற்கான இயற்கையான தீர்வாகும். நீர்த்தன்மை குறைவது உலர் சருமம் ஏற்படுவதற்கான முக்கிய காரணம்.
 • 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 75% பேர் உலர் சரும பாதிப்புகு உள்ளாக கூடியவர்கள்.  
 • தேன் சாப்பிடுவது, சருமத்தில் உள்ள மாசுகளை எதிர்ப்பதற்கான இயற்கை வழி.  
 • உங்கள் முகம் மீது பாலை பூசிச்கொண்டு, பத்து நிமிடம் உலர அனுமதிப்பது, உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். தினமும் இதை இரண்டு முறை செய்ய வேண்டும்.
 • பாலில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு பிழிந்து, முகத்தில் பூசிக்கொள்ளவும். குளிர்காலத்தில் உலர் சருமத்தை எதிர்கொள்ளச் சிறந்த வழி இது.
 • 10 நிமிடத்திற்கு மேல் வெந்நீரில் குளித்தால் உலர் சருமம் உண்டாகும்.  
 • 6 முதல் 8 மணி நேரம் குறுக்கீடு இல்லாத தூக்கம், பருக்கள், சுருக்கம் மற்றும் உலர் சருமம் போன்றவற்றிலிருந்து சருமத்தைக் காக்கும். எனவே நல்ல தூக்கம் ஆரோக்கியமானது.  

உலர் சரும அறிகுறிகள்

உலர் சருமத்தை எல்லோரும் அடையாளம் காணலாம். எனினும் உலர் சரும பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்காமல் இருப்பதற்கு முன் கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் இருக்கின்றன. வயது, பருவநிலை, உங்கள் மருத்துவ நிலை என உலர் சருமம் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. உங்கள் உலர் சருமத்தின் தீவிரத்தை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் இதோ:

 • முதலில் உங்கள் சருமம் கடினமாகி, அதன் பொலிவை இழக்கும்.  
 • உங்கள் சருமம் இன்னும் கடினமாவது போல உணரலாம்.
 • தீவிரமான அரிப்பு
 • உங்கள் சருமம், பிளவு பட்டு உதிரத்துவங்கலாம்.
 • சருமத்தில் வெடிப்புகள் ஏற்பட்டால்,
 • சருமம் சிவப்பாகிறதா,
 • வெடிப்புகள் உங்கள் சருமத்தை இரத்தம் சிந்த வைக்கிறதா எனப் பார்க்கவும்.

குளிர்கால உலர் சரும காரணங்கள்

உலர் சருமத்திற்குக் குளிர்காலம்தான் முக்கியக் காரணம் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் குளிர்காலத்தில் உலர் சருமம் ஏற்பட வேறு சில காரணங்களும் இருக்கின்றன. நம்மில் பலரும் உலர் சருமம் அத்தனை ஆபத்தானது அல்ல என் நினைக்கிறோம். எனினும் சில நேரங்களில் இது ஆபத்தாக மாறலாம். உலர் சருமம், இட்சியோசிஸ் எனும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் சருமம் பாம்பு தோல் போல ஆகிவிடும். இதனால் சமூகத்தில் உங்கள் தன்னம்மிக்கை பாதிக்கப்படலாம். உலர் சருமத்தை கவனிக்காமல் விட்டால் இந்த பாதிப்பு ஏற்படலாம்.  

1. வயது காரணமாக உலர் சருமம் ஏற்படலாம்

உலர் சருமம் ஏல்லோரையும் பாதித்தாலும், 65 வயதுக்கு மேல் உள்ளவர்களில் 75 % பேர் இதனால் பாதிக்கப்படலாம். உலர் சருமம் உண்டாக வயோதிகம் முக்கிய காரணமாக இருக்கிறது. காரணம், சரும துளைகள் முன்பை விட குறைவான எண்ணெய் உற்பத்தி செய்வது தான். இது நீங்கள் நினைப்பதைவிட விரைவாக உலர் சருமத்தை உண்டாக்குகிறது.  

2. மருத்துவ வரலாறு

உங்களுக்கு எக்சிமா (eczema) அல்லது வேறு ஏதேனும் அலர்ஜி கடந்த காலத்தில் இருந்தால், நீங்கள் உலர் சரும பாதிப்பிற்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் சரும பாதிப்பிற்கான முதல் அறிகுறியாக இது அமையலாம். ஒரு சில நேரங்களில் உலர் சருமம் பரம்பரையாகவும் ஏற்படலாம். உங்கள் சருமத்தில் ஏதேனும் மாற்றத்தை உணர்ந்தால் உங்களுக்குத் தேவை மாய்ஸ்சரைசிங் கிரீம் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி..  

3. பருவ காலங்கள்

உலர் சருமத்திற்கான முக்கியக் காரணம், குறிப்பிட்ட பருவமாகும். இது பெரும்பாலும் குளிர்காலத்தில் நிகழ்கிறது. குளிர்காலத்தில் வியர்வை உண்டாவதில்லை என்பதையும், இதனால் உங்கள் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு காரணம் பனிமூட்டமான சூழல் சூரிய ஒளி உங்கள் மீது படுவதை தடுத்து விடுகிறது. எனவே சருமத்தில் இயற்கை எண்ணெய்கள் இல்லாமல் அது உலர் தன்மை பெற்றுவிடுகிறது. 

4. வெந்நீர் குளியல்

தினமும் 10 நிமிடத்திற்கு மேல் வெந்நீர் குளியல் எடுத்துக்கொண்டால், உங்கள் சருமம் பாதிக்கப்படும். இது குளிர்காலத்தில் தான் நிகழ்கிறது. எனவே வெந்நீர் குளியல் எடுத்துக்கொள்ளும் நேரத்தை கவனியுங்கள். அடிக்கடி 10 நிமிடத்திற்கு மேல் வெந்நீர் குளியல் எடுத்துக்கொண்டால் சிக்கல் ஆகலாம். குளிர்காலத்தில் உங்கள் பையில் மாய்ஸ்சரைசிங் கிரீம் வைத்திருக்கவும்.  

குளிர்காலத்தில் உலர் சருமத்திற்கான சிகிச்சைகள்

மாய்ஸ்சரைசிங் ஏற்றது என்றாலும் வேறு சில வீட்டு வைத்தியங்களையும் நீங்கள் நாடலாம். மேலும் மாய்ஸ்சரைசிங் கிரீம் இல்லாத போது, சரும பாதிப்பை குறைக்க உதவும் எளிய வழிகளை அறிந்து வைத்திருப்பது நல்லது. சருமத்தில் அரிப்பு ஏற்படாமல் தடுக்க உதவும் எளிய குறிப்புகள் இதோ:

 1. உங்கள் சருமம் மீது கொஞ்சம் ஆலிவ் ஆயில் தடவிக்கொண்டு அதை பின்னர் ஈரத் துணியால் துடைக்கவும். இதன் பிறகு சருமம் பொலிவு பெறுவதையும், ஜொலிப்பதையும் பார்க்கலாம்.  
 2. வீட்டிலேயே அவகாடோ பேசியல் மாஸ்க் செய்துகொள்வது, உங்கள் சருமத்தை மென்மையாக்கி, உலர் சருமத்தைத் தடுக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், பாதி அவகாடோ எடுத்துக்கொண்டு, அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும். பின் இந்த கலவையை முகத்தில் தடவிக்கொண்டு 20 நிமிடங்கள் உலர வைக்கவும். இது சருமத்தை மாய்ஸ்சரைஸ் செய்து மின்ன வைக்கும்.  
 3. இன்னொரு வீட்டு வைத்தியம், தூங்குவதற்கும் முன் சருமத்தில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்வது. தேங்காய் எண்ணெய் அறை வெப்ப நிலையில் அடர்த்தியாகிவிடுவதால் இது மிகச்சிறந்த மாய்ஸ்சரைசிங் கிரீமாக அமையும்.
 4. பாலில் லாக்டிக் அமிலம் இருப்பதாலும் புண்களை எதிர்க்கும் தன்மை இருப்பதாலும் முகத்தில் பால் தடவிக்கொள்வது, உங்கள் சருமம் பாதிப்படைவதில் இருந்து காக்கும்.
 5. சூரிய ஒளி பாதிப்பு அல்லது சருமத்தில் வெடிப்பு இருந்தால் ஆலோவேரா ஜெல்லைப் பயன்படுத்தலாம்.
 6. முகத்தை சூடான நீரில் அல்லாமல் வெதுவெதுப்பான நீரில் கழுவிக்கொள்ளவும்.
 7. நிறைய தண்ணீர் குடிக்கவும். நிறைய தண்ணீர் குடிப்பது அதிகமாக வியர்வை வெளியேற வைத்து சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கும்.  
 8. வாரத்திற்கு இரண்டு முறையேனும் மீன் சாப்பிடுவது உலர் சருமத்தை குணமாக்கும். மீனில் உள்ள ஒமேகா 3 பேட்டி ஆசிட் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக்கும்.
 9. டியோ சோப் பயன்படுத்தினால் அதை மாற்றவும். டியோ சோப் உங்கள் சருமத்தை பாதிக்கும்.
 10. உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இது சரும துளைகளை திறந்து நச்சுகளையும் மாசுகளையும் அகற்றும். தினமும் படுக்கச்செல்வதற்கு முன் இதை செய்யவும்.
 11. சின்னமோன் தூள் மற்றும் தேன் கலந்து உங்கள் முகத்தில் பூசிக்கொள்ளலாம். இதன் பிறகு 15 நிமிடங்கள் கழித்து கழுவிக்கொள்ளலாம். இதுவும் உலர் சருமத்தை எதிர்கொள்ள உதவும்.  
 12. எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து முகத்தில் பூசிக்கொண்டு, 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவிக்கொள்ளவும். இதுவும் உலர் சருமத்தை குணமாக்குவதை உணரலாம்.
 13. வெள்ளரிக்காயைச் சிறு துண்டுகளாக்கிக்கொண்டு, மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். அடுத்ததாக கொஞ்சம் ஆலோவேரா ஜெல் அல்லது யோகர்ட் வேண்டும். இதையும் நன்றாக கலந்து, முகத்தில் பூசிக்கொண்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவிக்கொள்ளவும்.
 14. இரண்டு முட்டைகளை எடுத்து மஞ்சள் கருவை தனியே பிரிக்கவும். மஞ்சள் கருவை மட்டும் எடுத்து அதை கலந்து முகத்தில் பூசிக்கொள்ளவும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவிக்கொள்ளவும்.
 15. உங்களுக்கு உலர் சருமம் என்றால், நீங்கள் வாழைப்பழ பேஷியல் பயன்படுத்தலாம். ஸ்பூன் கொண்டு இரண்டு வாழைப்பழங்களை நன்றாக மசித்து, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்துமுகத்தில் பூசிக்கொண்டு 20 நிமிடங்கள் அப்படியே இருக்கவும். அதன் பிறகு குளிர்ந்த நீரால் முகம் கழுவிக்கொள்ளவும்.  
 16. கோகோ பட்டரை சூடாக்கி உங்கள் உள்ளங்கையில் வைத்திருக்கவும். பின்னர் அதை முகத்தில் மெல்ல பூசிக்கொள்ளவும். இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். இது உலர் சருமத்தை உடனே குணமாக்கும்.  
 17. 5 ஸ்பூன் தேன், 5 ஸ்பூன் தூள் மற்றும் 2 ஸ்பூன் மாவு கொண்டு சாக்லெட் பேக்கும் செய்து பயன்படுத்தலாம். இந்த கலவையை முகத்தில் பூசிக்கொண்டு 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவிக்கொள்ளவும்.  
 18. வீட்டில் கிரீன் டீ இருந்தால், அதை எடுத்து ஏதேனும் கிரீமுடன் கலந்து முகத்தில் பூசிக்கொண்டு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவிக்கொள்ளவும்.
 19. உங்கள் வீட்டு தோட்டத்தில் வேப்ப மரம் இருந்தால், அதன் இலைகளை எடுத்து பொடியாக்கி, கொஞ்சம் மஞ்சள் மற்றும் தேனில் கலந்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து முகம் கழுவவும். 
 20. உலர் சருமத்தில் இருந்து விடுபட இஞ்சியும் கைகொடுக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இஞ்சி சாறு எடுத்து, தேன் மற்றும் பன்னீர் கலந்து, விரல்களில் எடுத்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவிக்கொள்ளவும்.  

குளிர்காலத்தில் உலர் சருமத்தைத் தவிர்க்க செய்ய வேண்டியவை

உலர் சருமம் அரிப்பை உண்டாக்கலாம். இதனால் வலி உண்டாகலாம். சில நேரங்களில் இரத்தமும் வரலாம். உலர் சருமத்தை சமாளிக்க அல்லது உலர் சருமத்தை தவிர்ப்பதற்கான வழிகள் இதோ:  

 • நெந்நீரில் குளிப்பதாக இருந்தால் 10 நிமிடத்திற்கு மேல் குளிக்க வேண்டாம்.  
 • உலர் சருமம் இருப்பதை மறக்க வேண்டாம். இது இட்சியோசிஸ் உண்டாக்கலாம்.  
 • முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும்.
 • உங்கள் சருமத்தை உலர் தன்மை பெற வைக்கும் சோப்களை தவிர்க்கவும்.
 • மாய்ஸ்சரைசிங் கிரீமை தவிர்க்கவும்.
 • படுக்கச் செல்லும் முன் சருமத்தின் மீது தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளவும்.  
 • நிறைய தண்ணீர் குடிக்கவும்.
 • வெளி விளையாட்டுகளில் ஈடுபடவும். இது வியர்க்க வைக்கும். வியர்வை சருமத்தை ஈரப்பதம் பெற வைக்கும்.  

பொதுவான குறிப்புகள்

உங்கள் முகம்தான் உங்கள் அடையாளம். அதுவே உங்களை ஊக்கம் பெற வைக்கிறது. பொலிவான சருமம் பெறுவதற்கான வழிகள் இதோ:

 • சன்ஸ்கிரீன் பயன்படுத்து உங்கள் முகத்தை புற ஊதாக் கதிர்களிலிருந்து (UV) காக்கும்.
 • பொலிவான சருமத்திற்கு வீட்டு வைத்திய குறிப்புகளை நாடவும்.
 • ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவும்.
 • புகைபிடிக்க வேண்டாம்.
 • அதிக மனஅழுத்தம் கொள்ள வேண்டாம். மனஅழுத்தம் பருக்களை உண்டாக்கலாm.

குறிப்புகள்

உலர் சருமம் தானாகவே சரியாகிவிடும் என்றாலும் சில நேரங்களில் இது தாமதமாகலாம். மேலும் உலர் சருமத்தை அலட்சியம் செய்யாமல் இருப்பது முக்கியம். இதுவே ஆரோக்கியமான சருமத்திற்கான வழி. உலர் சருமம் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும், அவற்றுக்கான பதில்களும்:

 1. கோடைக்காலத்தில் சருமத்தை பாதுகாப்பது எப்படி?

குளிர்காலத்தில் சருமத்தை காப்பது முக்கியம் என்றால், கோடைக்காலத்திலும் இது அவசியமாகும். சரியான சோப் மற்றும் மாய்ஸ்சரைசிங் கிரீம் பயன்பாடு உங்கள் சருமத்தை பாதுகாக்கும். முக்கியமாக கோடை வெய்யில் இருந்து பாதுகாத்துக்கொள்ள சன்ஸ்கிரீன் கிரீம் கையில் வைத்திருக்க வேண்டும். மேலும் முக்கியமாக நிறைய தண்ணீர் குடித்துக்கொண்டிருகக் வேண்டும்.  

 1. உலர் சருமத்தின் முக்கிய அறிகுறி என்ன?

சருமத்தில் அரிப்பு ஏற்பட்டு வெடிப்பு உண்டாவது தான் உலர் சருமத்தின் முதல் அறிகுறியாகும். சருமம் உலர் தன்மை பெற்றால் அரிப்பு மோசமாகவு, இரத்தக்கசிவும் ஏற்படலாம்.  

 1. மருந்துகளால் உலர் சருமம் ஏற்படுமா?

ஆம், ஒரு சில மருந்துகள் உலர் சருமத்தை உண்டாக்கலாம். அதிக இரத்த அழுதத்திற்காக அளிக்கப்படும் டைரட்டிக்ஸ் மற்றும் ஒரு சில ஒவ்வாமைகளுக்காக அளிக்கப்படும் ஆண்டிஹிஸ்டாமைன்ஸ் போன்ற மருந்துகளில் இவ்வாறு பாதிப்பு ஏற்படுத்தலாம். இது போன்ற மருந்துகள் உங்கள் சருமம் ஈரப்பத்தை உற்பத்தி செய்வதை தடுத்து உலர் தன்மையை உண்டாக்கலாம்.  

ஒரு சிலருக்கு உலர் சருமம் தானாக குணமாகிவிடலாம். ஆனால் உலர் சருமத்தை முறையாக கவனிப்பது அவசியம். மாய்ஸ்சரைசிங் கிரீம் மற்றும் வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றலாம். உலர் சருமம் எந்த பருவநிலையிலும், யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம் என்பதால் கவனம் தேவை. அதே நேரத்தில் குளிர்கால உலர் சருமம் பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்த வகை பாதிப்பை குறைக்க சிறந்த வழி, தினமும் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீராவது அருந்துவதுதான்.

தோலின் மீது வெள்ளைப் படலம்: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் வீட்டு வைத்தியங்கள்

தோலின் மீதுள்ள எந்த வெள்ளைப் படலமும் அபாயத்திற்கான அறிகுறியாகும்; அது பரவும் முன்னர் உடனடியாக மருத்துவ உதவியை நீங்கள் நிச்சயம் பெற வேண்டும். எதனால் இப்படிப் படலம் தோன்றுகிறது என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்; பதட்டமடையாமல் தோல் சிகிச்சை நிபுணரைச் சென்று பாருங்கள். தோல் நிறம் இழத்தல் என்பதே வெள்ளைப் படலமாகும்; மருந்தைத் தானாகவே தீர்மானிக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் உங்களது தோலின் ஆரோக்கியத்தைச் சீரழித்துவிடுவீர்கள் என்பது உண்மை.

White Patches

தோல்சிகிச்சை வல்லுநரின் அறிவுரையும் முறையான சிகிச்சையுமே இதைத் தொடங்க முக்கியத் தேவைகள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே, தோலில் வெள்ளைப் படலம் தென்பட்டால் உடனடியாக தோல்சிகிச்சை நிபுணரைக் கட்டாயம் சென்று பார்க்கவும்.

வெள்ளைப் படலம் என்றால் என்ன?

விடிலிகோ என்றும் கூறப்படும் வெள்ளைப் படலம் சருமத்தில் ஏற்படுத்தும் நிறமாற்றத்தால் நாளடைவில் தோல் தன் இயல்பான நிறத்தை இழந்துவிடும். நிலைமை தீவிரமானால், சிலசமயம் இச்சருமநிற மாற்றத்தால் தலைமுடி, வாயின் உட்புறம் ஆகியவையும் பாதிக்கப்படலாம். விடிலிகோ எதனால் உருவாகிறது? உங்களது சருமத்திலும் தலைமுடியிலும் மெலானின் உள்ளது; மெலானின் சுரக்காதபோது, இறுதியில் விடிலிகோவின் பாதிப்பு ஏற்படும்.

தோலின் நிறம் கருமையாக இருப்போரிடத்தில் இது மோசமாகத் தெரியும். இது தொற்றுநோயல்ல என்றாலும் சமுதாயத்தில் உங்களின் நம்பிக்கையைக் குறைத்து பெரும் மனச்சோர்வையும் ஏற்படுத்தும். சருமநிற மாற்றத்தால் அவதிப்படுவோரின் மோசமான பிரச்சினை என்னவெனில் பாதிக்கப்பட்டோர் மன அழுத்தத்தை உணர்கின்றனர்; இவ்வழுத்தமே பல்வேறான உளவியல் கோளாறுகளையும் உருவாக்குகிறது. சருமம் பாதிக்கப்பட்ட இடத்தில் அது இழந்த நிறத்தை மீட்பதுதான் சிகிச்சை என்றாலும் மீண்டும் அவ்வாறு நிறம் மாறுவதை இச்சிகிச்சை தடுத்துவிடும் என உறுதியாகக் கூறமுடியாது.

வெள்ளைப் படலம் பற்றிய உண்மைகள்:

தோற்றம் அரூபமாக இருப்பதால் பொது இடத்தில் தாம் எப்படிப் புழங்குவது என்ற ஒரு கசப்புணர்வு இதனால் பாதிக்கப்பட்டோருக்கு எப்போதும் இருக்கும். வெள்ளைப் படலம் என்ன என்று தெரிந்து கொண்டுவிட்டபின் சருமத்தின் நிலைமையில் ஏற்படும் மாற்றம் பற்றிய சில உண்மைகளைப் பார்க்கலாம்:

 • சருமத்தின் நிலை பிறருக்குத் தொற்றாது.
 • பெற்றோரில் யாருக்காவது இப்பிரச்சினை இருந்தால் குழந்தைக்கும் அதே நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளது.
 • இத்தகைய சருமநிலையினால் தைராய்டு கோளாறுகள் உண்டாகலாம்.
 • பலர் இதைத் தொழுநோய் என்று தவறாக நினைத்துக் கொள்கின்றனர்.
 • யாருக்கும் எந்த வயதிலும் இது ஏற்படலாம்; ஆனால் பெரும்பாலும் 20 வயதுக்குள் இருப்பவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
 • இதற்கான சிகிச்சையானது சருமம் நிறம் மாறுவதைத் தடுப்பதற்குத் தரப்படுகிறது; இதனால் சருமம் தன் பழைய நிறத்தை அடைய முடியும்.
 • சருமம் இப்படி ஆவதற்கு முக்கியக் காரணங்களுள் ஒன்றாக மனச்சோர்வு சுட்டிக்காட்டப்படுகிறது.

குறிப்பு: சருமத்தில் ஏதாவது படலம் தென்பட்டால், உடனடியாகச் சென்று மருத்துவரிடம் ஆலோசனை பெறுமாறு உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதனால் நோய் வளர்வது நிற்பதுடன் நிறமிழந்த சருமம் மீண்டும் பழைய நிறத்தைப் பெறும் செய்முறையும் ஊக்கப்படுத்தப்படுகிறது.

வெள்ளைப் படலத்திற்கான காரணங்கள்:

வெள்ளைப் படலங்கள் யாரை வேண்டுமானாலும் பாதிக்கக்கூடும் என்பது நமக்குத் தெரிந்துவிட்டதால், இது எப்படி ஏற்படுகிறது, சருமத்தை இப்படி மாற்றும் மூலக்காரணம் எதுவென்று புரிந்து கொள்வோம். வெண்படலத்தைத் தோல் வியாதி போல் பாவிக்காமல் தீவிர உளவியல் பிரசினையாக பாவித்து சிகிச்சை தரப்படுகிறது; ஏனெனில் இது ஒருவரின் மனதையும் சூழலையும் கடுமையாகப் பாதிக்கும் தன்மை கொண்டது. வெண்படலத்தை உருவாக்கும் பல்வேறு சருமநிலைகள் பற்றிக் கீழே தரப்பட்டுள்ளது:

 • மிலியா: தோலிலிருந்து திரவமுள்ள கட்டிகள் உருவாகி மேற்பரப்பில் வந்தது போலிருக்கும். இதனால் வெண்படலம் உருவாகலாம்.
 • எக்செமா: சருமம் சிவப்பாகி பின் தோன்றும் சிவப்புக் கட்டிகள் கைகள், பாதங்கள், முழங்கை, இமைகள், மணிக்கட்டு, முட்டிகளைப் பாதிக்கும்.
 • பிடிரியாஸிஸ் அல்பா: 1-3 வயதுள்ள குழந்தைகள் மட்டும் இவ்வகை நோயால் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக இது முகத்தில் தோன்றி சருமம் சிவப்பாகி, அரிப்பும் வெண்படலமும் உண்டாகும். சருமத்தின் நிலை சீரானாலும் பல வெண்குறியீடுகள் தங்கிவிடும்.
 • விடிலிகோ: அடிக்கடி தொன்றும் வெண்குறியீடுகள் வெண்படலங்களே; இவை முகத்திலோ உடலின் எப்பகுதியிலோ தோன்றலாம். சருமத்தின் செல்கள் இறப்பதால் இந்நிலை ஏற்படுகிறது. ஆயினும் வெண்படலங்கள் தோன்ற இதுவே காரணமாகும்.
 • சன்ஸ்பாட்ஸ்: வெள்ளைக் குறியீடுகளுள்ள இடங்களில் தோல் நிறத்தை இழந்துவிடும். சரும நிறமாற்றத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளின் காரணமாக சருமம் தன் நிறத்தை இழந்து விடுகிறது. இது பொதுவாக கால்களில் தோன்றி, கைகளுக்குப் பரவி பின்னர் முதுகுக்கும் வருகிறது. நீண்ட நேரம் சூரியஒளி உடலில் பட்டால் இப்பிரச்சினை தோன்றலாம். இது மரபணுக்களாலும் உருவாகிறது.
 • லிசென் ஸ்கெலிரோசஸ்: இந்த சருமநோய் எல்லா வயதினரையும் பாதிக்கும். பெண்களிடத்தில் இது அதிக சிவப்பாகவும் தோலுக்கடியில் ஒல்லியாகவும் இருக்கும். ஆண்களிடத்தில் இது ஆண்குறியின் மேற்புற தோலில் உண்டாகும். உடலின் பிறபகுதிகளிலும் இது தோன்றலாம். இதற்கான முக்கியக் காரணங்களுள் ஒன்றாக ஹார்மோன் கோளாறைக் குறிப்பிடலாம்.

வெண்படலத்தின் அறிகுறிகள்:

வெண்படலம் உங்களது தன்னம்பிக்கையை வெகுவாகக் குறைத்துவிடும் என்பதால் உடலில் எங்காவது வெண்குறியீடு தென்பட்டாம் உடனடியாக மருத்துவ உதவியைப் பெறவும். கைகள், பாதங்கள், முழங்கை, உதடுகள், முகம் என உடலில் சூரியஒளி படுமிடங்களில் இப்பிரச்சினை உருவாகும் வாய்ப்புள்ளது. விடிலிகோவால் பாதிக்கப்பட்டுள்ளதை எப்படி நாம் தெரிந்து கொள்வது? நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சருமநிற மாற்றத்தின் சில அறிகுறிகள் கீழே தரப்பட்டுள்ளன:

 • தலைமுடி, புருவம், தாடி ஆகியவற்றில் நரைமுடி தோன்றுதல்
 • சருமத்தின் இயல்பான குணம் மறைந்து போகுதல்
 • வாய்க்குள்ளும் மூக்குக்குள்ளும் வண்ணம் குறைந்து போகுதல்
 • விழித்திரைப் படலத்தின் நிறத்தில் மாற்றம் ஏற்படுதல்

சருமநிறமாற்றமானது உடலில் பலவித பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதன் தோற்றத்தைப் பொறுத்து உடலின் பல்வேறு பகுதிகளில் சருமநிறமாற்றம் பின்வருமாறு ஏற்படலாம்:

 • உடலின் பல பாகங்களில் தோன்றுவது: சருமநிற மாற்றத்தின் மிகப் பொதுவான வகையான இது உடலின் 2-3 பகுதிகளில் தோன்றலாம்: எந்த உறுப்பிலாவது அல்லது வெளியில் சருமத்திலோ ஏற்படலாம். இவ்வகையானது பொதுவான விடிலிகோ எனப்படுகிறது.
 • உடலின் ஒரே ஒரு பகுதியில் தோன்றுவது: உடலின் ஏதாவது ஒரு பக்கத்தில் ஏற்படும் இவ்வகை சருமப் பிரச்சினை சிறுவயதில் தோன்றி பின்னர் மறைந்துவிடும்.
 • உடலின் சில பகுதிகளில் மட்டும் தோன்றுவது: இவ்வகை சருமநிற மாற்றம் குவிமைய விடிலிகோ எனப்படும்; இதன் விளைவு என்னவென கணிப்பது கடினம். சிலசமயம் வெண்படலம் பரவுவது தானே நின்றுவிட, இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சருமத்தை மீண்டும் பழைய நிறத்துக்குக் கொண்டுவர மிகவும் அவதிப்படுவர்.

முகத்தில் வெள்ளைக் குறியீடுகள்

முகத்தில் சருமநிறமாற்றம் ஏற்படுவதே விடிலிகோவின் மோசமான கட்டம் ஆகும். பின்வரும் நோய்களின் காரணமாக முகத்தில் விடிலிகோ ஏற்படலாம்.

 • சொரியாஸிஸ்: இப்பொதுவான தீவிர சருமநோயில் ரத்தத்தின் செல்கள் சருமத்தின் மீது வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. தோலின் செல்கள் அதிக வேகத்தில் சருமத்தின் மேற்பரப்பில் வளர்கின்றன. இதனால் தீவிரமான அரிப்பு ஏற்படுவதுடன் தோலும் காய்ந்துவிடும். பூச்சிக்கடி, புகைபிடித்தல், வைட்டமின் ‘D’ குறைபாடு, மனச்சோர்வு ஆகியவற்றால் சொரியாசிஸ் ஏற்படலாம். சிலருக்கு மது அருந்துவதாலும் இது ஏற்படும். இதனால் முகத்தில் வெள்ளைக் குறியீடுகள் நிரந்தரமாகத் தோன்றலாம்
 • எக்செமா: தோல்நோயின் இத்தீவிர நிலையில் வீக்கம் நாளடைவில் வெள்ளைக் குறியீடுகளாக மாறிவிடும். குழந்தைகளை இது அதிகளவில் தாக்குகிறது; இதைச் சிகிச்சை மூலம் குணமாக்கி விடலாம். குணமாகி விட்டாலும் அறிகுறிகள் வாழ்நாள் முழுதும் உடலில் தங்கிவிடும். கடும் அரிப்பு ஏற்பட்டு, அத்துடன்கூட சருமத்தின் மேற்பரப்பு முழுவதும் தோல் தடிமனாகவும் ஆகிவிடும். முகத்திலும் முதுகிலும் கைகளிலும் இப்படித் தோன்றும் வாய்ப்புண்டு.
 • சத்துக் குறைபாடுகள்: வைட்டமின் ‘D’, வைட்டமின் ‘E’, கால்சியம் போன்ற சத்துக் குறைபாட்டினால் உண்டாகும் சருமநிற மாற்றம் முகம் & உடலின் பிற பகுதிகளில் வெள்ளைக் குறியீடுகளை உருவாக்கும். இது தொற்று நோயல்ல என்றாலும், உங்களது தன்னம்பிக்கையின் மீது ஒரு ஆறாத வடுவை ஏற்படுத்தி விடும். ஆரோக்கியமான, சமநிலையுடன் கூடிய உணவுத்திட்டத்தைப் பின்பற்ற வேண்டுமென்பதையே சத்துணவுக் குறைபாடுகள் உங்களுக்கு உணர்த்துகின்றன.
 • செபார்ஹிக் டெர்மைடிஸ்: இவ்வகை சரும வியாதியில் தீவிர அரிப்பு, ஈறு ஆகியவற்றுடன் முகம், சருமம், உச்சந்தலை, மார்பில் சருமம் சிவப்பாக ஆகிவிடும். வயது வந்தவர்களுக்கு உயரழுத்த மனச்சோர்வால் இந்த வியாதி வரலாம்; பாக்டீரியாவாலும் வரக்கூடும். பூஞ்சை எதிர்ப்பு க்ரீம்கள், மருந்து போலுள்ள ஷாம்பூக்கள் ஆகியவற்றால் அறிகுறிகளை சரிசெய்து விடலாம். வெள்ளைக் குறியீடுகளை உண்டக்கும் இந்நோய் உங்களது முகத்தைத் தாக்காமலிருந்தால் அது உங்களது அதிருஷ்டமே. 

வெள்ளைப் படலத்தைக் குணப்படுத்தும் வீட்டு வைத்தியம்:

சருமநோய் நிபுணரிடம் ஆலோசனை பெற்றால் அவர் உங்களது சருமத்தின் தன்மைக்கு ஏற்ப மருந்துகளைத் தருவார். ஆனாலும், தோலுக்கான சிகிச்சை பெறுகையில் சிலவகை வீட்டு வைத்தியங்களை நீங்கள் நிச்சயம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வெண்படலத்திற்கான சிகிச்சையாக பின்வரும் வீட்டு வைத்தியங்களைச் செய்து பார்க்கலாம்:

 • நீரருந்தவும் சமைக்கவும் செம்புப் பாத்திரங்களை பயன்படுத்துங்கள்; முக்கியமாக, முன்தினம் இரவே நிரப்பப்பட்ட செம்புப் பாத்திரத்தில் உள்ள நீரை அருந்துவது மிகவும் நல்லது.
 • அத்திக்காயை உண்ணவும்.
 • இஞ்சிச் சாறைக் குடித்தால் சருமத்திலுள்ள வெண்படலங்களுக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.
 • மாதுளம் இலைகளைக் காயவைத்து பொடியாக அரைக்கவும். நீரில் 8 கிராம் பொடியைப் போட்டு ஒவ்வொரு காலையும் அருந்தவும்.
 • சமைத்த காய்ந்த இலைகள், பழங்கள் மற்றும் பூக்களைச் சம அளவு உட்கொள்ளவும். இக்கலவைப் பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்து நீரில் கலந்து உட்கொள்ளவும்.
 • அடிக்கடி மோர் குடிக்கவும்.

குறிப்பு: அனைத்து வகை வீட்டு வைத்தியங்களும் பலன் தரும்; ஆனால் உங்களது விடிலிகோ நிலைமை பற்றி சருமநோய் நிபுணரிடம் ஆலோசனை பெற்ற பின்னரே மேற்குறிப்பிட்ட மருந்துகளை நீங்கள் உட்கொள்ள வேண்டிய அளவு பற்றி முடிவு செய்ய வேண்டும். 

எப்போது டாக்டரிடம் சென்று ஆலோசனை பெறுவது?

உடலின் எப்பகுதியிலாவது வெண்படலம் தெரிந்தால் அதைத் தீவிரமான ஒரு அறிகுறியாக நீங்கள் கருதவேண்டும். அது சொறியாக இருக்கலாம் என்பதை மறவாதீர்கள். உடனடியாக சருமநோய் நிபுணரிடம் சென்று பார்க்காவிட்டால் பெரிய பிரசினையாக ஆகிவிடும். விடிலிகோவுடன் தொடர்புடைய பின்வரும் அறிகுறிகள் இருந்தால் உடன் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறவும்.

சருமம், தலைமுடி/கண்களில் சில குறிப்பிட்ட பகுதிகள் இயல்பான நிறத்தை இழக்க ஆரம்பித்தால் நிச்சயம் மருத்துவரிடம் செல்லவும்.

மேலும், விடிலிகோவை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்பதையும் சிகிச்சையானது வெண்படலம் பரவுவதை நிறுத்துவதற்காகவே என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

வெண்படலம் தோன்றாமல் தடுக்கும் வழிகள்:

உடலில் எங்காவது வெண்படலம் இருந்தால் உங்களது சருமத்தின் நிலைமை பற்றித் தெரிந்து கொள்ள முதலில் சருமநோய் நிபுணரிடம் செல்லவும். இந்த வெண்படலங்கள் உடலின் பிற பகுதிகளுக்கு பரவுவதைத் தடுக்க சிலவழிகள் உள்ளன. பின்வருவனவற்றை சரிவரக் கடைப்பிடித்து வந்தாலே இந்த வெண்படலத்திலிருந்து நீங்கள் தப்பிக்கலாம்:

 • மனச்சோர்வு அடையாமல் காத்து வந்து, மனச்ச்சோர்வு வரும்போது மனதை ரிலாக்ஸ் செய்ய முயற்சிக்கவும்.
 • ·உடலிலுள்ள எண்ணெயை முழுவதுமாக எடுத்துவிடும் குளியல் சோப்பு வகைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
 • ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் வரை குளிக்கவும்.
 • அதிகாலை சூரியஒளி உடலில் படும்படி 15-20 நிமிடங்கள் நிற்கவும்.
 • உங்களுக்கு சற்றும் ஒவ்வாத க்ரீம்களையோ அழகு சாதனங்களையோ பயன்படுத வேண்டாம்.
 • இரும்புச்சத்து அதிகமுள்ள புலால் உணவு, தானியங்கள், பீன்ஸ் மற்றும் இலையுள்ள காய்கறிகளை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும்.
 • கடல் உணவை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
 • லூகோடெர்மா நோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொள்ள விருப்பமில்லை என்றால் உப்பு, சோடியம் ஆதாரமாக உள்ள உணவைத் தவிர்க்கவும். 

குறிப்பு: சருமநோய் நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைச் சருமத்தின் சிகிச்சைக்காக நீங்கள் உட்கொள்ளும்போது மட்டுமே மேற்சொன்ன அனைத்து குறிப்புகளையும் நீங்கள் பின்பற்றலாம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தொற்றிக்கொள்ளும் தீவிர நோயாக வெண்படலத்தை பலர் நினைப்பதில்லை; சமூகத்தில் நீங்கள் செயல்படும் விதத்திலும் உங்களது தன்னம்பிக்கையிலும் பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தக்கூடும். அடிக்கடி வெண்படலம் என்ற தலைப்பில் கேட்கப்படும் பின்வரும் கேள்விகள் இதுகுறித்து உங்களுக்கு மேலும் புரியவைக்கும்:

 1. வெண்படலங்களை சிகிச்சையால் குணமாக்க முடியுமா?

மருத்துவ ரீதியாக விடிலிகோ எனக் கூறப்படும் வெண்படலங்களை முற்றும் குணமாக்க முடியாது; ஆனால் அவை உடலில் பரவாமல் தடுக்க முடியும். வாழ்நாள் முழதும் உடலில் தங்கும் இவ்வகைப் படலங்கள் தனிநபருடைய சமுதாயம் பற்றிய எண்ண ஓட்டத்தையும் மாற்றியமைக்கக் கூடியவை.

 1. வெண்படலம் உருவாகாமல் இருக்க தவிர்க்கப்பட வேண்டிய உணவு வகைகள் எவை?

நீங்கள் உட்கொள்ளும் உணவும் உங்கள் சருமத்தில் தாக்கம் ஏற்படுத்துகிறது. சில உணவுகள் பலருக்கு ஒவ்வாததாக இருக்கலாம். சில உணவு வகைகள் வெண்படலத்தைத் தீவிரமாக்கி மேலும் பரவச் செய்யும். வெண்படலத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பின்வரும் உணவு வகைகளைத் தவிர்த்தாக வேண்டும்:

 • காஃபி;
 • சிட்ரஸ் பழங்கள்;
 • தயிர்;
 • கடல் உணவு;
 • நெல்லிக்காய்; மற்றும்
 • மது. 

வெண்படலங்கள் உள்ள நபருக்கு அவை மிகக் கொடுமையான அனுபவத்தை தரும். இது சாதாரண நிகழ்வு என்றே அறிவியல் கூறினாலும், பாதிக்கப்பட்ட ஆணும் பெண்ணும் ஒவ்வொரு நாளும் காலையில் விழிக்கும்போது இந்த கசப்பான உண்மையைப் பெரிதாக உணர்வார்கள். இச்சரும நிலையானது மனச்சோர்வு மற்றும் பிற உளவியல் ரீதியான பிரச்சினைகளை உருவாக்கி சமூகம் பற்றிய ஒருவரது எண்ண ஓட்டத்தையும் அவரது வளர்ச்சியையும் பாதிக்கும். வெண்படலத்தை உடலில் பார்த்த அடுத்த கணமே உடனடியாகச் சென்று சருமநோய் நிபுணரைப் பார்த்து அது மேலும் உடலில் பரவாமல் இருக்கவும் சருமம் மேலும் நிறமிழக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். ‘வந்தபின் சிகிச்சை அளிப்பதைவிட நோய் வருமுன் காப்பது நல்லது’ என்பதை எப்போதும் மறக்காதீர்கள். 

குர்கான் நகரின் கேர் & கியூர் க்ளினிக்கில் பணிபுரியும் டாக்டர் சிராக் சத்தா அவர்கள் சருமநோய் நிபுணர், அழகுச்சிகிச்சை நிபுணர் மற்றும் முடிமாற்றுச் சிகிச்சை நிபுணரும் ஆவார். 8 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த இவர் MBBS பட்டப்படிப்பை 2011இல் முடித்து அதன் பின்னர் MUHS மூலம் BUV & MD (சரும சிகிச்சை, பால்வினை மற்றும் தொழுநோய் சிகிச்சை நிபுணர்) போன்ற பட்டங்களை 2017இல் படித்து முடித்தார்.

சூரியக் குளியலின் 15 ஆரோக்கிய நன்மைகள்

நம் வீட்டுப் பெரியவர்கள் சூரிய வெய்யிலில் நிற்க வேண்டாம் அதன் புற உதாக் கதிர்களால் பாதிப்பு உண்டாகும் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம், ஆனால் உண்மையில் சூரியக் குளியலால் நமக்குப் பல்வேறு நன்மைகள் உண்டாகின்றன. கோடைக்காலத்தில் விடியற் காலையில் எழுந்து குறைந்தபட்சம் 5 நிமிடங்களாவது சூரிய வெப்பம் படுமாறு நிற்பது நல்லது, காரணம், சூரிய ஒளி நம் தோலில் படும்போது உற்பத்தி செய்யப்படும் வைட்டமின்-டி, வீக்கம் ஏற்படுவதிலிருந்து காக்கிறது, நினைவுத்திறனை மேம்படுத்தும், புற்றுநோய் மற்றும் அழற்சியிலிருந்தும் பாதுகாக்கிறது. வைட்டமின் டி குறைபாடு இருந்தால், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் இதய நோய் உண்டாகும்.

Sunbathing Benefits

1. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது

நம்மில் பெரும்பாலானோர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறோம். ரத்த அழுத்தத்தைக் குறைக்க பல உணவுப் பொருள்கள் உதவிகின்றன, ஆனால், தினமும் குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் சூரியக் குளியல் நமக்கு பல்வேறு வகைகளில் பலன் தரும். தோலின் மேலடுக்கில் காணப்படும் நைட்ரிக் ஆக்சைட் சூரிய ஒளியில் பட்டு ரத்த நாளங்களை விரிவடையச்செய்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இது நம் ரத்த ஓட்டத்தில் ஆக்சைட் செல்ல அனுமதிக்கிறது, அதன் மூலம் ரத்த அழுத்தம் குறைகிறது. தினசரி வெறும் 15 நிமிட சூரியக் குளியல் மூலமாக இதைச் சாதிப்பது எவ்வளவு எளிது?

2. நல்ல உறக்கம் பெற

தூக்கத்தில் மூச்சுத்திணறல் அல்லது தூக்கமின்மை நோயால் அவதிப்படுபவராக நீங்கள் இருந்தால், தினமும் காலையில் வெறும் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நின்றாலே போதும், இது நல்ல உறக்கம் பெற உதவும். எனவே காலையில் 15 நிமிடங்கள் சூரியக் குளியல் போட மறந்துவிடாதீர்கள், இது நம்மை சுறுசுறுப்பாகவும், ஆற்றலுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்திருக்கும்.

3. மூளைச் செயல்பாட்டை அதிகரித்தல்

சூரியக் குளியலால் நம் மூளை உள்பத்திசெய்யும் அதிக செரோடோனின் ரசாயனம் நம் மனநிலையை ஊக்குவித்து மூளைச் செயல்பாட்டை அதிகரிக்கும். பெரும்பாலும் நாம் காலை தினமும்15 நிமிடம் சூரிய ஒளியில் நிற்பதை மறந்துவிடுகிறோம், இது எஸ்.ஏ.டி. எனப்படும் பருவகால பாதிப்பு கோளாறு நிலவரத்தை ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும் மூடிய கதவுகளுக்குள்ளேயே நீண்ட நேரம் இருப்பவர்களுக்கு ஏற்படும். மிகவும் குறைவான அளவு சூரிய ஒளி படுவதால் மன அழுத்தம் ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்கான மிகச் சிறந்த வழி தினமும் காலை குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பதுதான்.

4. அல்சீமர் நோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது

அல்சீமர் நோய் உள்ளவர்களை சில காலம் சூரிய ஒளியில் நிற்க வைத்த பிறகு அவர்களது மன ஆற்றலை சோதித்துப்பார்த்ததில் கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்பட்டதோடு, நோய்க்கான அறிகுறிகளும் குறைந்துள்ளதும் அது குறித்த ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. மேலும் இவ்வாறு தினமும் நல்ல சூரிய ஒளியில் நிற்கும் நோயாளிகளுக்கு மன அழுத்த நோயின் அறிகுறிகள் குறைந்தும் காணப்பட்டன.  

5. தோல் குறைபாடுகளை குணப்படுத்தும்

தினமும் காலை குறைந்தபட்சம் 5 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பதால் முகப்பரு, அரிக்கும் தோலழற்சி, மஞ்சள் காமாலை, தடிப்புத் தோல் அழற்சி மற்றும் பூஞ்சை தோல் தொற்று நோய்கள் முதலிய எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க உதவும். பல ஆண்டுகளாக, தோலில் ஏற்படும் கோளாறுகளுக்கு சூரிய ஒளி பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, தினமும் காலையில் சிறிது நேரம் சூரிய ஒளியில் நின்றாலே தோல் நோய்கள் பிரச்சினையை நாம் தவிர்க்கலாம். ஆனால் நீண்ட நேரம் சூரிய வெப்பத்தில் நின்றால் தோல் கருத்துவிடும். இவ்வாறு தோல் நிறம் மாறினால் தோல் பாதிப்படைந்துள்ளதற்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம்.

6. குழந்தைகளின் வளர்ச்சிக்க உதவுகிறது

ஒரு குழந்தை தினமும் காலையில் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருநதால், அந்தக் குழந்தை உயரமாக வளரும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகளை தினமும் காலை 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் வைத்திருந்தால் போதும், அது அவர்களுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும்.

7. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

சூரிய ஒளி தோல் தடிப்பு, அழற்சி போன்ற நோய்களுக்கான சிகிச்சையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரத்த வெள்ளை அணுக்களில் சூரிய ஒளி படும்போது, அது தொற்றுகளை எதிர்த்துப்  போராடுவதில் ஒருங்கிணைந்த பங்கு வகிக்கலாம். இதற்கெல்லாம் நாம் செய்ய வேண்டியது, தினமும் காலை எழுந்து அதிகபட்சம் 15 நிமிடங்கள் சூரிய ஒளி படுமாறு நிற்க வேண்டும், அவ்வளவுதான், இது நமது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்தி, நம்மை ஆற்றலுடன் வைத்திருக்கும்.  

8. புற்றுநோய் வரும் ஆபத்தைக் குறைக்கும்

வைட்டமின் டி பற்றாகுறைதான் புற்றுநோய்க்கான முக்கிய காரணம். வைட்டமின் டி குறைபாடு மார்பகம் மற்றும் பெருங்குடல் புற்றுநோயைத் துண்டும். மனித தோல் ஏராளமான வைட்டமின் டி-ஐ உற்பத்தி செய்யக்கூடியது, இது நம் உடலில் சூரிய ஒளி பட்டால்தான் சாத்தியம். எனவே எந்த வகைப் புற்றுநோய் வருவதையும் தவிர்க்க சூரிய ஒளி நம் தோலில் படுமாறு இருத்தல் நலம், எனவே போய் சூரியக்குளியல் போடுங்கள்.

9. டைப் 2 வகை நீரிழிவு நோய் உண்டாகும் ஆபத்தைக் குறைக்கும்

தற்போது உலகில் நீரிழிவு நோய் மிகவும் பொதுவான ஒன்றாக கணப்படுகிறது, உலகில் கணிசமானவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இன்சுலின் உற்பத்தியில் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது, வைட்டமின் டி குறைபாடு இருப்பதால், இன்சுலின் எதிர்ப்பால் அவதியுற நேரும், அது டைப் 2 நீரிழிவு நோயை உண்டாக்கும். நம் தோல் அதிக வைட்டமின் டி-ஐ உற்பத்தி செய்ய, நாம் தினமும் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பது நல்லது.

10. நம் மனநிலையை மேம்படுத்துகிறது

நாம் பதற்றமோ அல்லது மன அழுத்தமோ கொண்டிருந்தால், அதைத் தவிர்த்து ஆசுவாசமடைய மிகச் சிறந்த வழிமுறை சூரியக்குளியல். நாம் சூரிய ஒளியில் நிற்கும் ஒவ்வொரு தடவையும் மனம் ஆசுவாசமடைவதையும் மன அழுத்தம் குறைவதையும் உணரலாம். எனவே சூரிய ஒளியில் நின்று அந்தச் சூரியன் மன அழுத்தத்தை உள்வாங்கிக்கொள்ள விட்டுவிடுவோம்.

11. உடல் பருமனைக் குறைக்க உதவும்

சூரிய ஒளி நம் மீது படுவதால் எவ்வாறு உடல் எடை குறையும் என்று கேள்வி எழலாம். முழுமை உணர்வு ஏற்படும் காரணத்தால், பசி மட்டுப்படும்போது எடை குறையும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், சூரிய ஒளி படுவதால், அதிக கலோரிகள் கரைக்கப்பட்டு, வெளிப்புற விளையாட்டுகள் விளையாட உங்களுக்கு உதவும். கோடைக்காலத்தில் எந்தளவு அதிகமாக வியர்க்கிறதோ அவ்வளவு அதிகமாக நமது ஆர்வமும் அதிகரிக்கும். கோடையில் அதிகமாக பசித்து நிறைய சாப்பிடக்கூடும், ஆனால், கடைசியில் நாம் நிறைய உடற்பயிற்சி செய்யத் தொடங்கிவிடுவோம், இதுவும் உடற்பயிற்சி செய்யும் ஒரு முறை இதனால் உடல் பருமன் குறையும்.  

12. எலும்புகளின் வலுவை அதிகரிக்கும்

வைட்டமின் டி-க்கான மிகப் பெரிய ஆதாரமாக சூரிய ஒளி கருதப்படுகிறது. இது நம் உடலில் கால்சியம் உண்டாக்க உதவுகிறது. அது நம் எலும்புகளை பலப்படுத்துகிறது. எனவே, தினமும் காலை மற்ற வேலைகளைத் தொடங்குவதற்கு முன் போய் சூரிய ஒளியில் நில்லுங்கள். இது நம் எலும்புகளை வலுவாக்கிக்கொள்வதற்கான ஒரு இயற்கை வழிமுறை.

13. கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

வைட்டமின் டி-க்கான மிகப் பெரிய ஆதாரமாக சூரிய ஒளி கருதப்படுகிறது மேலும் கண் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. இதற்கு நாம் செய்ய வேண்டியது தினமும் காலை சூரிய ஒளி படுமாறு நிற்க வேண்டும் அவ்வளவுதான், அது நமக்கு நன்மை பயக்கும். அதற்காக வெறும் கண்ணால் சூரியனை பார்க்க வேண்டியதில்லை. அவ்வாறு செய்தால், கண் பார்வை பறிபோகலாம், எனவே சூரிய ஒளியில் போய் நின்றால் அது தோலில் பட்டு தோல், வைட்டமின் டி-ஐ உற்பத்தி செய்யும், அதன் மூலம் பார்வை வலுப்பெறும்.

14. மன அழுத்தத்தை எதிர்த்து போராடும்

சூரிய ஒளியின் கீழ் நாம் நிற்கும்போது அது நம் மனதில் இனிமையான தாக்கத்தை ஏற்படுத்தி, நம்மை அமைதியாக, ஆசுவாசமாக வைத்திக்கும். பழங்காலத்தில், நாம் கோபமாக இருக்கும்போது, சூரிய ஒளியில் நின்றால் அது நம் கோபத்தை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இருந்து வந்தது ஆனால் அவை அனைத்தும் கட்டுக்கதைகளே. அலுவலகத்தில் அன்று மனச்சோர்வு  ஏற்படக்கூடும் என்று நினைத்தால், ஒரு 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் போய் நின்று பாருங்கள், அப்போது உங்கள் மன அழுத்த அளவு குறைவதை உணரலாம். காலை நேர சூரியக்குளியல் நம்மை ஆற்றலுடனும், ஆசுவாசத்துடனும், புத்துணர்வுடனும் உணரச் செய்யும், எனவே, நாம் தினமும் 15 நிமிடங்கள் சூரியக்குளியல் போட்டு பதற்றமின்றி இருக்கலாமே?

15.  பருவகால பாதிப்புக் கோளாறுகளை எதிர்த்து போராடும்

பருவகால பாதிப்பு கோளாறுகள் என்பன பொதுவாக பருவகால மாறுபாடுகளால் உண்டாகும் மன அழுத்தம் போன்றவை. சூரியஒளி போதுமான அளவு இல்லாமல் போனால், நம் செரோடோனின் அளவுகள் குறையும், இதனால், எஸ்.ஏ.டி. எனப்படும் பருவகால பாதிப்பு கோளாறு நிலவரம் ஏற்படும். எனவே சூரிய ஒளி இருக்கும்போது வெளியே போவதை உறுதி செய்வதால், நாம் ஆசுவாசமாகவும் அமைதியாகவும் உணரலாம்.

அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகள்

பல ஆண்டு காலமாக சூரிய ஒளி தோலில் படுமாறு இருப்பது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது, ஆனால், இது குறித்து அதிகரித்து வரும் ஆராய்ச்சிகளால் கண்ணோட்டங்கள் மாறி வருகின்றன. நீண்ட நேரம் சூரிய ஒளி படுமாறு இருப்பதால், நிறைய ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும், ஆனால், இதைச் செய்ய ஒரு முறை உள்ளது. இது தொடர்பாக நமது சந்தேகங்களைப் போக்க சில கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் வழங்கப்பட்டுள்ளன.  

 1. வைட்டமின் டி பெற நான் எவ்வளவு நேரம் சூரிய ஒளியில் நிற்க வேண்டும்?

காலை நேர சூரிய ஒளியில் நீங்கள் குறைந்தபட்சம் ஒரு 15 நிமிடங்கள் இருக்க வேண்டும். இது உங்கள் தோல் வைட்டமின் டி-ஐ உற்பத்தி செய்ய உதவும் இது நமக்கு பல்வேறு வழிகளிலும் உதவும். நீண்ட நேரம் சூரிய ஒளி படுமாறு இல்லாததை உறுதி செய்துகொள்ளவும் இது பல தோல் தொடர்பான பிரச்சினைகளை உண்டாக்கும்.

 1. சூரிய ஒளி பெறுவதற்கான மிகச் சிறந்த வழிமுறை எது?

சூரிய ஒளியைப் பெறுவதற்கான சிறந்த நேரம் சூரிய உதயத்தின்போதுதான், இது மேற்சொன்ன அத்தனை வகைகளிலும் பலன் பெற உதவும். ஆனால், நீங்கள் வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே இருப்பதை, அதற்கு மேல் ஆகாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இது நம் தோல் வைட்டமின் – டி உற்பத்தை செய்வதற்கு உதவும், இது நம் எலும்புகளுக்கு வலுவூட்டி, நல்ல பார்வைத் திறன் பெற உதவும். சூரியக்குளியலின் மிகச் சிறந்த பலன்களைப் பெற மிகச் சிறந்த நேரம் காலைநேரம்தான்.

சூரிய ஒளியில் ஏராளமான ஆரோக்கிய நலன்கள் உள்ளன. ஆனால், 15 நிமிடங்களுக்கு மேல் சூரியக்குளியல் கூடாது. சூரிய ஒளியால் தோல் நிறம் மாறுவது நல்லதாக இருந்தாலும்கூட, உங்கள் தோல் பாதிப்படைந்துள்ளதையும்கூட இது குறிக்கலாம். காலை நேர சூரியக் குளியலே சிறந்ததாகக் கருதப்படுகிறது, காரணம் பெரும்பாலும் சூரிய ஒளியின் நன்மைகள் அப்போதுதான் கிடைக்கும், மேலும் புற ஊதாக் கதிர்களும் அந்தளவு வலுவாக இருக்காது. எனவே, தினமும் காலை 15 நிமிட சூரியக்குளியல் பெற்று ஆரோக்கியமாவும், ஆற்றலுடமும் திகழ்வோம்.  

தலை முடி காக்கும் பூண்டின் மகத்துவம்

பூண்டு என்பது நம் உணவுகளில் பற்பல ஆண்டுகளாக உள்ள மூலிகை. ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த மூலிகையை, ருசிக்காகவும் அதன் மருத்துவ குணத்திற்காகவும் நாம் பயன்படுத்தி வருகிறோம். இப்போது, பல மருத்துவர்கள் உணவில் பூண்டு சேர்க்க வேண்டும் என்று சொல்வதுடன் அதை மாத்திரையாகவும் கொடுக்கிறார்கள். காரணம், இதயம், ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து, வயிற்றுப் பிரச்சனை, மாரடைப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து பூண்டு நம்மைப் பாதுகாக்கிறது.

Garlic Health Benefits

பூண்டு குறிப்பிடத்தக்க மருத்துவ குணங்கள் நிறைந்தது. அதைப் பற்றி பார்ப்பதற்கு முன்பு, இந்த மூலிகை குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்:

 • விளைவிக்கப்படுவதில் ஏறத்தாழ 90% பூண்டு கலிஃபோர்னியாவில் இருந்து வருகிறது.
 • கொசுவை விரட்டுவதில் பூண்டு முக்கியமான பங்கு வகிக்கிறது.
 • ஜலதோஷம் மற்றும் இருமலுக்கும் பூண்டைப் பயன்படுத்துவார்கள்.
 • பாக்டீரியா மற்றும் ஃபங்கல் தொற்றுகளில் இருந்தும் பூண்டு நம்மைக் காக்கிறது.
 • மாதவிடாய்ப் பிரச்சனைகள் மற்றும் ரத்தத்தில் அளவுகடந்து கொழுப்புச் சத்து ஆகியவற்றையும் பூண்டு கட்டுப்படுத்துகிறது.
 • புற்றுநோய்க்கு எதிரான எதிர்ப்புசக்தியைக் கொடுக்கிறது.
 • காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, வயிற்று வலி, சைனஸ் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த வீட்டுமருந்து.
 • முடி உதிர்வதற்கு நல்ல மருந்து.
 • ஆங்கிலத்தில் பூண்டின் அறிவியல் பெயர் அல்லியம் சாட்டிவம் (Allium Sativum)

பூண்டில் இருக்கும் மருத்துவ குணங்கள்

 • செலீனியம்: நம் செல்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை சீர்செய்ய ஒரு வகையான புரதச் சத்து தேவை. அந்தப் புரதத்தை உருவாக்க நம் செல்களுக்கு செலீனியம் தேவை.
 • வைட்டமின் சி: எலும்பு, தோல், நரம்புகள் போன்றவற்றிலுள்ள திசுக்கள் வளர்ச்சியடைய வைட்டமின் சி மிக மிக அவசியம்.
 • வைட்டமின் பி6: நரம்பு மண்டலத்திற்கு மிகவும் முக்கியம்.
 • நார்ச்சத்து: சாப்பிட்டு வெகுநேரம் பசியில்லாமல் இருப்பதற்கும், ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்தைக் கட்டுப்படுத்தவும் நார்ச்சத்து மிகவும் அவசியம்.
 • மாங்கனீஸ்: நம் மூளை சாதாரணமாக வேலை செய்ய மிகவும் தேவையான பொருள். நம் நரம்பு மண்டலம் சாதாரணமாக இயங்கவும், உடலிலுள்ள என்ஸைம்கள் சீராக இருப்பதற்கும் நம் உடலில் 20 மில்லிகிராம் மாங்கனீஸ் இருக்க வேண்டியது கட்டாயம்.

பூண்டு செய்யும் நன்மைகள் 

1. இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது

தினமும் நம் உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வது எந்த வகையிலான இதயக் கோளாறுகளையும் தடுக்கிறது. உணவில் ஏதோ ஒரு வகையில் தினமும் பூண்டைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும் அல்லிஸின் போன்ற ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் பூண்டில் அதிகமாக இருக்கிறது.

2. புற்றுநோயில் இருந்து பாதுகாக்கிறது

மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய், ப்ராஸ்டேட் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களை எதிர்த்துப் போராடுகிறது. நம் உடலில் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதன் மூலம், பல நோய்களில் இருந்தும் நம்மைக் காக்கிறது.

3. பாக்டீரியா தொற்றுகளைத் தடுக்கிறது

ஃபங்கஸ், பாக்டீரிய பிரச்சனைகளில் இருந்து நம் உடலைக் காக்கிறது. குறிப்பாக, பற்கள் தொடர்பான பிரச்சனைக்கு பூண்டு வைத்து வாயைக் கொப்பளித்தால் பற்களில் உள்ள பாக்டீரியாக்களை அழித்துவிட முடியும்.

4. ஜலதோஷம் மற்றும் காய்ச்சல்

ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் இருந்தால் ஒரு பல் பூண்டை எடுத்து அதை கஷாயத்திலோ, தேநீரிலோ கலந்து குடித்தால் போதும்! உடனடி நிவாரணம் நிச்சயம். சூப்பாக அல்லது ரசமாகவோ கூட வைத்துச் சாப்பிடலாம்.

5. ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது

ரத்தத்தில் அதிகமான நச்சுப் பொருள் இருப்பவர்கள் தினமும் பூண்டு சாப்பிடுவது ரத்தத்தைச் சுத்திகரிக்க உதவுகிறது. மேலும், முகத்தையும் பொலிவாக்குகிறது. சுடுதண்ணீரில் இரு பற்கள் பூண்டைப் போட்டுக் குடித்துவிட்டு, நாள் முழுவதும் தண்ணீர் குடித்துக் கொண்டே இருந்தால் போதும்; உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

6. ஆண்டி ஏஜிங் பண்புகள் உள்ளன

முகத்தைப் பொலிவாகவும், சுருக்கமில்லாமல் வைப்பது மட்டுமல்லாமல், திசுக்கள் வேகமாக வயதானது போல ஆவதையும் இது தடுக்கிறது. மேலும், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளைத் தவிர்த்து அமைதியான மனநிலையைக் கொடுக்கிறது.

அனைத்து விதமான முடிப்பிரச்சனைகளுக்கும் அருமருந்து

 • முடி உதிர்வதைத் தடுக்க, இளம் சூடான தேங்காய் எண்ணெயில் பூண்டை அரைத்துக் கலந்து அதைத் தலையில் மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து குளித்துவிட வேண்டும்.
 • நல்ல பளபளப்பான, கறுநிற கூந்தலிக்கு, சிறிது இஞ்சி மற்றும் பூண்டை அரைத்து அதை சிறிது எண்ணெயில் கலந்து சூடு செய்து, அந்தக் கலவை பொந்நிறமானதும், அடுப்பை அணைத்து விட வேண்டும். அது ஆறியதும், அந்தக் கலவையை வெளியே எடுத்துவிட்டு எண்ணெயை மட்டும் தலையில் தேய்த்து, அரை மணி நேரம் கழிந்த பின்பு குளித்து விடலாம்.
 • பொடுகுத் தொல்லைக்கு, சிறிது பூண்டுப் பொடியை எலுமிச்சையுடன் கலந்து தலையில் மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
 • பேன் பிரச்சனைக்கு, மூன்று பல் பூண்டை அரைத்து அத்துடன் எலுமிச்சை கலந்து தலையில் மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து குளித்துவிட்டால் போதும்.

சருமப் பிரச்சனைகளுக்கும் பூண்டுதான்

 • முகப்பரு வராமல் தடுக்கிறது. காரணம், பூண்டில் இருக்கும் அல்லிஸின் என்ற பொருள் பாக்டீரியாவை அழித்து முகப்பரு ஏற்படாமல் தடுக்கிறது.
 • சோரியாஸிஸ் பிரச்சனை இருப்பவர்கள் பூண்டை நசுக்கி சுடுதண்ணீரில் கலந்து அதில் குளித்தால், அப்பிரச்சனை நீங்கும்.
 • ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் போக வைக்க, பூண்டை அரைத்து அதை அடுப்பில் சூடாக்க வேண்டும். அதில் எண்ணெய் பிரிந்து வந்ததும் ஆற வைத்து, எண்ணெயை மட்டும் எடுத்து ஸ்ட்ரெட்ச் மார்க்ஸில் தடவினால் போதும். தினமும் இரு முறை தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் நல்லது.

பூண்டு மிகவும் நல்ல மருத்துவ மூலிகை. அதற்காக அளவுகடந்து சாப்பிட்டுவிடக் கூடாது. அப்படிச் செய்தால், வாயில் அதிகமான பூண்டு வாசம், வாய் மற்றும் வயிற்றில் எரிச்சல், வாயுத்தொல்லை, வயிற்றுப் போக்கு மற்றும் வாந்திகூட ஏற்படலாம். பூண்டு உங்களுக்கு ஒவ்வாமல் போனால், மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுப் பிறகு பயன்படுத்தவும். பூண்டை சமைத்துச் சாப்பிடுவதைவிடப் பச்சையாகச் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. சாலட் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடுங்கள். காலை, இரவு என்று எப்போது வேண்டுமானாலும் அளவுடன் பூண்டைச் சேர்த்துக்கொள்ளலாம். இரவு பூண்டு சாப்பிடுவதால் தூக்கம் நன்றாகவும் வரும். எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற அளவுதான் முக்கியம்.

வீட்டிலேயே கர்ப்பப் பர்சோதனை செய்து கொள்ள 10 வழிகள்

வீட்டிலேயே கர்ப்பப் பர்சோதனை

தாய்மை அடைவது என்பது பெண்ணின் வாழ்க்கையில் ஆனந்தமான தருணமாகும். ஆனால், இதற்கான பாதை நிச்சயமற்றது மற்றும் கடினமாந்து. இந்த நீண்ட பயணத்தின் துவக்கத்தில் கர்ப்ப சோதனை செய்து கொள்வதும் தான். கர்ப்ப சோதனை மேற்கொள்ளும் போது, முடிவு தொடர்பான கவலை உங்களை களைப்படையச்செய்யலாம். மேலும், கர்ப்ப சோதனையை, டாக்டர் ஆய்வு கூடத்தில் மேற்கொள்வதைவிட தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வதையே நீங்கள் விரும்பலாம்.

வீட்டிலேயே கர்ப்ப சோதனை செய்து கொள்ள முயற்சிக்கும் போது, மருந்து கடையில் அதற்கான சாதனங்களை நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். ஆனால், இவற்றின் முடிவுகள் அத்தனை துல்லியமானவை அல்ல என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே, நீங்கள் டாக்டர் ஆய்வு கூடத்தில் சோதனை செய்து கொள்ள வேண்டும் அல்லது வீட்டில் இயற்கையான சோதனைகளை நாட வேண்டும். கடந்த காலங்களில், நம் பாட்டிமார்கள், பாரம்பரிய முறையில், இயற்கை பொருட்களை கொண்டு இதை செய்வார்கள். இது செயல்திறன் மிக்கது மற்றும் பாதுகாப்பானதாகவும் இருந்திருக்கிறது.

இதை மனதில் கொண்டு, வீட்டிலே தனிப்பட்ட முறையில் நீங்களே செய்து பார்க்க கூடிய கர்ப்ப சோதனைகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

இயற்கை கர்ப்ப சோதனையின் பலன்கள்

வெகு சிலர் தான் வீட்டிலேயே கர்ப்ப சோதனை செய்து கொள்ள விரும்புகின்றனர். ஆனால், இதற்கு தயக்கம் காட்டுபவர்கள் தவற விடக்கூடிய பலன்கள் இதோ:

 • திட்டமிடாத கர்ப்பத்தை எதிர்நோக்கிய நிலையில், மற்றவர்களுக்கு இது தெரிய வேண்டாம் என நினைக்கும் போது இந்த முறை ஏற்றது.  
 • கர்ப்ப சோதனையை பைசல் செய்வது எளிதல்ல; ஆனால்,இயற்கையான பொருட்களை பயன்படுத்தும் போது இந்த சிக்கல் இல்லை.
 • இதில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் உங்கள் சமையலறையில் இருப்பவை தான்.
 • பார்மசிக்கு பதில் உங்கள் வீட்டிலேயே வசதியாக செய்து கொள்ளலாம்.
 • இயற்கை கர்ப்ப சோதனை செலவு குறைந்தவை.
 • இதில் பயன்படுத்தப்படும் இயற்கை பொருட்கள் கெட்டுப்போகும் தன்மை கொண்டவை அல்ல என்பதால், காலாவதியாவது பற்றி கவலை வேண்டாம்.  

கர்ப்பப் பரிசோதனை செய்முறை

பெண்கள் கருவுரும்போது, அதாவது கரு, கர்ப்ப பை சுவற்றில் ஒட்டிக்கொண்டு, தொப்புள் கொடி உண்டாகி, ஹியூமன் கோரியோனிக் கோனடோடிரோபின் (எசிசிஜி ) ஹார்மோனை உற்பத்தி செய்யத்துவங்கும் போது,இந்த ஹார்மோன் இரத்த ஓட்டம் மற்றும் சிறுநீரில் கலக்கிறது. சிறுநீரில் எசிஜி இருப்பதை கண்டறிய, ஆண்டிபாடிகள் கொண்டு பரிசோதனை செய்யப்படுகிறது.

கர்ப்ப சோதனையை எப்போது செய்துகொள்வது என நீங்கள் கேட்கலாம். கர்ப்ப காலத்தின் ஆரம்ப சில வாரங்களில், ஹார்மோன் சுரப்பது அதிகரித்து, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை இரு மடங்காகிறது. கர்ப்ப காலத்தின் ஆரம்ப காலத்தில் சோதனை செய்து கொள்ளும் போது கண்டறிவது கடினம். எனவே, மாதவிலக்கைத் தவறவிட்ட பின், ஒரு நாள் கழித்து மேற்கொள்ளலாம்.

சோதனையில் நீங்கள் கர்ப்பமாகவில்லை என வந்தால், ஒவ்வொரு பெண்ணும் மாதத்தின் வேறு வேறு காலத்தில் மாதவிலக்கு சுழற்சி பெறுவதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். உங்களுக்கு சீரற்ற மாதவிலக்கு சுழற்சி இருந்தால், நீங்கள் மாதவிலக்கு நாளைத் தவறாகக் கணக்கிட்டிருக்கலாம். இதனால் முடிவு வேறு விதமாக அமையவும் வாய்ப்பிருக்கிறது. 

கர்ப்பப் பரிசோதனை முடிவின் துல்லியத்திற்கான வழிகள்  

 • சிறுநீர் மாதிரியைச் சேகரிக்க, சுத்தமான பாட்டிலை பயன்படுத்தவும்.  
 • நாளின் முதல் சிறுநீரைப் பயன்படுத்தவும். அதில் அதிக அளவு எச்சிஜி உள்ளது. அது குறைவாக இருந்தால் முடிவு மாறுபடலாம்.
 • போதுமான சிறுநீர் சேகரிக்கப்படுவதை உறுதி செய்யவும். அது குறைவாக இருந்தாலும், முடிவு மாறுபடலாம்.
 • சோதனை முடித்தவுடன் வினையாக்கம் நடைபெறக் காத்திருக்கவும். இதற்கு 10 நிமிடங்கள் ஆகலாம்.
 • துல்லியமான முடிவு கிடைக்கவில்லை எனில், மீண்டும் ஒரு முயன்று பார்க்கவும்.

10 கர்ப்பப் பரிசோதனைகள்

வீட்டிலேயே கர்ப்ப சோதனை செய்து கொள்வது எப்படி எனும் கேள்வி இப்போது உங்கள் மனதில் எழுந்திருக்கலாம். வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே கர்ப்பத்தை கண்டறிவதற்கான வழிகள் இதோ:  

1. உப்பு சுய கர்ப்பப் பரிசோதனை

எல்லா சமையலறையிலும் உப்பு தவறாமல் இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், காலையில் சிறுநீர் மாதிரி எடுத்து, அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.

செயல்முறை சாதகமான அறிகுறி எதிர்மறை அறிகுறி
கண்ணாடி பாட்டிலில் சிறுநீர் மாதிரி சேர்த்து அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து 3 நிமிடங்கள் காத்திருக்கவும்.   நீங்கள் கர்ப்பமாக இருந்தால், கொழ கொழப்பான வெள்ளை கட்டிகள் உண்டாகி இருப்பதை பார்க்கலாம்.   சிறுநீர் மற்றும் உப்பு இடையே எந்த எதிர்வினையும் ஏற்படவில்லை எனில் நீங்கள் கர்ப்பமாகவில்லை என பொருள்.  

2. சர்க்கை கர்ப்பப் பரிசோதனை

சர்க்கரை, வீட்டில் நீங்கள் எப்போதும் வைத்திருக்கும் பொருள். இதன் காரணமாகவே இந்த சோதனை மிகவும் எளிதானது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், சிறுநீர் மாதிரி சேகரித்து, அதில் கொஞ்சம் சர்க்கரை சேர்க்க வேண்டும்.

செயல்முறை சாதகமான அறுகுறி எதிர்மறை அறிகுறி
பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து அதில் சிறுநீரை ஊற்றவும். சிறுநீரில் உள்ள எச்சிஜி, எளிதாக சர்க்கரையை சிறுநீரில கரைய விடாது. சர்க்கரை கட்டியாக சேர்வதை பார்த்தால், நீங்கள் கர்ப்பம் என கொள்ளலாம்.   சிறுநீரில் சர்க்கரை உடனடியாக கலந்துவிட்டால் நீங்கள் கர்ப்பமாக இல்லை என கொள்ளலாம்.

3. பற்பசை கர்ப்பப் பரிசோதனை

நம்முடைய பாட்டிமார்கள் காலத்தில் பற்பசை எளிதாகக் கிடைக்கவில்லை என்பதால், இந்தப் பரிசோதனை வீட்டிலேயே செய்யக்கூடிய சோதனைகள் பட்டியலில் இப்போது சேர்ந்திருக்கிறது. இந்த பரிசோதனையில் துல்லியமான முடிவுக்கு நீங்கள் வெள்ளை பற்பசை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வண்ண பற்பசையில் உள்ள கூடுதல் ரசாயனங்கள் முடிவை பாதிக்கலாம். ஒரு தூய்மையான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அதில் காலையில் சேகரித்த சிறுநீர் மற்றும் இரண்டு ஸ்பூன் பற்பசையை சேர்க்கவும்.  

செயல்முறை சாதகமான அறிகுறி எதிர்மறை அறிகுறி
ஒரு பாத்திரத்தில், சிறுநீர் மற்றும் இரண்டு ஸ்பூன் பற்பசையைக் கலக்கவும்.   பற்பசை நீலமாகவும், நுரையாகவும் மாறினால் நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்கள். பற்பசை, சிறுநீருடன் வினை செய்யாவிட்டால், நீங்கள் கரப்பாமக இல்லை என பொருள்.

குறிப்பு: இந்தச் சோதனை செயல்திறன் மிக்கது என்றாலும், பற்பசையுடன் சேர்க்க வேண்டிய சிறுநீர் அளவு மற்றும் எவ்வளவு நேரம் தேவை என்பது சரியாக தெரியாது என்பதால் இந்த முறை அத்தனை உகந்தது இல்லை.

4. சோப் கர்ப்பப் பரிசோதனை

இது மிகவும் எளிதானது, வீட்டிலேயே எளிதாக மேற்கொள்ளலாம். சோப் மட்டும் தான் தேவை. எந்த வகை சோப்பாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதோடு பெரிய பாத்திரம் மற்றும் சிறுநீர் மாதிரி தேவை.

செயல்முறை சாதகமான அறிகுறி எதிர்மறை அறிகுறி
அகலமான பாத்திரத்தில் சோப்பை வைத்து, அதில் இரண்டு ஸ்பூன் சிறுநீரை ஊற்றவும்.   சோப் எதிர்வினை செய்து, குமிழ்கள் மற்றும் நுரையை உருவாக்கினால் நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்கள்.   எந்த எதிர்வினையும் இல்லை எனில், நீங்கள் கர்ப்பமாக இல்லை எனக் கொள்ளலாம்.

5. ஷாம்பு கர்ப்பப் பரிசோதனை

இதுவும் சோப் மற்றும் பற்பசை சோதனை போல எளிதானது. எந்த ஷாம்புவையும் பயன்படுத்தலாம். இதற்காக வேறு எந்த சாதனமும் தேவையில்லை. உங்களுக்கு தேவை எல்லாம் தண்ணீர், ஷாம்பு, காலையில் சேகரித்த சிறுநீர் மற்றும் தூய்மையான பாத்திரம் தான்.

செயல்முறை சாதகமான அறிகுறி எதிர்மறை அறிகுறி
பாத்திரத்தில் இரண்டு சொட்டு ஷாம்பு மற்றும் தண்ணீரை கலக்கவும். நுரை வராமல் இருக்கச்செய்து, சிறுநீர் சேர்த்து காத்திருக்கவும். ஷாம்பு எதிர்வினை செய்து, குமிழ் மற்றும் நுரை வந்தால், நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்கள். எந்த எதிர்வினையும் இல்லை எனில், நீங்கள் கர்ப்பமாக இல்லை என கொள்ளலாம்.

குறிப்பு: ஷாம்பு மற்றும் தண்ணீரை கலக்கும் போது கவனம் தேவை. நுரை வராத அளவு மெல்ல கலக்கவும். ஏனெனில் இது சோதனை முடிவை பாதிக்கும்.  

6. டெட்டால் கர்ப்பப் பரிசோதனை

டெட்டால் பெரும்பாலான இந்திய இல்லங்களில் இருப்பது. இதை நாம் பல விதங்களில் பயன்படுத்துகிறோம். இதை கர்ப்ப சோதனைக்கும் பயன்படுத்தலாம் தெரியுமா? ஒரு கண்ணாடி பாட்டில், ஒரு ஸ்பூன் டெட்டால், காலையில் எடுத்த சிறுநீர் மாதிரி தேவை.

செயல்முறை சாதகமான அறிகுறி எதிர்மறை அறிகுறி
ஒரு ஸ்பூன் டெட்டாலை மூன்று பங்கு சிறுநீருடம் கலக்கவும். 1:3 விகிதத்தில் இருக்க வேண்டும். 5 முதல் 7 நிமிடம் காத்திருக்கவும். உங்கள் சிறுநீர் தனியே பிரிந்து, டெட்டால் மீது படர்ந்தால், நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்கள்.   சிறுநீர் மற்றும் டெட்டால் கலந்து, தனியே படரவில்லை எனில், நீங்கள் கர்ப்பமாகவில்லை என பொருள்.

7. வினிகர் கர்ப்பப் பரிசோதனை

வினிகர், உணவுப் பொருட்களுக்கு நறுமணம் சேர்ப்பதோடு, நீங்களே செய்து கொள்ளக்கூடிய கர்ப்ப சோதனையிலும் முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த சோதனைக்காக, கடைகளில் கிடைக்கும் வெள்ளை வினிகரை நீங்கள் பயன்படுத்தலாம். மேலும், தூய்மையான பாட்டில் மற்றும் காலையின் முதல் சிறுநீர் மாதிரி தேவை. the two.

செயல்முறை சாதகமான அறிகுறி எதிர்மறை அறிகுறி
தூய்மையான கண்ணாடி பாட்டிலுல் வினிகர் எடுத்துக்கொண்டு, அதில் மெல்ல சிறுநீர் மாதிரியை சேர்க்கவும்.   கர்ப்பம் எனில்,இந்த கலைவையின் நிறம் மாறுவதை பார்க்கலாம்.    கலைவையில் எந்த எதிர்வினையும் இல்லை எனில் நீங்கள் கர்ப்பம் இல்லை என பொருள்

8. பிளீச்சிங் பவுடர் கர்ப்பப் பரிசோதனை

எளிய முறையில், விரைவாக முடிவு தெரிய வேண்டும் எனில், பிளீச்சிங் பவுடர் ஏற்றது. இந்த சோதனைக்கு, பிளீச்சிங் பவுடர், தூய கண்ணாடி பாட்டில், காலையின் முதல் சிறுநீர் மாதிரி தேவை.

செயல்முறை சாதகமான அறிகுறி எதிர்மறை அறிகுறி
கண்ணாடி பாட்டிலில் பிளீச்சிங் பவுடர் போட்டு, அதன் மீது சிறுநீர் மாதிரியை ஊற்றவும்.   இரண்டும் கலந்ததும், குமிழ்கள் மற்றும் நுரை போன்றவை உண்டானால், நீங்கள் கர்ப்பம் என பொருள்.    குமிழ்கள், நுரை வரவில்லை எனில், கர்ப்பம் ஆகவில்லை என பொருள்.

குறிப்பு:  இந்த வினையின் போது உண்டாக கூடிய புகையை சுவாசிக்க வேண்டாம். அது நச்சுத்தன்மை கொண்டது. எனவே பாதுகாப்பான தொலைவில் வைத்திருக்கவும்.  

9. பேக்கிங் சோடா கர்ப்பப் பரிசோதனை

சமையலறையில் பேக்கி சோடாவை பலவற்றுக்காக பயன்படுத்துகிறோம். அதே போல, கர்ப்பம் அறியும் சோதனையில் பயன்படுத்தலாம்.  

செயல்முறை சாதகமான அறிகுறி எதிர்மறையான அறிகுறி
கோப்பையில், பேக்கிங் சோடா சேர்த்து, சிறுநீர் மாதிரியை சேர்க்கவும்.   இரண்டும் கால்ந்து குமிழ்கள், மற்றும் நுரை உண்டானால், நீங்கள் கர்ப்பம் என பொருள்.   எந்த எதிர்வினையும், இல்லாமல் கலைவை அடியில் தங்கினால், கர்ப்பம் இல்லை என பொருள்.

10. கோதுமை & பார்லி கர்ப்பப் பரிசோதனை

கோதுமை மற்றும் பார்லி, ஒவ்வொரு இந்தியரின் உணவு அமைப்பிலும் இடம்பெறுவது. இவற்றை, கர்ப்பம் கண்டறியும் சோதனையிலும் பயன்படுத்தலாம் என்பது தெரியுமா? இரண்டின் விதைகளுமே, தண்ணீரைவிட கர்ப்பமான பெண் சிறுநீரில் சிக்கிரம் முளை விடுகின்றன. இந்த சோதனைக்கு, கொஞ்சம் பார்லி, கோதுமை, தூய்மையான கோப்பை மற்றும் சிறுநீர் மாதிரி தேவை.

செய்முறை சாதகமான அறிகுறி எதிர்மறை அறிகுறி
ஒரு கோப்பையில், சிறுநீர் மாதிரி எடுத்து, அதில் பார்லி மற்றும் கோதுமை விதைகளை போடவும். இரண்டு நாட்கள் காத்திருக்கவும். இரண்டு நாட்களில் விதைகள் முளைத்தால் நீங்கள் கர்ப்பமாக இருக்க வேண்டும்.   விதைகள் முளைக்கவில்லை எனில், நீங்கள் கர்ப்பம் இல்லை.

முடிவுரை

தனிப்பட்ட முறையில், கர்ப்பமாகி இருப்பதை தனிப்பட்ட முறையில் கண்டறிய விரும்பும் பெண்களால் மேற்கொண்ட சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இந்த சோதனைகள் துல்லியமான பலனை அளிக்காமல் போகும் தருணங்களும் உண்டு என்பதை உணர வேண்டும். இது போன்ற சூழல்களில், ஒன்றுக்கு மேற்பட்ட சோதனைகளை மேற்கொள்ளலாம். எதுவும் பயன் அளிக்கவில்லை எனில், ஆய்வுக்கூடத்தில் இரத்தப் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த சோதனை கர்ப்பத்தை உறுதி செய்வதோடு, அதன் காலத்தையும் தெரிவிக்கும்.  

பின்ட்ரெஸ்ட்டில் சேர்

இதைப் பகிர்

இந்த இடுகையை உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!